- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடனை தீர்க்கும் சனி மகா பிரதோஷ வழிபாடு

கடனை தீர்க்கும் சனி மகா பிரதோஷ வழிபாடு

- Advertisement -

ஒரு பிரதோஷ நாளில் நாம் விரதம் இருந்து வழிபாடு செய்வதன் மூலம் நம் வாழ்வில் இருக்கக்கூடிய தோஷங்களும் கஷ்டங்களும் நீங்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக நாம் பிரதோஷ விரதம் இருந்த பலனை பெறுவதற்குரிய வழிப்பாடாக தான் ஒரு சனி பிரதோஷ வழிபாடு திகழ்கிறது. இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த இந்த சனி மகா பிரதோஷ நாளில் நம்முடைய கடன் பிரச்சினை தீருவதற்கும் கஷ்டங்கள் குறைவதற்கும் செய்ய வேண்டிய ஒரு அர்ச்சனையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

சனி மகா பிரதோஷ வழிபாடு

நம் வாழ்வில் நமக்கு ஏற்படக்கூடிய பலவிதமான தோஷங்களை நீக்குவதற்கும் அந்த தோஷங்களால் ஏற்படக்கூடிய கஷ்டங்களை விளக்குவதற்கும் உரிய ஒரு அற்புதமான தினமாக தான் பிரதோஷ தினம் திகழ்கிறது. அன்றைய நாளில் நாம் செய்யக்கூடிய எளிமையான வழிபாட்டு முறைகள் நம் வாழ்வில் பலவிதமான அற்புதங்களை ஏற்படுத்தும் என்றே கூறலாம். மேலும் இந்த உலகத்தை காத்து ரட்சிப்பதற்காக ஆலகால விஷத்தை உண்டவராக இருக்கக்கூடிய சிவபெருமானை நாம் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டத்தையும் அவர் தீர்த்து வைப்பார் என்றே கூறலாம்.

- Advertisement -

அந்த வகையில் நம்முடைய தீர்க்க முடியாத கடன் பிரச்சினையை தீர்த்து நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கு சனிமகா பிரதோஷ நாளில் நாம் சிவபெருமானுக்கு ஒரு அர்ச்சனையை செய்ய வேண்டும். இந்த அர்ச்சனை செய்வதற்கு நமக்கு ஊமத்தை இலை வேண்டும். 108 என்று எண்ணிக்கையில் ஊமத்தை இலைகளை பறித்து அதை நன்றாக சுத்தம் செய்து ஈரம் இல்லாமல் துடைத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு சந்தனத்தில் சிறிதளவு பன்னீரை ஊற்றி நன்றாக கெட்டியாக குலைத்து கொள்ள வேண்டும். ஒரு குச்சியில் பஞ்சை நன்றாக சுற்றி அந்த பஞ்சில் சந்தனத்தை தொட்டு ஒவ்வொரு ஊமத்தை இலையிலும் கடன் பிரச்சினையை தீர்க்கக் கூடிய சிவபெருமானின் நாமத்தை எழுத வேண்டும்.

அந்த நாமம் “ருண முக்தீஸ்வராய நமஹ”. இந்த மந்திரத்தை ஒவ்வொரு இலையிலும் எழுதி அதை நன்றாக உலர வைத்து விடுங்கள். பிறகு இந்த இலைகள் அனைத்தையும் சேகரித்து அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு சென்று அங்கு வெளி சுற்றுப்புறத்தில் இருக்கக்கூடிய சிவலிங்கத்திற்கு தங்களுடைய கைகளால் ருண முத்தீஸ்வராய நமஹ என்னும் மந்திரத்தை கூறிக் கொண்டே ஒவ்வொரு இலைகளாக அர்ச்சனை செய்ய வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு அர்ச்சனை செய்து முடித்த பிறகு இரண்டு நல்லெண்ணெய் தீபங்களை ஏற்று வைத்து கற்பூர தீப தூப ஆராத்தி காட்டி வழிபாட்டை செய்ய வேண்டும். இப்படி நாம் தொடர்ச்சியாக 16 திங்கட்கிழமை செய்வதன் மூலம் நம்முடைய கடன் பிரச்சினை தீரும். அந்த 16 திங்கட்கிழமை செய்ததன் பலனை இந்த ஒரு சனி பிரதோஷ வழிபாடு நமக்கு தந்துவிடும் என்பதால் இந்த மகா பிரதோஷத்தை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை வழிபாடு

பல அற்புத சிறப்பு மிகுந்த பலன்களை தரக்கூடிய சனி மகா பிரதோஷ நாளில் இந்த முறையில் சிவபெருமானுக்கு தங்கள் கைப்பட அர்ச்சனை செய்பவர்களுக்கு கடன் பிரச்சினை முற்றிலும் தீரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்