- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசொந்த வீடு கட்ட திருச்செந்தூர் முருகன் பரிகாரம்

சொந்த வீடு கட்ட திருச்செந்தூர் முருகன் பரிகாரம்

- Advertisement -

சொந்த வீடு. நம்மில் பல பேருடைய கனவு இது. கடைசி வரை இது கனவாகவே இருக்கக்கூடாது. சொந்த வீடு கட்டக்கூடிய ஆசை நிறைவேற வேண்டும் என்று நினைப்பவர்கள், அனைவருமே முருகர் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். எவ்வளவுக்கு எவ்வளவு முருகனை நம்பிக்கையோடு வழிபாடு செய்கிறீர்களோ, அவ்வளவு சீக்கிரம் உங்களுக்கும் நிச்சயம் சொந்த வீடு அமையும்.

முருகப்பெருமான் உங்களுக்கு நல்லதொரு வழியை காட்டிக் கொடுப்பார். இன்று ஒரு பரிகாரம் சொந்த வீடு கிடைப்பதற்காகத்தான். இது ஒரு சக்தி வாய்ந்த வித்தியாசமான பரிகாரம். ஆனால் பலன் 99% நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்.

- Advertisement -

சொந்த வீடு கிடைக்க திருச்செந்தூர் முருகர் பரிகாரம்

சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற குறிக்கோளை மனதில் வைத்துக் கொண்டு ஒரு முறை திருச்செந்தூர் கோவிலுக்கு செல்லுங்கள். கூட்டம் இல்லாத நாளாக பார்த்து தேர்ந்தெடுத்து செல்லலாம். இந்த கிழமையில் தான் செல்ல வேண்டும் என்ற எந்த கட்டாயமும் கிடையாது. திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று திருச்செந்தூர் முருகப் பெருமானுக்கு உங்கள் கையால் தாமரை மாலையை வாங்கி கொடுக்க வேண்டும். வசதி இல்லை என்பவர்கள் 1 தாமரை, 3 தாமரை இப்படி வாங்கிக் கொடுத்தாலும் தவறு கிடையாது.

தாமரை சுக்கிர பகவானின் அம்சம் பொருந்தியது. செவ்வாய் பகவான் நமக்கு சக்தி வாய்ந்ததாக இருந்தால்தான், நமக்கு சொந்த வீட அமையும். செவ்வாய் பகவானுக்கு அதிதேவதை முருகன். குரு பார்க்க கோடி நன்மை என்று சொல்வார்கள். குருவின் ஆசிர்வாதம் இருந்தால் தான் சொந்த வீடு கட்டம் யோகம் கிடைக்கும். திருச்செந்தூரை குரு ஸ்தலம் என்றும் சொல்லுவார்கள்.

- Advertisement -

வீடு கட்ட தேவையான அத்தனை நல்லதும் இதில் அடங்கி விட்டதா? திருச்செந்தூர் முருகப் பெருமானுக்கு தாமரைப் பூக்கள் வாங்கி கொடுத்து, அந்த திருச்செந்தூர் முருகன் கோவிலில் இருக்கும் குரு பகவானுக்கு சந்தன காப்பு சாத்தி, வழிபாட்டை மேற்கொண்டால் நிச்சயமாக உங்களுக்கு சொந்த வீடு கட்டக்கூடிய கனவு நிறைவேறும் இது முதல் விஷயம்.

இரண்டாவதாக திருச்செந்தூர் முருகன் கோவிலில் இருக்கும் கடலுக்கு சக்தி அதிகம். திருச்செந்தூர் முருகன் கோவிலில் இருக்கும் கடல் அலைகளில் கால்நடைத்து விட்டோ அல்லது குளித்து விட்டோ, அது உங்கள் சௌகரியம். அந்த கடல் அலை வந்து போன இடத்தில் இருக்கும் மண்ணை கொஞ்சமாக எடுத்து, ஒரு மஞ்சள் துணியில் வைத்து கட்டி வீட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

- Advertisement -

வீட்டிற்கு கொண்டு வந்த மணலை கொஞ்ச நேரம் ஈரம் போகும் வரை மட்டும் காய வைத்துக் கொள்ளுங்கள். மீண்டும் அந்த மணலை முடிச்சாக கட்டி பூஜை அறையில் வைத்து அந்த மண்ணை வழிபாடு செய்ய வேண்டும்.

வாரத்தில் ஒரு நாள், செவ்வாய்க்கிழமை அந்த மண்ணுக்கு பூக்கள் போட்டு சாம்பிராணி தூபம் காட்டி சீக்கிரம் சொந்த வீடு கட்ட வேண்டும் என்று பிரார்த்தனை வைத்தாலும், சொந்த வீடு கட்டும் ஆசை சீக்கிரம் நிறைவேறும். உங்களால் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு செல்ல முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. யாராவது ஒருவரை அந்த கடல் மண்ணை கொஞ்சம் எடுத்து வர சொல்லுங்கள்.

இதையும் படிக்கலாமே: எதிர்பாராத பண வரவை தரும் மந்திரம்

அலை வந்து அடித்த பிறகு அந்த இடத்தில் இருக்கக்கூடிய மண்ணை எடுப்பது சிறப்பு. அந்த மண்ணைக் கொண்டு வந்து வழிபாட்டை மேற்கொண்டு பாருங்கள். நிச்சயம் உங்கள் சொந்த வீடு கட்டும் கனவு நிறைவேறும். சொந்த வீடு கட்ட முருகன் சார்ந்த பரிகாரங்கள் நிறைய இருந்தாலும், இந்த பரிகாரம் கூடிய விரைவில் நல்லதொரு பலனை தரும் பரிகாரமாக சொல்லப்பட்டுள்ளது. உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் முயற்சி செய்து பார்த்து பலனடையலாம்.

சற்று முன்