கோடிக்கணக்கில் கடன் இருந்தாலும் ஒரே ஒரு ரூபாய் மட்டும் கடன் இருந்தாலும் அது கடன் தான். ஒரு ரூபாய் கூட கடன் இல்லாமல் வாழ வேண்டும் என்பதை தான் பலரும் தங்களுடைய லட்சியமாகவே கொண்டு இருப்பார்கள் இருப்பினும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் இக்கட்டான காலத்தில் கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாக நேரிடும். கோடீஸ்வரனாக இருக்கக்கூடியவருக்கு கூட கோடிக்கணக்கில் கடன் இருக்கும். நாமும் அதைக் கேள்விப்பட்டு இருப்போம். இப்படிப்பட்ட கடனை தீர்க்க வேண்டும் என்று நினைத்தும் தீர்க்க முடியாமல் இருப்பவர்கள் பெருமாளிடம் செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஒரு ரூபாய் பரிகாரம்
திருப்பதி ஏழுமலையானே குபேரரிடம் கடன் வாங்கி தான் திருமணத்தை செய்தார் என்றும் திருப்பதி உண்டியலில் வரக்கூடிய தொகையை குபேரருக்கு வட்டியாக வழங்குகிறார் என்றும் கூறி கேள்விப்பட்டு இருப்போம். அப்படிப்பட்ட திருப்பதி ஏழுமலையானை நாம் கடன் தொடர்பான பிரச்சனை தீர வேண்டும் என்று வேண்டுவதன் மூலம் விரைவிலேயே கடன் பிரச்சனையை அவர் தீர்த்து வைப்பார். திருப்பதி ஏழுமலையானை நினைத்து ஏழு ஒரு ரூபாய் நாணயங்களை மட்டும் வைத்து செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.
இந்த பரிகாரத்தை புரட்டாசி மாத சனிக்கிழமையில் செய்வது என்பது சிறப்பு. சனிக்கிழமை அன்று காலையில் சுத்தமாக குளித்து முடித்துவிட்டு ஒரு வெள்ளை நிற துணியை மஞ்சளில் ஊற வைத்து மஞ்சள் நிற துணியாக மாற்றி நிழலில் காயவைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது மஞ்சள் நிற துணி தயாராகிவிட்டது. இதில் ஏழு ஒரு ரூபாய் நாணயங்களை வைக்க வேண்டும். இந்த நாணயங்களை பன்னீரில் சுத்தம் செய்து ஈரம் இல்லாமல் துடைத்து விட்டு வைக்க வேண்டும். இதனுடன் முழு கொட்டை பாக்கு ஒன்றை வைக்க வேண்டும். அடுத்ததாக நுனி உடையாத ஒரு விரலி மஞ்சளை வைத்து மூட்டையாக கட்டிக் கொள்ள வேண்டும்.
பெருமாளுக்கு முன்பாக ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு இந்த மூட்டையை கையில் வைத்துக் கொண்டு திருப்பதி ஏழுமலையானை மனதார நினைத்து ஒரு ரூபாய் கூட கடன் இல்லாமல் நான் வாழ வேண்டும், என்னுடைய கடன் பிரச்சினை முற்றிலும் தீர்ந்த பிறகு இதை தங்களுடைய உண்டியலில் சேர்த்து விடுகிறேன் என்று மனதார வேண்டி முடித்த பிறகு இந்த மூட்டையை அப்படியே பெருமாளின் பாதத்தில் வைத்து விடுங்கள். எப்பொழுதெல்லாம் வீட்டில் கற்பூர தீப தூப ஆராத்தி காட்டுகிறோமோ அப்பொழுதெல்லாம் இந்த மூட்டைக்கும் காட்ட வேண்டும்.
கடன் பிரச்சனை முற்றிலும் தீர்ந்த பிறகு இந்த மூட்டையை அப்படியே எடுத்துக் கொண்டு திருப்பதிக்கு சென்று திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்துவிட்டு உண்டியலில் சேர்த்து விட வேண்டும். உண்டியலில் சேர்க்கும் பொழுது இந்த மூட்டைக்குள் இருக்கக்கூடிய கொட்டைப்பாக்கை மட்டும் எடுத்துக் கொண்டு மீதம் இருக்கக் கூடிய பொருட்களை உண்டியலில் போட்டு விட வேண்டும். கோவிலுக்கு வெளியே வந்த பிறகு கொட்டைப்பாக்கை கடித்து துப்பி விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நமக்கு மேற்கொண்டு எந்தவித கடன் பிரச்சினையும் ஏற்படாது என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே: சனி பகவான் பிடியிலிருந்து தப்பிக்க பெருமாள் வழிபாடு
திருப்பதி ஏழுமலையானை நினைத்து முழு நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்பவர்களுக்கு அவரின் அருளால் கடன் பிரச்சனை தீர்வதற்குரிய பணவரவு உண்டாக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.