- Advertisement -

பணக்கார யோகம் பெற

- Advertisement -

சனி கொடுக்க யார் தடுப்பார் என்ற பழமொழியும், சனியைப் போல கொடுப்பாரும் இல்லை கெடுப்பாறும் இல்லை என்னும் பழமொழியும் சனீஸ்வர பகவானின் அருளை நமக்கு தெள்ளத் தெளிவாக விளக்கக்கூடிய அற்புதமான பழமொழியாக திகழ்கிறது. இந்த பழமொழிக்கு ஏற்றவாறு தான் சனீஸ்வர பகவானால் நமக்கு பலவிதமான பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அவரின் அருள் நமக்கு கிடைத்துவிட்டால் நம்மை போல வாழ்க்கையில் முன்னேறக்கூடிய ஒரு நபர் யாராகவும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த ஒரு கிரகமாக தான் சனீஸ்வர பகவான் திகழ்கிறார். ஒருவருடைய வாழ்க்கையே தலைகீழாக மாற்றக்கூடிய அற்புதமான சக்திவாய்ந்த கிரகமாக சனீஸ்வர பகவான் திகழ்கிறார். அப்படிப்பட்ட சனீஸ்வர பகவானின் அருளை பெறுவதற்கும் பணக்கார யோகத்தை பெறுவதற்கும் செய்ய வேண்டிய ஒரு தானத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பணக்கார யோகம் பெற

நம்முடைய வாழ்க்கையில் நடக்கக்கூடிய ஒவ்வொரு நிகழ்வும் நவகிரகங்களின் ஆதிக்கத்தின் பெயரிலேயே நடக்கிறது என்பது நம் அனைவருக்குமே தெரியும். அதனால்தான் பலரும் ஜாதகத்தை நம்பி ஒவ்வொரு காரியத்தையும் செய்கிறார்கள். நம்முடைய ஜாதகத்தில் இருக்கக்கூடிய நவகிரகங்களின் அமைப்பிற்கு ஏற்றார் போல் தான் நம்முடைய வாழ்க்கையில் பிரச்சினைகள் உண்டாகும் என்று கூட கூறலாம். அதிலும் முக்கியமாக சனீஸ்வர பகவானால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை என்று கூட கூறலாம். இப்படிப்பட்ட சனீஸ்வர பகவானின் அருள் ஒருவருக்கு கிடைத்துவிட்டால் அவருடைய வாழ்க்கையில் இதுவரை அனுபவித்த கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி நன்மைகளை உண்டாகும்.

- Advertisement -

சனீஸ்வர பகவானின் அருளை பெறுவதற்கு பலவிதமான வழிபாட்டு முறைகளும் வழிமுறைகளும் பின்பற்றப்பட்டு வருகின்றன. அப்படிப்பட்ட வழிமுறைகளில் ஒரு எளிமையான வழிமுறையாக தான் இந்த வழிமுறை திகழ்கிறது. இந்த வழிமுறையை பரம ஏழையாக இருப்பவர்கள் தங்களால் இயன்ற அளவு செய்ய கண்டிப்பான முறையில் அவர்களுடைய வாழ்க்கையில் பல வரவு என்பது அதிகரித்து பணக்கார யோகம் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும் என்று கூறப்படுகிறது.

தங்களால் இயன்ற அளவு பச்சரிசியையும் கருப்பு உளுந்தையும் சனிக்கிழமை அன்று வாங்கி யாராவது ஒருவருக்காவது தானம் தர வேண்டும். முழு மனதோடு எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் சனிக்கிழமையில் இந்த தானத்தை யார் ஒருவர் செய்கிறார்களோ அவர்களுக்கு சனீஸ்வர பகவானால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் படிப்படியாக நீங்குவதோடு சனீஸ்வர பகவானின் அருளை பெறுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். சனீஸ்வர பகவானின் அருளை பெற்றுவிட்டால் நம்மிடம் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் முக்கியமாக பணம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் தீருவதோடு பணவரவு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: அண்ணனின் சீர் தரும் பலன்

இந்த இரண்டு பொருட்களை நம்மால் முடிந்த அளவு பிறருக்கு ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் தானம் தருவதன் மூலம் சனீஸ்வர பகவானின் அருளை பெறுவதோடு பணக்கார யோகத்தையும் பெற முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்