மாதத்தில் ஒரு முறை நம்முடைய முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்வதற்கு உகந்த நாளாக திகழ்வதுதான் அமாவாசை. இந்த அமாவாசை தினத்தில் முன்னோர்களை நாம் வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்திருப்போம். ஒவ்வொரு மாதத்திலும் இந்த அமாவாசை வரும் அதிலும் குறிப்பாக சில மாதங்களில் வரக்கூடிய அமாவாசைக்கு அதிக அளவில் பலன்கள் இருக்கும் அப்படிப்பட்ட அமாவாசையில் மிகவும் முக்கியமான ஒரு அமாவாசையாக தான் ஆடி அமாவாசை திகழ்கிறது. அன்றைய நாளில் நாம் முன்னோர்களை வழிபாடு செய்வதோடு மட்டுமல்லாமல் இன்னும் சில செயல்களை செய்தோம் என்றால் நம்மிடம் இருக்கக்கூடிய வறுமை முற்றிலும் நீங்கி சுபிட்சமான வாழ்க்கையை வாழ முடியும். அந்த செயல்கள் என்ன என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
சுபிட்சத்தை ஏற்பட வழிபாடு
பொதுவாகவே அமாவாசை என்றதும் முன்னோர்களுக்காக விரதம் இருந்து வழிபாடு செய்வது, காகத்திற்கு சாப்பாடு வைப்பது, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது, குலதெய்வ வழிபாட்டில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபடும் வழக்கத்தை வைத்திருப்போம்.. பெற்றோர்கள் இல்லாதவர்கள் பெற்றோர்களை நினைத்து விரதம் இருந்து அன்றைய நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். இதை செய்வதன் மூலம் முன்னோர்களால் ஏற்பட்ட சாபமும் தோஷமும் நீங்கி முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதோடு இன்னும் சில காரியங்களையும் நாம் சேர்த்து செய்யும் பொழுது நம் வாழ்க்கையில் வறுமை என்ற பேச்சுக்கு இடமில்லாமல் போய்விடும்.
இந்த முறை ஆடி அமாவாசை என்பது ஜூலை மாதம் 24 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று வருகிறது. ஆடி அமாவாசை தினத்தன்று நம்மால் இயன்ற பழங்கள், கீரைகள், வெல்லம், அரிசி போன்றவற்றை பசு மாட்டிற்கு நம்முடைய கையால் தானம் தர வேண்டும். பிறகு பசு மாட்டின் பின்புறத்தை தொட்டு வணங்க வேண்டும். அடுத்ததாக நம்மால் இயலும் பட்சத்தில் இரண்டு பிராமினர்களுக்கு வஸ்திர தானம் செய்ய வேண்டும். அதாவது ஆடை தானம் செய்ய வேண்டும். வேஷ்டி, துண்டு போன்று தங்களால் இயன்றதை வாங்கித் தருவதன் மூலம் வறுமை நீங்கும்.
அன்றைய தினத்தில் மாலை 6:00 மணியிலிருந்து 8:00 மணி வரை வீட்டு பூஜை அறையில் குலதெய்வத்திற்காக தனியாக ஒரு தீபத்தை ஏற்ற வேண்டும். இந்த தீபம் 2 மணி நேரம் எரிய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு வீட்டு நிலை வாசலுக்கு வெளியே வடக்கு அல்லது கிழக்கு திசை பார்த்தவாறு ஒரு தீபத்தை ஏற்றி வைக்க வேண்டும். இந்த தீபம் ஒரு மணி நேரம் இருந்தால் போதும். இப்படி செய்வதன் மூலமும் நமக்கு பண வசியம் என்பது உண்டாகும். மேலும் அன்றைய தினத்தில் நம்மால் இயன்ற அளவிற்கு பிறருக்கு அன்னதானம் வழங்குவது நம்முடைய கர்ம வினைகளை நீக்கி வறுமையின் பிடியிலிருந்து வெளியே வரச் செய்வதோடு பண வசியத்தையும் ஏற்படுத்தும்.
இதையும் படிக்கலாமே: கடன் தீர்க்கும் 11 ரூபாய் பரிகாரம்
ஆடி அமாவாசை தினத்தன்று இந்த செயல்களில் ஏதாவது ஒரு செயலை மட்டும் செய்தாலே போதும் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய வறுமை நீங்குவதோடு சுபிட்சமான வாழ்க்கையை நம்மால் வாழ முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.