- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவிநாயகரின் அருளைப் பெற மந்திர வழிபாடு

விநாயகரின் அருளைப் பெற மந்திர வழிபாடு

- Advertisement -

நவக்கிரகங்களுக்கு தலைவராக திகழக்கூடியவர் விநாயகர் பெருமான். மேலும் நாம் செய்யக்கூடிய எந்த ஒரு காரியமாக இருந்தாலும் அந்த காரியத்தில் வெற்றியை கொடுத்து நம்மை மகிழ்ச்சியுடன் வாழ வைக்க கூடியவராகவும் விநாயகப் பெருமான் திகழ்கிறார். யார் எந்த தெய்வத்தை வணங்கினாலும் அந்த தெய்வத்தை வணங்குவதற்கு முன்பாக விநாயகரை வணங்க வேண்டும். அப்படி விநாயகரை வணங்கினால் தான் நாம் வணங்கக்கூடிய மற்ற தெய்வத்தின் அருளை நம்மால் பெற முடியும். அப்படிப்பட்ட முழு முதற்கடவுளாக திகழக்கூடிய விநாயகப் பெருமானுக்குரிய விநாயக சதுர்த்தி அன்று எந்த மந்திரத்தை கூறி வழிபட்டால் விநாயகர் மனமகிழ்ந்து நாம் வேண்டிய வளத்தை தருவார் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

விநாயகரின் அருளைப் பெற வழிபாடு

எந்த ஒரு வழிப்பாட்டை செய்தாலும் அந்த வழிபாட்டின் மிகவும் முக்கியமான ஒரு பகுதியாக திகழ்வதுதான் அர்ச்சனை மற்றும் மந்திர உச்சாடல். மந்திரங்களை கூறி தெய்வத்திற்கு மலர்களாலோ அல்லது அந்த தெய்வத்திற்குரிய பொருட்களாலோ அர்ச்சனை செய்யும் பொழுது நமக்கு அளவில்லாத நன்மைகளும் நாம் வேண்டிய வரமும் நமக்கு கிடைக்கும். எப்படி அபிஷேகம் செய்யும்பொழுது தெய்வத்தின் மனம் குளிர்ந்து நம் வேண்டிய வரம் நமக்கு கிடைக்குமோ அதே போல் தான் அர்ச்சனை செய்யும் பொழுதும் நாம் வேண்டிய வரம் நமக்கு கிடைக்கும். அந்த வகையில் விநாயகர் சதுர்த்தி அன்று அனைவரும் விநாயகர் பெருமானுக்கு அர்ச்சனை செய்வோம். அவ்வாறு அர்ச்சனை செய்யும் பொழுது விநாயகர் சந்தோஷப்படக்கூடிய ஒரு மந்திரத்தை கூறினால் அது கூடுதல் சிறப்பை தரும்.

- Advertisement -

விநாயகருக்கு என்று பலவிதமான நாமங்கள் இருக்கின்றது. அதேபோல் நமக்கு வேண்டிய வரம் கிடைப்பதற்கும் நமக்கு தேவைப்படக்கூடிய விஷயங்கள் கிடைப்பதற்கும் ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒவ்வொரு வேண்டுதலுக்கும் ஒவ்வொரு வகையான மந்திர உச்சாடல்கள் என்பது இருக்கின்றன. இந்த மந்திர உச்சாடல்களை நம்முடைய தேவைக்கேற்றார் போல் கூறி விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதன் மூலமும் நாம் வேண்டிய வரம் நமக்கு கிடைக்கும். மேலும் விநாயகருக்கு பலவிதமான நாமங்கள் இருக்கின்றன. அந்த நாமங்களை நாம் கூறி வழிபாடு செய்வதும் நல்ல பலனைத் தரும். அந்த வகையில் விநாயகருக்கே உரித்தான விநாயகர் சந்தோஷப்படக்கூடிய ஒரு அற்புதமான திருநாமம் ஆக இருக்கக்கூடிய ஒரு மந்திரத்தை நாம் விநாயகர் சதுர்த்தி அன்று கூறி அர்ச்சனை செய்யும் பொழுது விநாயகர் மனம் மகிழ்ந்து நமக்கு அனைத்து விதமான நன்மைகளையும் அருள்வார்.

இந்த மந்திரத்தை விநாயகர் சதுர்த்தி அன்று இரவு 12 மணிக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் உச்சரிக்கலாம். இந்த மந்திரத்தை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் கிடையாது. அர்ச்சனை செய்தால் கூடுதல் பலன் கிடைக்கும் என்பதே உண்மை. மேலும் இந்த மந்திரத்தை யார் வேண்டுமானாலும் கூறலாம். பெண்கள் தீட்டு சமயமாக இருந்தாலும் இந்த மந்திரத்தை கூறலாம் அதில் எந்தவித தடைகளும் கிடையாது. பூஜையறையில் அமர்ந்துதான் கூற வேண்டும் என்ற நிபந்தனையும் இல்லை. தீபம் ஏற்ற வேண்டும் என்பதும் கிடையாது. முழு மனதோடு விநாயகர் எப்பொழுதும் என்னுடனே இருக்க வேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டு இந்த மந்திரத்தை குறைந்தபட்சம் 15 நிமிடம் மட்டும் கூறினால் போதும். விநாயகர் மனம் மகிழ்ந்து நம்முடன் எப்பொழுதும் இருப்பார் நாம் வேண்டிய வரத்தை தருவார்.

- Advertisement -

மந்திரம்

” ஓம் லம்போதராய நமஹ “

இதையும் படிக்கலாமே: தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்க விநாயகர் மந்திரம்

விநாயகப் பெருமானுக்கு மிகவும் பிடித்தமான இந்த மந்திரத்தை முழுமனதோடு யார் ஒருவர் விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகரை நினைத்து கூறுகிறார்களோ அவர்களுக்கு விநாயகர் வேண்டிய வரத்தை தருவார் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்