முப்பெரும் தேவர்களுள் ஒருவராக திகழக்கூடிய சிவபெருமானை வழிபாடு செய்வதற்குரிய அற்புதமான நாளாக தான் பிரதோஷம் வரக்கூடிய நாள் திகழ்கிறது. இந்த நாளில் நாம் சிவபெருமானை வழிபாடு செய்வதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய அனைத்து விதமான தோஷங்களும் கஷ்டங்களும், நீங்கும் என்று கூறப்படுகிறது. அதனால் தான் இதற்கு பிரதோஷம் என்றே பெயர் வந்ததாம். அதோடு மட்டுமல்லாமல் அந்த நாளில் அந்த நேரத்தில் அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு சென்று சிவபெருமானை வழிபாடு செய்யும்பொழுது சிவனின் அருளோடு தேவர்களின் அருளையும் நம்மால் பெற முடியும். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த வளர்பிறை பிரதோஷ நாளில் வீட்டில் எளிமையான முறையில் செய்ய வேண்டிய ஒரு வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
வளர்பிறை பிரதோஷம் வழிபாடு
தெய்வ வழிபாட்டிற்கு உகந்த கிழமைகளில் ஒன்றாக திகழ்வதுதான் வெள்ளிக்கிழமை. வெள்ளிக்கிழமை பெண் தெய்வ வழிபாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நாளாக கருதப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் அன்று சுக்கிர பகவானுக்குரிய தினமாக திகழ்கிறது. சிவபெருமானின் பக்தன் என்று கூட சுக்கிர பகவானை கூறலாம். அப்படிப்பட்ட சுக்கிர பகவானுக்குரிய கிழமையான வெள்ளிக்கிழமை அன்று பிரதோஷம் வருவது கூடுதல் சிறப்பு. மேலும் அன்றைய தினத்தில் திருவோண நட்சத்திரம் வருகிறது. திருவோணம் என்பது மகாவிஷ்ணுவிற்கு உகந்த நட்சத்திரம் என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆக செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி பெண் தெய்வ வழிபாட்டிற்கும், மகாவிஷ்ணுவின் வழிபாட்டிற்கும், சிவபெருமானின் வழிபாட்டிற்கும் உரிய நாளாக கருதப்படுகிறது.
இந்த நாளில் சிவபெருமானின் வழிபாட்டை நாம் செய்வதற்கு உகந்த நேரமாக திகழ்வது மாலை நான்கு முப்பது மணியிலிருந்து ஆறு மணிக்குள் வரக்கூடிய பிரதோஷ நேரம் ஆகும். இந்த நேரத்தில் வழிபாடு செய்ய இயலாதவர்கள் மாலை 6:00 மணியிலிருந்து 8:30 மணிக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் இந்த வழிபாட்டை செய்யலாம். இந்த வழிபாட்டை செய்பவர்கள் தங்களுடைய வீட்டில் சிவபெருமானின் ஸ்ரூபமாக இருக்கக்கூடிய லிங்கம், சிலை போன்றவற்றிற்கு பன்னீரால் அபிஷேகம் செய்ய வேண்டும். பிறகு அவருக்கு முன்பாக ஏதாவது இனிப்பு பொருளை நெய்வேத்தியமாக வைத்துவிட்டு நமசிவாய என்னும் பஞ்சாட்சர மந்திரத்திற்கு ஏற்றார் போல் ஐந்து அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு கிழக்கு திசை பார்த்தவாறு தீபம் ஏற்ற வேண்டும்.
இவ்வாறு ஏற்று முடித்த பிறகு “ஓம் சிவ சிவ சிவாய நம ஓம்” என்னும் மந்திரத்தை 111 முறை சிவபெருமானுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்தவாறு கூற வேண்டும். இதோடு மட்டுமல்லாமல் நந்தி பகவானின் 108 போற்றிகளை கூறி அருகம்புல்லால் அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே: செல்வங்களை சேர்க்கும் மகா திருவோண வழிபாடு
இந்த முறையில் வளர்பிறை வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய வளர்பிறை பிரதோஷ நாளில் சிவபெருமானையும் நந்தியம் பகவானையும் வழிபாடு செய்பவர்களுக்கு வளமான வாழ்க்கை அமையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.