- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilஎண்ணெய் பசை நீங்கி பொலிவான சருமத்தை பெற

எண்ணெய் பசை நீங்கி பொலிவான சருமத்தை பெற

- Advertisement -

நாம் ஒவ்வொருவரும் அன்றாடம் நம்முடைய வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய சில பிரச்சினைகளில் நம்முடைய சருமம் சார்ந்த பிரச்சினைகளும் ஒன்றாகவே திகழ்கிறது. பலருக்கும் கண்களை சுற்றி கருவளையம் இருக்கும், அதனால் கண்கள் எப்பொழுதும் சோர்வாகவே இருக்கும். இன்னும் சிலருக்கு முகத்தில் மங்கு கரும்புள்ளி போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கும். இன்னும் சிலருக்கு அதிகப்படியாக முகத்தில் எண்ணெய் பசை ஏற்பட்டு எப்பொழுதும் முகம் ஒருவித சோர்வுடன் இருப்பது போலவே தென்படும். இந்த பிரச்சனைகளில் எது இருந்தாலும் சரி அல்லது இவை அனைத்துமே இருந்தாலும் சரி இந்த ஒரு எளிமையான பேஸ் பேக்கை பயன்படுத்தினால் போதும் அனைத்து பிரச்சினைகளிலிருந்தும் விடுபட முடியும். அந்த பேஸ் பேக்கை எப்படி தயார் செய்வது என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

முகத்தில் எண்ணெய் பசை நீங்க

நம்முடைய முகத்தில் எந்த விதமான மாசு மருக்களும் இன்றி கரும்புள்ளிகளும், கருவளையமும் இன்றி பொலிவான இளமையான சருமத்தை பெறுவதற்காக நாம் பல விதமான அழகு சாதன பொருட்களை பயன்படுத்தி இருப்போம். ஒவ்வொரு அழகு சாதன பொருளுக்கும் ஒவ்வொரு விதமான பக்க விளைவுகள் உண்டாகும். அதனால் பக்க விளைவுகளே இல்லாமல் மிகவும் எளிமையாக நம்முடைய கைப்பட நாம் தயார் செய்யக்கூடிய ஒரு ஃபேஸ் பேக் நம்முடைய முகத்தில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சனைகளையும் நீக்கி பொலிவான சருமத்தை தரும்.

- Advertisement -

இந்த ஃபேஸ் பேக்கை தயார் செய்வதற்கு முதலில் இந்த ஃபேஸ் பேக்கிற்குரிய பொடியை நாம் தயார் செய்ய வேண்டும். இந்த பொடியை தயார் செய்வதற்கு நான்கு பொருட்கள் வேண்டும். முதலாவதாக முல்தானி மெட்டி, இரண்டாவதாக ரோஜா இதழ் மொக்குகள், மூன்றாவதாக ஆவாரம் பூ. இவை மூன்றையும் சரிசமமான அளவு வாங்கிக் கொள்ளுங்கள். முல்தானி மெட்டி பொடியாகவே இருக்கும். அதை ஒருமுறை சலித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ரோஜா இதழ் மொக்குகளை நன்றாக காய வைத்து அதையும் மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து சலித்து வைத்துக் கொள்ளுங்கள். ஆவாரம் பூக்களையும் வாங்கி நிழல் காய்ச்சலில் காய வைத்து பொடி செய்து அதையும் சலித்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இவை மூன்றையும் ஒன்றாக கலந்து கொண்டு இவற்றில் கால் பங்கு அளவிற்கு வெள்ளை உளுந்தை எடுத்து அதையும் நன்றாக பொடி செய்து சலித்து இதனுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது ஃபேஸ்பேக் பொடி தயாராகிவிட்டது. இந்த பொடியில் இருந்து நம்முடைய முகத்திற்கு தேவையான அளவு பொடியை எடுத்து அதில் பன்னீர் அல்லது மோர் இவை இரண்டில் ஏதாவது ஒன்றை ஊற்றி நன்றாக கலக்க வேண்டும். கலந்த இந்த ஃபேஸ் பேக்கை முகம் முழுவதும் தடவி 20 நிமிடம் வைத்திருந்து பிறகு குளிந்த நீரினால் முகத்தை கழுவ வேண்டும். இப்படி நாம் தொடர்ச்சியாக செய்வதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளும் நீங்குவதோடு முகம் பொலிவாகவும் அழகாகவும் காட்சியளிக்கும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: முடி அடர்த்தியாக வளர பேக்

இயற்கையாக கிடைக்கக்கூடிய பொருட்களை உபயோகப்படுத்தி நாமே ஃபேஸ் பேக் செய்வதன் மூலம் நம்முடைய சருமத்தை மேலும் அழகாக பராமரித்துக் கொள்ளலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்