- Advertisement -
Homeஜோதிடம்ராசி பலன் | Indraya rasi palanஇன்றைய ராசிபலன் – 21 செப்டம்பர் 2025

இன்றைய ராசிபலன் – 21 செப்டம்பர் 2025

- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். உங்களுடைய வேலையை மட்டும் பார்த்தால் போதும். அடுத்தவர்களுடைய பிரச்சனையில் மூக்கை நுழைக்க வேண்டாம். இறை வழிபாட்டில் கவனம் செலுத்துங்கள். செலவை குறைத்துக் கொள்ளுங்கள். கூடுமானவரை வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்ப்பதும் நல்லது.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வீடு தேடி நன்மைகள் வரப்போகிறது. வரக்கூடிய நல்ல வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். யாரையும் அனாவசியமாக எடுத்துறிந்து பேசாதீர்கள். நிதானமாக யோசிக்கும் போது தான், நல்லது கெட்டது உங்களுக்கு புரியும். கோபப்பட்டு அவசரப்பட்டால் இன்று சின்ன சின்ன இழப்புகள் வரும்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று ஒரு மன பயம் பதட்டம், படபடப்பு இருந்து கொண்டே இருக்கும். அன்றாட வேலையில் கவனம் செலுத்துங்கள். மனதை ஆன்மீகத்தில் ஈடுபடுத்துங்கள். நிலையில்லாத ஒரு தன்மை இருக்கும் போது புது முடிவுகளை எடுக்க வேண்டாம். நல்ல காரியங்களை அடுத்தநாள் தள்ளிப் போடுங்கள்.

கடகம்


கடக ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உருப்படியாக நிறைய காரியங்களை செய்வீர்கள். நேரத்தை வீணடிக்க மாட்டீர்கள். உங்களுடைய பக்குவம் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கொஞ்சம் சிக்கல்கள் அதிகமாக இருக்கக்கூடிய நாள். எந்த வேலை செய்தாலும் குறை சொல்ல நாலு பேர் இருப்பாங்க. அவர்களையெல்லாம் சமாளித்து இந்த நாளை நகர்த்திச் செல்வதில் கொஞ்சம் சிரமங்கள் இருக்கும். முன்கோபம் வேண்டாம். அனுசரணையாக இருந்தாலே எல்லா பிரச்சினையையும் சமாளிக்கலாம்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று அன்பு வெளிப்படும் நாள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீங்க. வீட்டில் இருப்பவர்களுடைய கஷ்டத்தை புரிந்து கொள்வீர்கள். யாரையும் எடுத்தெறிந்து பேச மாட்டீர்கள். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும் நாள். குடும்ப ஒற்றுமை இருக்கும் நாள்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று ஒரு லாபகரமான நாளாக இருக்கிறது. கையில் பணம் புரளும். புதிய முதலீடுகளை செய்யலாம். வீட்டிற்கு தேவையான பொன் பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடையலாம். இறைவழிபாட்டில் கவனம் செலுத்துங்கள். மனதிற்கு பிடித்த கோவிலுக்கு போயிட்டு வாங்க. மேலும் நல்லது நடக்கும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். மனதிற்குப் பிடித்த நபரிடம் காதலை வெளிப்படுத்துவீர்கள். காதல், திருமணம் வரை செல்வதற்கும் வாய்ப்புகள் உள்ளது. வீட்டில் பெற்றவர்களின் சப்போர்ட் முழுமையாக கிடைக்கும். எதிர்பார்த்தது நடக்கும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். எதிலும் உங்களுடைய கை ஓங்கி நிற்கும். பெயர் புகழ் அந்தஸ்து உங்களை தேடி வரும். பெரிய மனிதர்களின் சந்திப்பு உங்கள் வாழ்க்கை தரத்தை மேலும் உயர்த்தி தரும். வேலையிலும் வியாபாரத்திலும் நினைத்ததை விட நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். நீண்ட தூர பயணங்கள் நன்மையை கொடுக்கும். உறவுகளோடு மட்டும் கொஞ்சம் அனுசரணை தேவை. நேர்மையாக நடந்து கொண்டால் பிரச்சனை வராது.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் உடல் சோர்வு இருக்கும். வேலை பளு அதிகமாக இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் நிறைய தண்ணீர் குடியுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வெளியிடங்களுக்கு செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். கூடுமானவரை நீண்ட தூர பயணத்தை தவிர்ப்பது நல்லது.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். ஆன்மீக ரீதியான வழிபாட்டு முறைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். வாழ்க்கைத் துணையோடு மனம் விட்டு பேசுவீர்கள். குடும்ப பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்கும். நிதி நிலைமை சீராகும். எதிர்கால சேமிப்பு உயரும்.

சற்று முன்