நம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு காரியம் நிறைவேற வேண்டும் என்று எதிர்பார்ப்போம். அந்த காரியம் நிறைவேறுவதற்காக முயற்சிகளையும் செய்வோம். இருப்பினும் அந்த காரியத்தில் ஏதேனும் தடைகள் ஏற்பட்டு நடைபெறாமல் போய் இருக்கும். அந்த காரியத்தை வெற்றிகரமாக செய்வதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் செல்வ வளமும் அதிகரிக்கும் என்னும் பட்சத்தில் அந்த காரியத்தை எந்தவித தடைகளும் இல்லாமல் செய்வதற்கு உதவக்கூடிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
நினைத்த காரியம் நிறைவேற பரிகாரம்
எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் அந்த செயல் சிறப்பாக நடைபெற வேண்டும் என்று தெய்வத்தை வழிபாடு செய்யும் வழக்கம் நம்முடைய முன்னோர்கள் காலம் தொட்டில் இருந்து வருகிறது. அப்படி தெய்வத்தை வழிபாடு செய்வதோடு இந்த ஒரு எளிமையான பரிகாரத்தையும் நாம் சேர்த்து செய்தோம் என்றால், என்ன நடக்க வேண்டும் என்று நினைத்து வழிபாடு செய்கிறோமோ அது நடைபெறும். மேலும் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய செல்வ தடைகள் அனைத்தும் விலகும்.
இந்த பரிகாரத்தை என்றைக்கு வேண்டுமானாலும் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ஏதாவது ஒரு காரியம் நிறைவேற வேண்டும் என்றுதான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இந்த பரிகாரத்திற்கு இரண்டு பொருட்கள் தேவைப்படும். ஒன்று பிரியாணி இலை மற்றொன்று குங்குமம். கிழியாத நல்ல நிலையில் இருக்கக்கூடிய ஒரு பிரியாணி இலையை எடுத்துக் கொள்ளுங்கள். குங்குமத்தை ஒரு கிண்ணத்தில் போட்டு அதில் சிறிதளவு மட்டும் தண்ணீர் ஊற்றி நன்றாக குலைத்து ஒரு குச்சியை பயன்படுத்தி எந்த காரியம் நிறைவேற வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த காரியத்தை பிரியாணி இலையில் எழுத வேண்டும்.
எழுதிய இந்த பிரியாணி இலையை தங்களுடைய இஷ்ட தெய்வத்தின் படத்திற்கு முன்பாக வைத்து தினமும் வழிபாடு செய்ய வேண்டும். இப்படி தொடர்ச்சியாக 7 நாட்கள் வழிபாடு செய்து விட்டு ஏழாவது நாள் வழிபாட்டை நிறைவு செய்த பிறகு அந்த பிரியாணி இலையை ஒரு அகல் விளக்கில் வைத்து அதன் மேல் பச்சைக் கற்பூரத்தை வைத்து பிரியாணி இலையை எரிக்க வேண்டும். இதற்கு பச்சை கற்பூரத்தை தான் பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியாணி இலை முழுவதும் எரிந்த பிறகு அதன் சாம்பலை தண்ணீரில் கரைத்து வன்னி மரத்திற்கோ அல்லது துளசி செடிக்கோ ஊற்ற வேண்டும். இப்படி நாம் தொடர்ச்சியாக செய்வதன் மூலம் நினைத்த காரியத்தில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் விலகும். செல்வ வளம் பெருகும்.
இதையும் படிக்கலாமே: வாழ்க்கை வெற்றிப்பாதை நோக்கி செல்ல அமாவாசை வழிபாடு
நினைத்த காரியத்தில் இருக்கும் தடைகள் விலகுவதற்கும் செல்வ வளம் அதிகரிக்கவும் இந்த எளிமையான பரிகாரத்தை முழு நம்பிக்கையோடு செய்தால் போதும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.