விநாயகரை வழிபாடு செய்தால் விக்னங்கள் தீரும் என்பது நம்பிக்கை. அது இந்த ஜென்மத்திற்கு மட்டுமல்ல. நீங்கள் விநாயகரை இந்த ஜென்மத்தில் வழிபாடு செய்தால், அந்த புண்ணியம் ஈரேழு ஜென்மத்திற்கும் உங்களை தொடரும். இது நிதர்சனமான உண்மை. உங்களுடைய வழிபாடும் வேண்டுதலும் உண்மையாக இருக்கும் பட்சத்தில், விநாயகர் உங்களை ஏழேழு ஜென்மத்திற்கும் காத்து இரட்சிப்பார்.
நாளைய தினம் 10.9.2025 அன்று இந்த செப்டம்பர் மாதத்தின் சங்கடஹர சதுர்த்தி வரவிருக்கிறது. இந்த நாளில் நாம் செய்ய வேண்டிய வழிபாடு என்ன. விநாயகருக்கு ஏற்ற வேண்டிய தீபம் என்ன. சில ஆன்மீகம் சார்ந்த எளிய குறிப்புகளை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.
சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
10.9.2025 நாளைய தினம் புதன்கிழமை மாலை 6:44 மணிக்கு தான் சங்கடஹர சதுர்த்தி திதி பிறக்கிறது. இந்த திதியானது அடுத்த நாள் வியாழக்கிழமை மாலை 4 மணி வரை இருக்கிறது. மாலை நேர வழிபாடு தான் சங்கடஹர சதுர்த்தி திதிக்கு உகந்தது என்பதால், புதன்கிழமை மாலை நேரத்தில் விநாயகரை வழிபாடு செய்வது சிறப்பான பலனை கொடுக்கும். வியாழக்கிழமை காலையிலும் விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபடலாம் அதிலும் எந்த தவறும் இல்லை.
குறிப்பாக நாளைய தினம் புதன்கிழமை மாலை 7:00 மணியில் இருந்து 7:40க்குள் சுக்கிர ஹோரையும், ரேவதி நட்சத்திரமும் இணைந்து வந்திருக்கிறது. இந்த குறிப்பிட்ட 40 நிமிடத்தில் வீட்டின் அருகில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு சென்று 2 மண் அகல் விளக்குகளில் சுத்தமான தேங்காய் எண்ணெய் ஊற்றி, பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றி கிழக்கு நோக்கி வையுங்கள்.
தீபசுடர் கிழக்கு நோக்கி எறிய வேண்டும். அந்த விநாயகர் கோவிலிலேயே அமர்ந்து உங்களுடைய சங்கடங்களை பிள்ளையாரிடம் சொல்லுங்கள். இந்த சங்கடங்களை எல்லாம் தீர்த்து வையப்பா பிள்ளையாரப்பா என்று மனம் உருகி வேண்டிக்கொண்டு தோப்புக்கரணம் போட்டுக் கொள்ளுங்கள்.
விநாயகருக்கு உங்களால் முடிந்தால் அருகம்புல் மாலை கட்டி போடவும். இந்த குறிப்பிட்ட 40 நிமிடத்தில் விநாயகருக்கு தேங்காய் எண்ணெய் விளக்கு போட்டு நீங்கள் என்ன வேண்டுதல் வைத்தாலும் அது அடுத்த சங்கடஹர சதுர்த்திக்குள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
குறிப்பாக நாளைய தினம் உங்களுடைய பிள்ளைகளின் அறிவுத்திறன் உயர வேண்டும் என்பதற்காக வேண்டுதல் வைக்கலாம். அவர்களுடைய ஞாபக சக்தி அதிகரிக்க வேண்டும் என்பதற்காக வேண்டுதல் வைக்கலாம். புதன்கிழமை புத்தி காரகன் அல்லவா. இதேபோல நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை, தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்களும் நாளைய தினம் விநாயகரை வழிபாடு செய்வது அதி சிறப்பு வாய்ந்த பலனை கொடுக்கும்.
இதையும் படிக்கலாமே: கடன் பிரச்சினையை தீர்க்கும் ஐந்து ரூபாய் பரிகாரம்
உங்களால் முடிந்தால் நாளைய தினம் விநாயகருக்கு பச்சை நிற வஸ்திரம் வாங்கி தானம் கொடுப்பதும் சிறப்பு. குறிப்பாக இறுதியாக ஒரு விஷயம் விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைச்சிடுங்க. மேலே சொன்ன ஆன்மீக தகவல்கள் அனைவருக்கும் பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.