மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதி கிடைக்கும். சந்தோஷம் பிறக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேரவும் வாய்ப்புகள் உள்ளது. நீண்ட தூர பயணங்கள் நன்மையை தரும். சுப செல்வர்கள் ஏற்படும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சுகமான நாளாக இருக்கும். உங்களுடைய வேலையில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். தவறாக புரிந்து கொண்ட உறவுகள் உங்களை சரியாக புரிந்து கொள்வார்கள். குடும்ப பிரச்சினைகள் சரியாகும். இன்று விடுமுறை நாள் என்பதால் வேலையிலும் வியாபாரத்திலும் பெருசாக பிரச்சனைகள் வராது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று உழைப்பு உழைப்பு என்று இருப்பீர்கள். விடுமுறை நாள் என்று கூட பார்க்காமல் உங்களுடைய கடமைகளை சரியாக செய்வீர்கள். இதனால் நல்ல பலனையும் பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். வியாபாரத்தை விரிவுபடுத்த புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வெற்றி உங்கள் பக்கம் வரும்.
கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்தவரையில் இன்று கொஞ்சம் செலவுகள் அதிகரிக்கும். சுப செலவுகளாகத் தான் இருக்கும். வேலையில் கூடுதல் அக்கறையோடு செயல்படுவீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் கொஞ்சம் வேலை பளு அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இன்று போட்டி பொறாமையுடன் இருப்பீர்கள். உங்களுடைய வேலையை கவனிப்பதோடு மட்டுமல்லாமல் மற்றவர்களுடைய வாழ்க்கையை அலசி ஆராய்வதை ஒரு வேலையாக வைத்திருப்பீர்கள். இதனால் உங்கள் வேலை கெட்டுப் போகும். தேவையற்ற பிரச்சனைகள் வரும். இன்று அடுத்தவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைக்காமல் இருப்பது நல்லது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று இறக்க குணம் இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். நண்பர்கள் உறவுகளிடத்தில் நீண்ட நேரம் பேசி நேரத்தை செலவு செய்வீர்கள். மனநிம்மதி கிடைக்கும் நாள். கூடுமானவரை செலவை குறைத்துக் கொள்ளுங்கள். இன்று ஷாப்பிங்க்கு போகாமல் இருப்பது நல்லது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் சின்ன சின்ன ஏமாற்றம் வர வாய்ப்பு உள்ளது.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். வியாபாரத்தில் முன்னேற்றத்தை கொண்டு வாருங்கள். நீங்கள் நினைத்ததை விட இரட்டிப்பு லாபத்தை அடைவீர்கள். வேலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். இடமாற்றத்தோடு பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. எதிரி தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று நல்ல செய்தி உண்டு. நீண்ட நாள் எதிர்பார்த்து நடக்காத ஒரு விஷயம் இன்று நடக்கும். உங்கள் மனதை சந்தோஷப்படுத்தும். சுப காரியங்கள் வீட்டில் நடக்கும். சுப செலவுகளும் ஏற்படும். வேலையிலும் வியாபாரத்திலும் கவனத்தோடு நடந்து கொள்ளுங்கள். அனாவசியமாக அடுத்தவர்களை பற்றி குறை பேசுவதை மட்டும் குறைத்துக் கொள்ளுங்கள். மேலும் நல்லது நடக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். சேமிப்பை உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளுங்கள். செலவை குறைத்துக் கொள்ளுங்கள். கடவுளின் அருள் உங்களுக்கு உண்டு.
மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று தேவையற்ற மன பயம் ஏற்படும். பதட்டமான சூழ்நிலை நிலவும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். பேசுவதை குறைத்துக் கொள்ளுங்கள் முன் கோபம் வேண்டாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று அதிக எதிர்பார்ப்பு வைத்துக் கொள்ளாதீர்கள். சின்ன சின்ன ஏமாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். வாக்குவாதம் வேண்டாம். சண்டை சச்சரவுகள் வேண்டாம். இறைவழிபாடு செய்யுங்கள். உங்கள் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். நல்லது நடக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று மனக்கவலை கொஞ்சம் அதிகமாக இருக்கும். உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலையில் சின்ன சின்ன பின்னடைவுகள் உண்டாகும். சின்ன சோம்பேறி தனமும் இருக்கும். உணவு பழக்க வழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. உடற்பயிற்சி மேற்கொள்வது நன்மையை கொடுக்கும். மற்றபடி நிதிநிலைமை சீராக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும்.