- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசரியான முடிவை எடுக்க உதவும் வழிபாடு

சரியான முடிவை எடுக்க உதவும் வழிபாடு

- Advertisement -

இக்கட்டான ஒரு சூழ்நிலையில் ஏதாவது ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்திற்கு ஆளாகி இருப்போம். எந்த முடிவை எடுத்தால் நம்முடைய வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும்? யாருக்கும் பாதகம் ஏற்படாமல் நன்மைகள் உண்டாகும் என்று பல விதங்களில் நாம் மன குழப்பத்துடன் இருப்போம். நமக்கு தெரிந்தவர்களிடமும் நமது நலம் விரும்பிகளிடமோ அந்த பிரச்சனைக்குரிய தீர்வை கேட்டாலும் ஒரு சில நேரத்தில் சரியான தீர்வு கிடைக்காமல் போயிருக்கும். அப்படிப்பட்ட நிலையில் அந்த தீர்வை தெய்வத்திடம் கேட்பதற்குரிய ஒரு வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

சரியான முடிவை எடுக்க வழிபாடு

மனிதர்களால் சாதிக்க முடியாத விஷயத்தை கூட தெய்வத்தின் அருள் இருந்தால் சாதித்து விடலாம் என்று கூறி கேள்விப்பட்டிருப்போம். பலரும் ஒரு செயலை செய்வதற்கு முன்பாக அந்த செயலை செய்யலாமா வேண்டாமா என்று சீட்டு போட்டு பார்க்கும் முறையை வைத்திருப்பார்கள். பூ போட்டு பார்க்கும் முறை, விபூதி குங்குமம் என்று பல விதங்களில் அவர்களுக்கு தெரிந்தாற் போல் போட்டு தெய்வத்திடம் இருந்து அருள் வாக்கு பெறுவார்கள். அப்படி தெய்வத்திடம் இருந்து பெறக்கூடிய அந்த வாக்கை தான் தெய்வ பிரசன்னம் என்று கூறுகிறோம். இந்த தெய்வப்பிரசன்னத்தை வீட்டிலேயே சரியான முறையில் எப்படி செய்வது என்று தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.

- Advertisement -

நம்மை வழி நடத்திச் செல்லக் கூடியவர்களை நாம் குருவாக பாவிக்க வேண்டும் என்று கூறுவார்கள். நமக்கு சரியான தீர்வு கிடைக்க வேண்டும் என்றால் நாம் முதலில் தந்தை தாயிடம் ஆலோசனை பெற வேண்டும். பிறகு நம்முடைய குருமார்களிடம் ஆலோசனை பெற வேண்டும். இதன் மூலம் மனதில் தெளிவு ஏற்படவில்லை என்னும் பட்சத்திலோ அல்லது மாதா பிதா குரு என்று யாரும் குறிப்பிடத்தக்க வகையில் இல்லை என்னும் பட்சத்திலோ இந்த தெய்வப்பிரசன்னத்தை செய்யலாம்.

தெய்வங்களில் குருவாக நம் கருதப்படுபவர் தக்ஷனா மூர்த்தி. அதனால் நம்முடைய வீட்டில் கண்டிப்பாக முறையில் தட்சிணாமூர்த்தியின் படம் இருக்க வேண்டும். அவரை குருவாக பாவித்து அனுதினமும் அவரை நாம் வழிபாடு செய்ய வேண்டும். தீர்க்க முடியாத பிரச்சினையாக இருந்தாலும் தீர்வு எட்டப்படாத பிரச்சினையாக இருந்தாலும் நாம் அன்றைய தினத்தில் காலையிலேயே பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் தட்சிணாமூர்த்திக்கு முன்பாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பிறகு தட்சிணாமூர்த்திக்கு 16 வில்வ இலைகளால் “ஓம் தக்ஷிணாமூர்த்தியே நமஹ” என்னும் மந்திரத்தை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். இவ்வாறு செய்து முடித்த பிறகு ஒரு வெள்ளை நிற பேப்பரில் அந்த செயலை செய்யலாமா வேண்டாமா என்று இரண்டு சீட்டுகளில் எழுதி அதை நன்றாக குலுக்கி தட்சிணாமூர்த்திக்கு முன்பாக போட வேண்டும். அவ்வாறு போடும்பொழுது எந்த சீட்டு நம்மை நோக்கி முதலில் வருகிறதோ அதை எடுத்து அதில் என்ன எழுதி இருக்கிறதோ அதுபடி நடப்பதன் மூலம் தெய்வத்தின் அருளால் அது நடைபெறும். வீட்டில் குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் குழந்தைகளையும் எடுக்கச் சொல்லலாம்.

இதையும் படிக்கலாமே: முன் ஜென்ம பாவங்களை நீக்கும் பால் அபிஷேகம்

மிகவும் எளிமையான முறையில் வீட்டிலேயே தெய்வப்பிரசன்னம் பார்த்து நம்மால் எடுக்க முடியாத சரியான முடிவை தெய்வத்தின் அருளால் எடுக்கலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்