- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகண் திருஷ்டி கழிய மகாளயா அமாவாசை பரிகாரம்

கண் திருஷ்டி கழிய மகாளயா அமாவாசை பரிகாரம்

- Advertisement -

அமாவாசை அன்று, திதி தர்ப்பண வழிபாட்டு முறைகள் எந்த அளவிற்கு முக்கியமோ, முன்னோர்கள் வழிபாடு எந்த அளவிற்கு முக்கியமோ, அதேபோலத்தான் நம்முடைய குடும்பத்திற்கு திருஷ்டி கழிப்பதும் மிக மிக முக்கியமான ஒரு விஷயம். அமாவாசை என்றால் திருஷ்டி கழிக்க, குலதெய்வ வழிபாடு செய்யவும் உகந்த நாள் தான். ஆகவே முன்னோர்கள் வழிபாட்டோடு சேர்த்து உங்கள் வீட்டிற்கு திருஷ்டி கழிக்க மறக்காதீங்க. கூடவே குலதெய்வத்தையும் மனதில் நினைத்து வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

நாளைய தினம் சக்தி வாய்ந்த மஹாலயா அமாவாசை நாள். இந்த நாளில் குடும்பத்தில் இருக்கும் கண் திருஷ்டி நீங்க, வீட்டை பிடித்த கெட்ட சக்தி விலக, நாம் சுலபமான முறையில் என்ன பரிகாரத்தை செய்யலாம். மிக மிக எளிமையான ஒரு பரிகாரத்தை தான் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

கண் திருஷ்டி விலக பரிகாரம்

நாளை 21/9/2025 அமாவாசை திதி முழுவதுமாக இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேலையிலேயே நிலை வாசலை கூட்டி சுத்தம் செய்து தண்ணீர் தெளித்து விடவேண்டும். அமாவாசை அன்று பளிச்சென்று கோலம் போடக்கூடாது என்று சொல்லுவார்கள். முதலில் கோலம் போடவே கூடாது என்று சொல்லுவார்கள்.

ஆனால் சில பேர் வீடுகளில் கோலம் போடாமல் இருக்க மாட்டாங்க. அதனால வெறும் செம்மண்ணால் கோலம் போட்டுக் கொள்ளுங்கள். கோலம் போடும் வழக்கம் இல்லையென்றால் அதை தவிர்த்துக் கொள்ளலாம். தவறு ஒன்றும் கிடையாது.

- Advertisement -

நிலை வாசலில் கோலம் போட்டுவிட்டு சூரிய உதயத்திற்கு முன்பாகவே ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து இரண்டாக நறுக்கி ஒரு பக்கம் மஞ்சள், ஒரு பக்கம் குங்குமம் தடவி குலதெய்வத்தை நினைத்து நிலை வாசல் படியில் இரண்டு பக்கமும் வைத்து விடுங்கள். அந்த எலுமிச்சம் பழம் அமாவாசை நாள் முழுவதும் அப்படியே இருக்கட்டும்.

ஞாயிற்றுக்கிழமை அமாவாசை இரவு 9 மணிக்கு மேல், அந்த இரண்டு துண்டு எழுமிச்சம் பழத்தையும் எடுத்து உங்களுடைய வீட்டை மூன்று முறை சுற்றி வீட்டிற்கு ஒதுக்கப்புறமாக வெளியில் தூக்கி எறிந்து விட்டால், உங்கள் வீட்டை பிடித்த அத்தனை கண் திருஷ்டியும் விலகும் என்பது நம்பிக்கை.

- Advertisement -

பிறகு உங்கள் வீட்டில் இருக்கும் உறுப்பினர்கள் அனைவரையும் அமர வைத்து விட்டு ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து அனைவரையும் திருஷ்டி சுற்றி, அந்த எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி வீட்டிற்கு வெளியே ஒரு பேப்பரில் மடித்து தூக்கி போட்டு விடுங்கள். குப்பைத்தொட்டியில் போட்டாலும் அந்த குப்பை தொட்டி வீட்டிற்கு வெளியே தான் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு எலுமிச்சம் பழத்தை உங்களுக்கு நீங்களே சுற்றிக்கொண்டு, அதை இரண்டாக நறுக்கி குப்பையில் தூக்கி போடுங்கள். உங்களை பிடித்த கண் திருஷ்டியும் விலகும். கட்டாயம் ஒவ்வொரு அமாவாசையும் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இதை செய்தாலே முக்கால்வாசி உங்கள் குடும்பத்திற்கு கண் திருஷ்டியால் எந்த பாதிப்பும் ஏற்படாது. கண் திருஷ்டியால் உங்கள் குடும்பம் கீழே விழாது. குலதெய்வத்தை நினைத்து இந்த பரிகாரத்தை செய்வது ரொம்ப ரொம்ப சிறப்பு.

இதையும் படிக்கலாமே: மகாளய அமாவாசையில் பெண்கள் செய்யக்கூடாத தவறு

திருஷ்டி கழித்த பொருட்களை நடுரோட்டில் வீசுவது, முச்சந்தியில் போடுவது, நான்கு ரோட்டிற்கு நடுவில் போடுவது இதுபோன்ற தவறுகளை செய்யாதீர்கள். அந்த எலுமிச்சம் பழத்தை தாண்டுவதால் மற்றவர்களுக்கும், மற்ற குழந்தைகளுக்கும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. திருஷ்டி கழித்த பொருட்களை ஒரு கவரில் போட்டு குப்பை தொட்டியிலோ அல்லது ஊருக்கு ஒதுக்கப்புறமான இடத்திலோ கொண்டு போய் போடவும். உங்களுக்கும் நம்பிக்கை இருந்தால் இதை பின்பற்றி பலன் பெறலாம்.

சற்று முன்