நீங்க இந்த நாளில் எவ்வளவு பெரிய பணக்கஷ்டத்தில் இருந்தாலும் சரி, அடுத்த 21 நாட்களுக்குள் உங்கள் பண கஷ்டத்தை தீர்க்க வந்திருக்கும் எளிய பரிகாரம் தான் இது. நம்பிக்கையோடு செய்தால் 21 நாளில் உங்கள் வருமானத்தை 10 மடங்கு கூட அதிகரிக்கலாம். அது உங்களுடைய நம்பிக்கையை பொறுத்தது.
உங்களுக்கு இப்போது அவசர பண தேவை எவ்வளவு இருக்கிறது, அல்லது எதிர்காலத்திற்கு நீங்கள் எவ்வளவு பணத்தை சேமிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அதற்கான முயற்சிகளை தற்போது செய்து கொண்டிருப்பீர்கள். அந்த முயற்சிகளில் வெற்றி பெற்று, உங்களுக்கு தேவையான பணம், நீங்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் பணம், உங்கள் கையில் வந்து சேர வேண்டும் என்று பிரார்த்தனையை வைத்து இந்த பதிவிற்குள் பயணம் செய்யுங்கள்.
பணம் தரும் பரிகாரம்
தினமும் காலையில் எழுத்து சுத்தபத்தமாக குளித்தவுடன், பச்சை நிற பேனா அல்லது ஸ்கெட்ச் எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய இடது கை மணிக்கட்டு பகுதியில், இன்ஃபினிட்டிவ் சிம்பல் வரைந்து கொள்ளுங்கள். இந்த சிம்பல் எப்படி இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். 8 என்ற எண்ணை படுக்க வைத்தால் எப்படி இருக்கும். அதுதான் இன்ஃபினிட்டிவ் சிம்பல். உங்களுக்கு தெரியவில்லை என்றால் மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
இடது கை வாட்ச் கட்டக்கூடிய இடத்தில், உள்ளங்கைக்கு கீழ் பக்கம் இருக்கக்கூடிய இடத்தில், இந்த சிம்பலை வரைந்து விட வேண்டும். பிறகு ஒரு இயற்கையான வாசனை திரவியம் எடுத்துக் கொள்ளுங்கள். எதுவாக இருந்தாலும் சரிதான். அத்தர் ஜவ்வாது மரிக்கொழுந்து அல்லது ஏதாவது சென்ட் உங்கள் வீட்டில் என்ன இருக்கிறதோ அதை நீங்கள் இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்தலாம்.
இடது கை மணிக்கட்டில் சிம்பலை வரைந்து விட்டீர்கள். அடுத்தபடியாக உள்ளங்கைகளில் ஒரு சொட்டு வாசனை திரவத்தை வைத்து இரண்டு கைகளையும் நன்றாக தேய்த்து, அந்த வாசனையை முகர்ந்து பிறகு கண்களை மூடி இந்த பிரபஞ்சத்திடம் உங்களுக்கு எவ்வளவு பணம் தேவையோ, அதை கேளுங்கள். நம்பிக்கையோடு 2 நிமிடம் பிரபஞ்சத்திடம் பிரார்த்தனை செய்துவிட்டு, அந்த கையில் இருக்கும் வாசத்தை உங்களுடைய உடம்பின் உள்பக்கத்தில் தடவிக் கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே: சொந்த வீடு கட்ட திருச்செந்தூர் முருகன் பரிகாரம்
வயிற்றுப் பகுதி, கைப்பகுதி, மார்பு பகுதியில் எந்த இடத்தில் தடவிக் கொண்டாலும் சரிதான். அந்த வாசம் உங்களுடன் சேர்ந்து விட வேண்டும். அவ்வளவு தான். பிறகு உங்களுடைய அன்றாட வேலையை துவங்க வேண்டும். இதுபோல 21 நாள் செய்து பாருங்க. எங்கிருக்கும் பணமும் தானாக உங்களைத் தேடி வரும். இது மிக மிக எளிமையான பரிகாரம் தான். நம்பிக்கையோடு செய்பவர்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்ற தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.