என்னுடைய வாழ்க்கையில், ஜாதக கட்டத்தில் நவ கிரகங்களினால் பெரிய பெரிய பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கு. நவகிரகங்கள் ஜாதக கட்டத்தில் சரியாக அமரவில்லை என்றால், வரும் நல்லது கூட வந்த வழி தெரியாமல் திரும்பிப் போய்விடும். இதுபோல சில பேர் புலம்பி தள்ளுவார்கள்.
என்னுடைய கிரகம், என்னுடைய தலையெழுத்து, என்னுடைய கெட்ட நேரம் என்னை வாழவே விட மாட்டேங்குது என்று சொல்லி சொல்லி கஷ்டப்படுபவர்கள், இங்கேயும் நிச்சயம் இருப்பிங்க. உங்களுடைய வாழ்விலும் இந்த நவகிரகங்கள் நாலா பக்கத்தில் இருந்தும் பிரச்சனைகளைக் கொண்டு வந்து உங்கள் காலடியில் போடுகிறதா.
இந்த பதிவு உங்களுக்காக மட்டும். இந்த மந்திரம் உங்களுக்காக மட்டும். வராகியே தேடி வந்து இதை உங்களிடம் சொல்வதாக வைத்துக் கொள்ளுங்கள். இந்த மந்திரத்தைச் சொன்னால், நவகிரகங்கள் தொல்லையிலிருந்து நீங்க தப்பிச் செல்லலாம். நவகிரகங்களும் வந்து உங்களை ஆசீர்வதிக்கும், நம்புங்க.
நாளை நவராத்திரி 5வது நாள்
நாளை 26-9-2025 வெள்ளிக்கிழமை நவராத்திரி திதியின் 5வது நாள். பஞ்சமி திதி சேர்ந்து வந்திருக்கிறது. இது அதிசக்தி வாய்ந்த நாள். இந்த நாளில் வாராகிக்கு ஒரு விளக்கு ஏற்றி, எலுமிச்ச பழ சாதம் நெய்வேதியம் வைத்து பின் சொல்லக்கூடிய இந்த மந்திரத்தை 3 முறை மட்டும் படிங்க போதும்.
ஆனால் தொடர்ந்து வெள்ளி சனி ஞாயிறு, 3 நாளும் மாலை 6 மணிக்கு வாராகி முன்பு இந்த மந்திரத்தை நீங்கள் படிக்க வேண்டும். மாலை 6 மணிக்கு பிறகு எந்த நேரத்தில் படித்தாலும் தவறு ஒன்றும் கிடையாது. கட்டாயம் உங்கள் முன்பு எலுமிச்சம் பழம் நிவேதியமாக சாதம் இருக்க வேண்டும். இவ்வளவுதான் வழிபாடு. இவ்வளவுதான் பரிகாரம். அந்த மந்திரம் என்ன என்பது உங்களுக்கு தெரியாது அல்லவா.
நவகிரக தோஷம் விலக வாராகி மந்திரம்
க்ரஹா ஆவேசகர்யை த்ரியேஷ்வரி
க்ரஹாராஜ்யா மஹா வாராஹி அம்பாள் போற்றி !
இதுதாங்க. மூன்று வரி மந்திரம். படிப்பதற்கு கொஞ்சம் சிரமம் இருக்கும். இரண்டு அல்லது மூன்று முறை இந்த மந்திரத்தை படிக்கும் போது உங்களுக்கு சுலபமாக உச்சரிக்க முடியும். அதிசக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை வாராகி முன்பு நம்பிக்கையோடு சொல்லிப் பாருங்கள். நவகிரகங்கள் எல்லாம் நாளா பக்கத்தில் இருந்தும் வந்து உங்களுக்கு உதவி செய்யும். கெட்ட நேரமெல்லாம் வேலையே செய்யாது. ஆனால் நம்பிக்கையோடு சொல்ல வேண்டும்.
வாராகிக்கு வைத்த எலுமிச்சம்பழ சாதத்தை வீட்டில் இருப்பவர்கள் பிரசாதமாக சாப்பிடலாம். அதை இரண்டு பேருக்கு தானமாக கொடுத்தாலும் நல்லது தான். இந்த பரிகாரத்தை வீட்டில் வாராஹி சிலை திருவுருவப்படத்திற்கு முன்பு செய்தாலும் சரிதான், உங்கள் வீட்டில் வராகியின் திரு உருவப்படம் இல்லை என்பவர்கள் வீட்டின் அருகில் இருக்கும் வாராகி கோவிலுக்கு சென்று இந்த மந்திரத்தை சொல்லலாம்.
இதையும் படிக்கலாமே: நவராத்திரி 5வது நாள் வாராஹி அலங்காரம்
அந்த வாராஹிக்கு எலுமிச்ச பழம் சாதத்தினை நெய்வைத்தியம் வைத்து, விளக்கு போட்டு வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். இத்தனை அற்புதம் வாய்ந்த சக்தி வாய்ந்த வழிபாட்டை உங்களோடு பகிர்ந்து கொண்டதில் மன மகிழ்ச்சியுடன் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.