- Advertisement -

வைபவ லட்சுமி வழிபாடு

- Advertisement -

நாம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு வேண்டுதல் என்பது இருக்கும். அவரவர்களுடைய வயதையும், சந்தர்ப்பத்தையும், சூழ்நிலையையும் பொறுத்து மாறுபடும். அப்படி ஒவ்வொருவருக்கும் இருக்கக்கூடிய நியாயமான வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று நினைப்பவர்கள் மகாலட்சுமி தாயாரை எளிமையான முறையில் வழிபாடு செய்து வேண்டிய வரத்தை பெறலாம். அப்படி நாம் வேண்டியவரத்தை தரக்கூடிய தெய்வமாக தான் வைபவ லட்சுமி திகழ்கிறார். பலவகையான லட்சுமிகள் இருக்கிறார்கள். அந்த லட்சுமிகளில் ஒரு லட்சுமியாகத்தான் வைபவ லட்சுமி திகழ்கிறார். வைபவம் என்றால் திருவிழா, கோலாக்கலம் என்று பொருள்படும். எப்படி ஒரு திருவிழாவில் அனைத்து விதமான பொருட்களும் கிடைக்குமோ எப்படி திருவிழா சமயத்தில் நாம் மகிழ்ச்சியாக இருப்போமோ அதேபோல் வைபவ லட்சுமி நாம் வழிபாடு செய்யும்பொழுது நாம் வேண்டிய எதுவாக இருந்தாலும் அது நமக்கு கிடைப்பதோடு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முடியும்.

அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த வைபவ லட்சுமியை கர்நாடகா மற்றும் ஆந்திராவை சேர்ந்த மக்கள் அதிக அளவில் வழிபாடு செய்வார்கள். தமிழ்நாட்டிலும் வழிபாடு செய்பவர்கள் இருந்தாலும் அந்த அளவிற்கு வைபவ லட்சுமி வழிபாடு பிரசித்தி பெற்றதாக திகழவில்லை. மிகவும் எளிமையான முறையில் நாமே நம்முடைய வீட்டில் தொடர்ச்சியாக 11 வாரங்கள் மகாலட்சுமி தாயாரை வைபவ லட்சுமி ஆக நினைத்து வழிபாடு செய்ய நாம் என்ன வரத்தை முன்வைத்த அந்த வழிபாட்டை செய்கிறோமோ அது விரைவில் நடைபெறும். அப்படிப்பட்ட ஒரு வைபவ லட்சுமி வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

வைபவ லட்சுமி வழிபாடு

இந்த வழிபாட்டை வெள்ளிக்கிழமை தான் செய்ய வேண்டும். தொடர்ச்சியாக 11 வெள்ளிக்கிழமைகள் செய்ய வேண்டும். பெண்களுக்கு நடுவில் வழிபாடு செய்ய இயலாத சூழ்நிலை வந்தால் அதை கணக்கில் எடுக்காமல் அடுத்த வாரம் மேற்கொள்ளலாம். வீட்டில் மகாலட்சுமி தாயாரின் படம் சிலை கண்டிப்பான முறையில் இருக்கும். நன்றாக சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். அவ்வாறு சுத்தம் செய்யும் போது பன்னீரை வைத்து சுத்தம் செய்வது கூடுதல் சிறப்பை தரும். பிறகு வெள்ளிக்கிழமை அன்று மாலையில் எப்பொழுதும் போல் வீட்டில் இருக்கக்கூடிய அனைத்து தீபங்களையும் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். வீடு முழுவதும் சாம்பிராணி தூபம் போட்டுக் கொள்ளுங்கள். மகாலட்சுமி தாயாருக்கு முன்பாக ஒரு அகல் விளக்கில் சுத்தமான நெய் ஊற்றி தாமரை தண்டு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். மகாலட்சுமி தாயாருக்கு ஏதாவது ஒரு இனிப்பு பொருளை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும்.

அடுத்ததாக மகாலட்சுமி தாயாருக்கு செண்பக மலர் ஒன்றே ஒன்றை மட்டுமாவது வைக்க வேண்டும். ஒருவேளை செண்பக மலர் கிடைக்கவில்லை என்னும் பட்சத்தில் அதிக வாசனை மிகுந்த மலராக பார்த்து சூட்ட வேண்டும். புத்தக கடைகளில் வைபவ லட்சுமி வழிபாடு என்று புத்தகம் விற்கும். அந்த புத்தகத்தை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இந்த வைபவ லட்சுமி புத்தகத்தில் மகாலட்சுமியை வழிபாடு செய்வதால் கிடைத்த பலன்களைப் பற்றி கதைகளாக இருக்கும். மகாலட்சுமிக்கு 108 போற்றிகளை கூறி குங்குமத்தால் அர்ச்சனை செய்துவிட்டு மகாலட்சுமி அஷ்டகத்தை பாராயணம் செய்ய வேண்டும். அடுத்ததாக அந்த வைபவ லட்சுமி வழிபாட்டு புத்தகத்தில் இருக்கக்கூடிய கதைகளில் ஒன்று அல்லது இரண்டு கதைகளை பூஜை அறையிலேயே அமர்ந்து படிக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். வழிப்பாட்டை நிறைவு செய்த பிறகு அருகில் இருக்கக்கூடிய மூன்று சுமங்கலி பெண்களுக்கு வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், மஞ்சள் கயிறு வைத்த தாம்பாளத்தை தரவேண்டும். தங்களுடைய வசதிக்கேற்றார் போல் தாம்பலத்தை கொடுத்துக் கொள்ளலாம். இப்படி தொடர்ச்சியாக 11 வாரங்கள் வைபவ லட்சுமியை மனதார நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். பதினோராவது வாரம் வீட்டிற்கு ஐந்து சுமங்கலி பெண்களை அழைத்து வந்து அவர்களுக்கு நெய்வேத்தியமாக வைத்த பிரசாதத்தை கொடுத்து தாம்பாளத்தையும் கொடுக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: ஆவணி நடராஜர் அபிஷேகம்

மகாலட்சுமி தாயாரை இந்த முறையில் வைபவ லட்சுமியாக பாவித்து வழிபாடு செய்பவர்களுக்கு 11 வாரங்கள் நிறைவடைவதற்குள் அவர்கள் வேண்டிய வரம் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் வந்து சேரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்