- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வெற்றிலை பாக்கு

தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வெற்றிலை பாக்கு

- Advertisement -

ஒரு தொழிலை தொடங்குவது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது. பணம் அதிக அளவில் இருப்பவர்கள் ஆக இருந்தாலும் சரி பணமே இல்லாதவர்களாக இருந்தாலும் சரி ஒரு தொழிலை தொடங்குவதற்கு முன்பாக ஒரு முறைக்கு பலமுறை யோசித்து அதில் முன் அனுபவம் பெற்று தொடங்கினால்தான் அந்தத் தொழில் வெற்றிகரமான தொழிலாக அமையும். அப்படி தொடங்கிய தொழில் வெற்றிகரமாக நடைபெறுவதற்கும் ஒரு நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு முன்னேறுவதற்கும் கடினமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அப்படி கடினமாக உழைத்தாலும் தொழிலில் இருக்கக்கூடிய போட்டி பொறாமையின் காரணமாக முன்னேற்றம் தடைப்பட்டு இருக்கிறது என்றாலோ உழைத்த உழைப்புக்கேற்ற லாபம் கிடைக்கவில்லை என்றாலோ வெற்றிலை பாக்கை வைத்து எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

தொழில் வளர்ச்சி மேம்பட வெற்றிலை பாக்கு

எந்த ஒரு வழிபாட்டை செய்வதாக இருந்தாலும் அந்த வழிபாட்டில் கண்டிப்பான முறையில் இடம் பிடிக்கக் கூடிய ஒன்றாக திகழ்வதுதான் வெற்றிலையும் பாக்கும். அதிலும் கலிப்பாக்கு என்று கூறக்கூடிய கொட்டை பாக்கிற்கு அதிக அளவில் பலன் இருக்கிறது. கடைகளில் விற்கக்கூடிய சாதாரண பாக்கைவிட இந்த பாக்கை வைத்து நாம் வழிபாடு செய்தோம் என்றால் நல்ல பலனை நம்மால் பெற முடியும். மேலும் நமக்கு இருக்கக்கூடிய தடைகளை விலக்கி வெற்றிகளை தருவதற்கு இது நமக்கு மிகப்பெரும் துணை புரிகிறது என்றே கூறலாம். அதனால் தான் தடைப்பட்ட காரியங்கள் நடைபெறுவதற்காக வெற்றிலையை வைத்து பலவிதமான பரிகாரங்களை நாம் செய்கிறோம்.

- Advertisement -

முதலில் தொழிலை தொடங்கும் பொழுது பூஜை செய்யும் வழக்கத்தை வைத்திருப்போம் அல்லவா? அவ்வாறு பூஜை செய்யும் பொழுது கண்டிப்பான முறையில் அதில் வெற்றிலையும் பாக்கும் இருக்கும். இதில் 5 வெற்றிலையை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் மேல் நான்கு கொட்டைப்பாக்கை வைத்து “குருவடி சரணம் திருவடி சரணம்” என்னும் மந்திரத்தை ஒன்பது முறை கூறி பூஜை செய்யும் இடத்தில் வைக்க வேண்டும். இப்படி வைப்பதன் மூலம் அந்த பூஜை சிறப்பாக நடைபெற்று நாம் தொடங்கக்கூடிய தொழில் தெய்வங்களின் அருளால் சிறப்பாக நடைபெறும்.

இந்த வழிபாட்டை தினமும் நாம் தொழில் ஸ்தாபனத்திற்கு சென்றதும் கையில் வெற்றிலை கொட்டை பாக்கை அதே எண்ணிக்கையில் வைத்துக்கொண்டு அதே மந்திரத்தை ஒன்பது முறை கூறி தொழில் ஸ்தாபனத்தில் இருக்கக்கூடிய சுவாமி படத்திற்கு முன்பாக வைத்து விட்டு தொழிலை ஆரம்பித்தோம் என்றால் அன்றைய நாளில் தொழிலில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் விலகி வெற்றிக்கு மேல் வெற்றி கிடைப்பதோடு எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சினைகளும் தீரும். நல்ல முன்னேற்றம் தொழிலில் ஏற்படும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: யோகம் நிறைந்த வாழ்க்கையைத் தரும் பெருமாள் வழிபாடு

பல லட்சங்கள், கோடிகள் போட்டு தொழிலை ஆரம்பிப்பவர்கள் தினமும் பத்து ரூபாய் செலவு செய்து வெற்றிலை பாக்கை வைத்து இப்படி வழிபாடு செய்வதோடு கடின உழைப்பிலும் ஈடுபட்டால் அவர்களின் தொழில் மேலும் மேலும் முன்னேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்