- Advertisement -
Homeஜோதிடம்அக்டோபர் மாதம் அதிர்ஷ்டம் பெருக

அக்டோபர் மாதம் அதிர்ஷ்டம் பெருக

- Advertisement -

ஒவ்வொரு மாதமும் சிறப்பு மிகுந்த மாதமாக அமைய வேண்டும் என்றுதான் நாம் ஆசைப்படுவோம். இருப்பினும் நம்முடைய கிரக சூழ்நிலைகளின் காரணமாகவும் அந்த மாதத்தில் இருக்கக்கூடிய கிரகங்களின் அமைப்பாலும் நாம் நினைத்தது போல் நம்முடைய வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படாமல் தடைப்பட்டு இருக்கலாம். அந்த வகையில் அக்டோபர் மாதத்தில் எந்தவித தடைகளும் இல்லாமல் நம்முடைய முயற்சிகள் வெற்றியாகவும் நம்மை தேடி அதிர்ஷ்டம் வருவதற்கும் ஒவ்வொரு ராசிக்காரர்களும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் மற்றும் வழிப்பாட்டு முறைகளை பற்றி தான் இந்த ஜோதிடம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

அக்டோபர் மாதம் அதிர்ஷ்டம் பெருக

ஒவ்வொரு மாதத்திலும் கிரகங்களின் அமைப்பு என்பது மாறுபடும். அதற்கேற்றார் போல் ஒவ்வொரு ராசிக்காரர்களும் அந்த மாதத்தில் ஒரு சில வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலமும் ஒரு சில தெய்வங்களை வழிபாடு செய்வதன் மூலமும் அந்த மாதம் அவர்களுக்கு சிறப்பான மாதமாக அமையும். அதேபோல் அவர்கள் எடுக்கக்கூடிய முயற்சிகளில் வெற்றிகளும் உண்டாகும். மிகவும் கடினமாக செய்து முடிக்க வேண்டிய வேலையை கூட எளிதில் செய்து முடித்து விடுவார்கள். அப்படிப்பட்ட ஒரு வழிமுறைகளையும் வழிபாட்டு முறையையும் பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

மேஷ ராசிக்காரர்கள் அக்டோபர் மாதத்தில் வெள்ளை நிற ஆடை அணிந்து கொண்டு முக்கியமான விஷயங்களில் கலந்து கொள்வதன் மூலம் அவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். மேலும் தயிர் சாதத்தை பிறருக்கு தானமாக தருவது மற்றும் திங்கட்கிழமை தோறும் சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.

ரிஷப ராசிக்காரர்கள் அக்டோபர் மாதத்தில் சூரிய வழிபாட்டையும் சிவ வழிப்பாட்டையும் அனுதினமும் செய்ய வேண்டும். வெல்லத்தை தண்ணீரில் கரைத்து சூரிய வழிபாடு செய்யும்பொழுது 3 முறை அக்யம் விடுவது அவர்களின் வாழ்க்கையை சிறப்பு மிகுந்த வாழ்க்கையாக மாற்றும். இவர்கள் முக்கியமான காரியங்களுக்கு செல்லும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்வது நல்லது. மூத்தோர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்வதன் மூலம் தடைகள் விலகும்.

- Advertisement -

மிதுன ராசிக்காரர்களும் மீன ராசிக்காரர்களும் அக்டோபர் மாதம் சிறப்பு மிகுந்த மாதமாக மாறுவதற்கு புதன்கிழமை தோறும் பெருமாள் ஆலயத்திற்கு சென்று ஐந்து நெய் தீபங்களை ஏற்றி வைத்து வழிபாடு செய்ய வேண்டும். அதேபோல் அவர்களுக்கு உகந்த நிறமாக பச்சை நிறம் திகழ்வதால் முக்கியமான காரியங்களுக்கு செல்லும் பொழுது பச்சை நிற ஆடையை அணிந்து கொள்வது நல்லது.

கடகம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் அக்டோபர் மாதம் சிறப்பான மாதமாக அமைவதற்கு வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமியை வழிபாடு செய்ய வேண்டும். அதேபோல் வெள்ளி நிறத்தில் இருக்கக்கூடிய பொருட்களை அன்றாடம் தாங்கள் பயன்படுத்தி வருவதன் மூலமும் அதிர்ஷ்டம் பெருகும். மேலும் வெள்ளி நிறத்தில் இருக்கக்கூடிய ஆடைகளை அணிவது சிறப்பை தரும்.

- Advertisement -

சிம்மராசிக்காரர்களும், மகர ராசிக்காரர்களும் அக்டோபர் மாதம் சிறப்பான மாதமாக அமைவதற்கு யோக நரசிம்மரை அனுதினமும் வழிபாடு செய்ய வேண்டும். அவர்களுக்கு உகந்த நிறமாக சிவப்பு நிறம் திகழ்வதால் முக்கியமான காரியங்களுக்கு செல்லும் பொழுது சிவப்பு நிற ஆடை அணிந்து கொள்ள வேண்டும். பாதுகாப்புப் பணியில் இருக்கக்கூடியவர்கள் அதாவது செக்யூரிட்டிகளுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்வதன் மூலம் தடைகள் விலகும்.

கன்னி ராசிக்காரர்களும் தனுசு ராசிக்காரர்களும், அக்டோபர் மாதம் சிறப்பான மாதமாக அமைவதற்கு வியாழக்கிழமை தோறும் சிவாலயத்திற்கு சென்று நெய் தீபம் ஏற்றி வைத்து சிவ வழிபாட்டை செய்ய வேண்டும். மேலும் தங்களால் இயன்ற சமயத்தில் பசு மாட்டிற்கு மஞ்சள் வாழைப்பழத்தை தானமாக தருவது மிகவும் சிறப்பு. இவர்களுக்கு உகந்த நிறமாக மஞ்சள் நிறம் திகழ்வதால் முக்கியமான காரியங்களுக்கு செல்லும் பொழுது மஞ்சள் நிற ஆடையை அணிந்து கொள்ள வேண்டும். தங்களுடைய குருமார்களுக்கு தங்களால் இயன்ற அளவு உதவிகளையும் மரியாதையும் செய்வதன் மூலம் அதிர்ஷ்டம் பெருகும்.

துலாம் ராசிக்காரர்களும் விருச்சிக ராசிக்காரர்களும் அக்டோபர் மாதம் சிறப்பான மாதமாக அமைவதற்கு சனிக்கிழமை தோறும் சனீஸ்வர பகவானையும் பைரவரையும் வழிபாடு செய்ய வேண்டும். இவர்களுக்கு உகந்த நிறமாக வெளிர் நீளம் திகழ்கிறது. அதனால் முக்கியமான நிகழ்வுகளுக்கு செல்லும் பொழுது வெளிர் நீலத்தில் ஆடை அணிந்து கொள்வது நல்ல பலனைத் தரும். மேலும் இவர்கள் சுத்திகரிப்பு பணியில் ஈடுபடுபவர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்வதன் மூலம் அவர்களைத் தேடி அதிர்ஷ்டம் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே: நினைத்தது நடக்க பிள்ளையார் பரிகாரம்

அக்டோபர் மாதத்தில் தங்களுடைய முயற்சிகள் வெற்றியடைய வேண்டும் என்று நினைக்கக்கூடிய நபர்கள் இந்த வழிபாட்டையும் பரிகாரத்தையும் செய்து அதிர்ஷ்டத்தை பெறலாம் என்று தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்