- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதுன்பங்களை தீர்க்கும் ஆடி கிருத்திகை வழிபாடு

துன்பங்களை தீர்க்கும் ஆடி கிருத்திகை வழிபாடு

- Advertisement -

இன்றைய காலத்தில் முருகப்பெருமானை வழிபாடு செய்யாத நபர்களை இருக்க முடியாது என்று கூறும் அளவிற்கு முருகனின் அருளை பலரும் பரிபூரணமாக பெறுகிறார்கள். அப்படிப்பட்ட முருக பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாக திகழ்வதுதான் கிருத்திகை நட்சத்திரம். அதிலும் அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரக்கூடிய கிருத்திகை நட்சத்திரம் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. அன்றைய நாளில் முருகப்பெருமானை வழிபாடு செய்வதோடு அம்மனையும் சேர்த்து வழிபாடு செய்ய இருவரின் அருளால் நம் வாழ்வில் இருக்கக்கூடிய அனைத்து விதமான துன்பங்களும் தீரும். அந்த வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஆடி கிருத்திகை வழிபாடு

ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி சனிக்கிழமை அஷ்டமி திதியுடன் சேர்ந்து வரக்கூடிய கிருத்திகை நட்சத்திரம். இன்றைய நாள் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. இது ஆடி மாதத்தின் கடைசி நாள், ஆடி மாதத்தின் கிருத்திகை, கிருஷ்ணர் அவதரித்த கோகுலாஷ்டமி, மூன்று திதிகள் வருவதால் இந்த நாளை முத்திரை நாள் என்றும் கூறுவது உண்டு. இவ்வளவு சிறப்பு மிகுந்த நாளில் நாம் செய்யக்கூடிய ஒரு எளிமையான வழிபாடு நம் வாழ்வில் இருக்கக்கூடிய துன்பங்களை தீர்க்கும்.

- Advertisement -

ஆடி கிருத்திகை நாள் அன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே எழுந்து குளித்து விட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விரதம் இருக்க வேண்டும். மாலை வரை விரதத்தை மேற்கொள்ள வேண்டும். விரதத்தில் இருப்பவர்கள் திட உணவுகளை தவிர்த்து விட்டு திரவ உணவுகளை உண்பது என்பது மிகவும் சிறப்பு. தங்களுடைய உடல் சூழ்நிலை காரணமாக விரதம் இருக்க இயலவில்லை என்பவர்கள் வழிபாட்டை மட்டும் மேற்கொள்ளலாம்.

ஆடி கிருத்திகை நாளன்று வழிபாடு செய்வதற்கு உகந்த நேரமாக காலை 10:45 மணியிலிருந்து 11:45 மாலை 5 30 மணியிலிருந்து 9:30 மணி வரையும் திகழ்கிறது. இந்த நேரத்தில் ஏதாவது ஒரு நேரத்தை தேர்வு செய்து வழிபாடு செய்வது என்பது சிறப்பு. குறிப்பாக மாலை நேர வழிபாடு கூடுதல் பலனை தரும். வீட்டில் முருகனின் வேல் அல்லது சிலை இருக்கும் பட்சத்தில் அதற்கு பால் மற்றும் தேன் அபிஷேகம் செய்ய வேண்டும். படம் மட்டும்தான் இருக்கிறது என்றால் படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்து சிவப்பு நிற மலர்களால் அவருக்கு அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

நெய்வேத்தியமாக பால் பாயாசம், தேன், திணை மாவு போன்ற தங்களால் எதை செய்ய முடியுமோ அதை செய்து வைக்க வேண்டும். முருகப்பெருமானுக்கு முன்பாக சற்கோண கோலம் போட்டுக் கொள்ளுங்கள். அதில் ஆறு அகல் விளக்குகளையும் அந்த சற்கோணத்திற்கு நடுவில் ஒரு அகல் விளக்கு என்று மொத்தம் ஏழு அகல் விளக்கில் நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபம் கிழக்கு திசை பார்த்தவாறு இருக்க வேண்டும். இவ்வாறு தீபத்தை ஏற்றி முடித்த பிறகு “ஓம் சரவணபவ ஓம்” என்னும் மந்திரத்தை 308 முறை கூறி வாசனை மிகுந்த மலர்களால் முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு “ஓம் சக்தி ஓம்” என்னும் மந்திரத்தை 21 முறை கூறி அம்பாளின் படத்திற்கு வாசனை மிகுந்த மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம் போன்ற முருகப்பெருமானின் பாடல்களை பாடி வழிபாடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும். வழிப்பாட்டை நிறைவு செய்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம். இயன்றவர்கள் அருகில் இருக்கக்கூடிய முருகன் ஆலயத்திற்கு சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்யலாம்.

இதையும் படிக்கலாமே: ஏழையாவதற்கு 5 காரணங்கள்

அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் முருகனுக்கு உரிய கிருத்திகை நட்சத்திரம் வருகிறது என்பதால் இவர்கள் இருவரையும் ஒருசேர யார் ஒருவர் வழிபாடு செய்கிறார்களோ அவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய துன்பங்கள் அனைத்தும் தீரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்