- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகல்வி தடையை நீக்கும் வளர்பிறை ஏகாதசி

கல்வி தடையை நீக்கும் வளர்பிறை ஏகாதசி

- Advertisement -

ஒருவர் கல்வியில் சிறந்து விளங்கினால் அவர் எந்த இடத்திற்கு சென்றாலும் மதிப்புடனும் மரியாதையுடனும் இருப்பார். கல்விக்கு அந்த அளவிற்கு சக்தி உள்ளது. எங்கு சென்றாலும் கற்றோர் கற்றோர் ஆகவே திகழ்வார்கள். கற்பதன் மூலம் பலவிதமான நன்மைகளை பெற முடியும். ஒருவருடைய கல்வி எந்த அளவிற்கு சிறப்பாக இருக்கிறதோ அந்த அளவிற்கு அவர் மட்டுமல்லாமல் அவர் குடும்பத்தை சார்ந்தவர்களும் சிறப்புடன் இருப்பார்கள் என்று கூறலாம். அப்படிப்பட்ட கல்வியை பெறுவதில் ஏதேனும் ஜாதக ரீதியாக தடைகள் இருக்கும் பட்சத்தில் அந்த தடைகளை விலக்குவதற்கு செய்ய வேண்டிய ஒரு தானத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கல்வி தடை நீக்க வழிபாடு

ஒருவர் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்றால் அதற்கு புதன் பகவானின் அருள் என்பது கண்டிப்பான முறையில் வேண்டும். புதன் பகவானின் அருளை பெறுவதற்கு புதன் பகவானுக்குரிய அதி தேவதையான பெருமாளின் அருளை பெற வேண்டும். பெருமாளின் அருளை பெற்றுவிட்டால் செல்வத்தில் மட்டுமல்ல கல்வியிலும் சிறந்து விளங்க முடியும் என்றே கூறலாம். அப்படிப்பட்ட பெருமாளுக்குரிய ஏகாதசி நாளன்று நாம் செய்யக்கூடிய ஒரு தானம் கல்வித்தடையை முற்றிலும் நீக்கும் என்றே கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த முறை வளர்பிறை ஏகாதசி என்பது அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. வெள்ளிக்கிழமை என்பது மகாலட்சுமிக்குரிய கிழமையாக கருதப்படுகிறது. மேலும் அன்றைய தினம் ஏகாதசி என்பதால் அது பெருமாளுக்கு உரிய நாளாகவும் கருதப்படுகிறது. இவர்கள் இருவரின் அருளையும் பரிபூரணமாக பெற்று கல்வியில் மட்டுமல்லாமல் செல்வத்திலும் சிறந்து விளங்க முடியும். கோமாதா அனைத்து தெய்வங்களையும் உள்ளடக்கிய ஒரு ஜீவனாக கருதப்படுகிறது. அதனால் தான் நமக்கு எந்தவித கிரக தோஷமாக இருந்தாலும் தடைகள் இருந்தாலும் கோமாதாவிற்கு நம் கை பட நாம் தானம் செய்வதன் மூலம் அனைத்து விதமான கிரக தோஷங்களும் தடைகளும் விலகும் என்று கூறப்படுகிறது.

அதனால் வளர்பிறை ஏகாதசி நாளான அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கல்வியில் தடை இருக்க கூடிய ஒவ்வொரு நபர்களும் சிறு குழந்தைகளாக இருந்தாலும் அவர்கள் கைப்பட பசு மாட்டிற்கு இதை சாப்பிட தர வேண்டும். கல்வித்தடை இல்லை என்றாலும் கூட படிக்கின்ற பிள்ளைகள் இந்த தானத்தை தங்கள் கைப்பட பசு மாட்டிற்கு தருவதன் மூலம் அவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவதோடு அவர்களுடைய வாழ்க்கையும் சிறப்பானதாக அமையும். அப்படி நாம் பசு மாட்டிற்கு தர வேண்டியது அவல்பொரி பாயாசம். இந்த அவல்பொரி பாயாசத்தை நம்முடைய வீட்டிலேயே நாம் தயார் செய்ய வேண்டும். இந்த பாயாசத்தில் சர்க்கரை சேர்க்கக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. கெட்டியாக செய்த இந்த அவல்பொரி பாயாசத்தை பிள்ளைகள் பசு மாட்டிற்கு தங்கள் கைகளால் தர வேண்டும். இவ்வாறு தந்து முடித்த பிறகு பசுமாட்டை மூன்று முறை வலம் வந்து வணங்க வேண்டும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: அதிர்ஷ்டம் தேடி வர சொல்ல வேண்டிய வார்த்தைகள்

கல்வியின் மகத்துவம் தெரிந்த உணர்ந்த ஒவ்வொரு நபர்களும் தங்களுடைய பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அப்படிப்பட்டவர்கள் மறவாமல் ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய வளர்ப்பிறை ஏகாதசி நாளன்று பசு மாட்டிற்கு தங்கள் பிள்ளைகளின் கைப்பட இந்த தானத்தை தந்து பிள்ளைகளின் எதிர்காலத்தை சிறப்பான எதிர்காலமாக மாற்றலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்