- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் பிரச்சினையை தீர்க்கும் சனிக்கிழமையோடு சேர்ந்து வரும் கரிநாள்

கடன் பிரச்சினையை தீர்க்கும் சனிக்கிழமையோடு சேர்ந்து வரும் கரிநாள்

- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்சினையையும் கஷ்டத்தையும் தரக்கூடியது பணம் தான். பணத்தால் கஷ்டங்கள் ஏற்படுகிறது என்பதால்தான் கடன் என்ற ஒன்றை நாம் வாங்குகிறோம். அந்த கடனை வாங்கிவிட்டு பிரச்சினையை இன்னும் பெரிதாக்கிக் கொள்கிறோம் என்பது நிதர்சனமான உண்மை. அப்படிப்பட்ட கடன் பிரச்சனையில் இருந்து வெளியே வருவதற்கு சில சூட்சமமான வழிபாட்டு முறைகளை நம் மேற்கொள்ளலாம். அந்த வகையில் கரிநாளோடு சேர்ந்து வரக்கூடிய சனிக்கிழமை அன்று செய்ய வேண்டிய ஒரு வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

கடன் பிரச்சினை தீர கரிநாள் வழிபாடு

பொதுவாகவே ஒரு சில குறிப்பிட்ட நாட்களில் வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதன் மூலம் கடன் விரைவில் அடையும் என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக தேய்பிறையில் எந்த ஒரு செயலை செய்தாலும் அது தேய்ந்து கொண்டே செல்லும் என்பதால் பெருமளவு கடன் பிரச்சினை தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் தேய்பிறையில் கடனை அடைக்க வேண்டும். அதேபோல் கரிநாள் என்பதும் சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுவது கிடையாது. அந்த நாளில் எந்தவித சுப செயல்களிலும் ஈடுபட மாட்டோம். அதனால் கரிநாளில் நாம் பணத்தை திருப்பி செலுத்தும் பொழுது கடன் விரைவில் அடையும். இதே போல் தான் சனிக்கிழமையும். சனிக்கிழமை என்பது சனீஸ்வர பகவானுக்கு உரிய கிழமை. சனீஸ்வர பகவானும் நம்முடைய கடன் பிரச்சினைக்குரிய ஒரு காரண கர்த்தாவாக திகழ்கிறார். அதனால் சனிக்கிழமையில் கடனை அடைப்பது அதுவும் சனிகோரையில் கடனை அடைப்பது விரைவில் கடன் பிரச்சினையில் இருந்து வெளியே வர உதவும்.

- Advertisement -

இவை அனைத்துமே ஒன்று சேர்ந்து வரக்கூடிய ஒரு அற்புதமான நாளாக தான் செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி திகழ்கிறது. இன்றைய தினத்தில் தேய்பிறை சஷ்டி வருகிறது. மேலும் கரிநாள் மற்றும் சனிக்கிழமை என்பதால் இந்த நாளில் நாம் கடன் தொடர்பான பிரச்சினை தீருவதற்குரிய வழிபாட்டையோ பரிகாரத்தையோ மேற்கொண்டோம் என்றால் கண்டிப்பான முறையில் கடன் பிரச்சனையிலிருந்து வெளியே வர முடியும். மேலும் இந்த நாளை பயன்படுத்தி கடனுக்குரிய வட்டியையோ அல்லது அசல் தொகையையோ அடைப்பதன் மூலம் இந்த பிரபஜமானது நமக்கு அந்த கடனை அடைப்பதற்குரிய பணவரவை கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

சனிக்கிழமை அன்று காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்து கொள்ளுங்கள். காலை 6:00 மணியிலிருந்து 7 மணிக்குள் வீட்டு பூஜை அறையில் தீபத்தை ஏற்றி வைத்து எப்பொழுதும் செய்யக்கூடிய வழிபாட்டை செய்து கொள்ளுங்கள். பிறகு யார் யாருக்கெல்லாம் கடன் பட்டு இருக்கிறோமோ அவர்கள் அனைவருக்கும் கடனுக்குரிய தொகையை திருப்பி செலுத்த வேண்டும். ஆன்லைன் பரிவர்த்தனை மூலமும் செய்யலாம். ஒருவேளை அப்படி செய்ய இயலாது என்பவர்கள் ஒவ்வொரு கடனுக்கும் தனித்தனியாக கவருக்குள் அந்த கடனுக்குரிய தொகையை எடுத்து வைக்கலாம். ஒரு சிறிய தொகையாக இருந்தாலும் பரவாயில்லை.

- Advertisement -

முதலில் பணத்தை நம்முடைய இரண்டு கைகளிலும் வைத்துக் கொண்டு “ஓம் ரிங் வசி வசி” என்று 54 முறை கூற வேண்டும். பிறகு 21 முறை இதே மந்திரத்தை எழுத வேண்டும். இவ்வாறு செய்து முடித்த பிறகு நம்முடைய இடது கையின் சுக்கிரமேட்டு பகுதியில் முடிவிலியை (infinity symbol) போட வேண்டும். பிறகு அந்த பணத்தை எடுத்து கவரில் வைத்துக் கொள்ள வேண்டும் அல்லது ஆன்லைன் பரிவர்த்தனையை செய்யலாம். இப்படி செய்வதன் மூலம் பணம் நம்மிடம் வசியமாவதோடு மட்டுமல்லாமல் அளவில்லாத பண வரவும் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: பண வரவை அதிகரிக்கும் சுக்கிர கிருத்திகை

நாம் வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதற்கு முன்பாக இந்த முறையில் வழிபாடு செய்துவிட்டு திருப்பி செலுத்த அந்த கடனை அடைப்பதற்குரிய பண வரவு நம்மிடம் வந்து சேரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்