- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசெல்வங்களை சேர்க்கும் மகா திருவோண வழிபாடு

செல்வங்களை சேர்க்கும் மகா திருவோண வழிபாடு

- Advertisement -

ஆவணி மாதத்தில் வரக்கூடிய திருவோண நட்சத்திர நாளில் தான் பெருமாள் வாமன அவதாரம் எடுத்து மூன்றே மூன்று அடிகளில் மூன்று உலகங்களையும் அளந்தார் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட இந்த வாமன அவதாரத்தை தான் உலகளந்த பெருமாள் என்று கூட கூறுவார்கள். இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த ஆவணி மாத திருவோண நட்சத்திரம் வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வருவது இன்னும் கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. திருவோண நட்சத்திரம் பெருமாளுக்கு உகந்தது என்றால் வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்தது. இப்படி பெருமாள் மற்றும் மகாலட்சுமி இருவருக்கும் உகந்த நாளான அன்றைய நாளில் நாம் செய்ய வேண்டிய ஒரு எளிமையான வழிபாடு நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான செல்வ தடைகளையும் நீக்கும். அந்த வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

மகா திருவோண வழிபாடு

நம்முடைய அண்டை மாநிலமான கேரளத்தில் இந்த ஓணம் திருவிழா என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. மகாபலி சக்கரவர்த்தி போல் வேடம் அணிந்து சிறப்பான முறையில் திருவிழாக்களை நடத்துவார்கள். பூக்களால் கோலம் போட்டு அவரை வரவேற்கும் விதமாகவும் பல விதமான ஏற்பாடுகளை செய்வார்கள். உலகில் வாழக்கூடிய அனைத்து கேரளாவை சேர்ந்த மக்களும் தங்களுடைய இல்லத்தில் பூக்கோலம் போட்டு மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் விதமாக பலவிதமான இனிப்பு பொருட்களை வைத்து வழிபாடு செய்வார்கள். அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த நாளில் நாம் செய்யக்கூடிய ஒரு மகாலட்சுமி வழிபாட்டை பற்றி இப்பொழுது பார்ப்போம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்யலாம் அல்லது காலையில் வரக்கூடிய சுக்கிரஹோரையான 6 மணியிலிருந்து 7 மணிக்குள் செய்யலாம் அல்லது மாலை 6:00 மணிக்கு மேல் செய்யலாம். அதிலும் குறிப்பாக இரவு நேரத்தில் வரக்கூடிய சுக்கிர ஹோரயான 8 மணியிலிருந்து 9 மணிக்குள் செய்யலாம். முடிந்த அளவிற்கு பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்ய முயற்சி செய்யுங்கள்.

வெள்ளிக்கிழமை அன்று பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே எழுந்து பெண்கள் நல்லெண்ணெய் வைத்தோ அல்லது தயிரை உச்சந்தலையில் வைத்து குளிக்க வேண்டும். தயிரை வெள்ளிக்கிழமை அன்று தேய்த்து குளிப்பதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய பண தோஷமும் செல்வதோஷமும் நீங்கும். சுக்கிரனின் அருள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இவ்வாறு குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய அனைத்து தெய்வங்களுக்கும் மலர்களை சாற்றி எப்பொழுதும் போல் தீபம் ஏற்றி வழிபாடு செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இதோடு மகாலட்சுமி தாயாருக்கு முன்பாக ஒரு சிறிய தட்டை வைத்து அந்த தட்டு நிரம்ப கல்லுப்பை பரப்பி அதற்கு நடுவே ஒரு அகல் விளக்கை வைத்து பசு நெய் ஊற்றி தாமரை தண்டு திரி போட்டு வடக்கு திசை பார்த்தவாறு தீபம் ஏற்ற வேண்டும். தீபத்தை சுற்றி மலர்களால் அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். ஏதாவது ஒரு இனிப்பு பொருளை செய்து சுவாமிக்கு நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். பிறகு மகாலட்சுமி அஷ்டகம், கனகதாரா ஸ்தோத்திரம், பெருமாளுக்கு உரிய சுப்ரபாதம், விஷ்ணு சகஸ்ரநாமம் போன்றவற்றை பாராயணம் செய்ய வேண்டும்.

இவை எதுவுமே தெரியாது என்பவர்கள் “ஓம் நமோ நாராயணா” என்னும் மந்திரத்தையும் “ஓம் ஸ்ரீம் ஸ்ரீயை நமஹ” என்னும் மந்திரத்தையும் முழுமனதோடு 108 முறை கூறி பெருமாளுக்கு துளசியாலும், மகாலட்சுமிக்கு மல்லிகைப்பூவாழும் அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த முறையில் அர்ச்சனை செய்து முடித்துவிட்டு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்துவிட்டு நெய்வேத்தியமாக வைத்த இனிப்பை வீட்டில் இருக்கக்கூடிய அனைவரும் பகிர்ந்து உண்ண வேண்டும்.

- Advertisement -

எளிமையான இந்த வழிபாட்டை ஆவணி மாதத்தில் வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய திருவோண நட்சத்திர நாளில் செய்பவர்களுக்கு கண்டிப்பான முறையில் பெருமாள் மற்றும் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். இவர்களின் அருள் பரிபூரணமாக கிடைத்து விட்டால் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய செல்வம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீரும்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் சுபிட்சம் நிலவ மகாலட்சுமி வழிபாடு

சிறப்பு மிகுந்த இந்த நன்னாளில் கேரள மக்களோடு சேர்த்து நாமும் இந்த எளிமையான பூஜையை செய்து மகாவிஷ்ணு மற்றும் மகாலட்சுமியின் அருளை பரிபூரணமாக பெறுவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்