மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். எதிலும் சுறுசுறுப்போடு செயல்படுவீர்கள். விடுமுறை நாளாகவே இருந்தாலும், கடமையிலிருந்து தவற மாட்டீர்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதிநிலைமை சீராக இருக்கும். பண்டிகையை கொண்டாட தயாராகி விடுவீர்கள். சந்தோஷம் இரட்டிப்பாகும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சோர்வு இருக்கக்கூடாது. துவண்டு போகக்கூடாது. தோல்விகளை கண்டு அஞ்ச கூடாது. எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும் எதிர்த்துப் போடலாம் என்ற மன தைரியம் தேவைப்படுகிறது. இறைவழிபாடு செய்யுங்கள். நம்பிக்கையோடு இருங்கள் நல்லது நடக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். விடுமுறை நாளாக இருந்தாலும் பண்டிகையாக இருந்தாலும், உங்களுடைய வேலையில் கண்ணும் கருத்துமாக நடந்து கொள்வீர்கள். நீண்ட தூர பயணங்கள் நன்மையாக நடக்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். சந்தோஷம் பிறக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று உதவி செய்யக்கூடிய மனப்பக்குவத்தில் இருப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன சின்ன தடைகள் வந்தாலும், அதை சமாளிக்கக்கூடிய மனப்பக்குவம் உங்களுக்கு வந்துவிடும். பண்டிகை சிறப்பாக கொண்டாட நிதிநிலைமை சீராக இருக்கும். குடும்ப ஒற்றுமை பெருகும். நல்லது நடக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருக்கும். பிரச்சனைகள் வரும். குடும்பத்தில் தகராறு வரும். இருந்தாலும் உங்களுடைய பெருந்தன்மை உங்கள் கௌரவத்தை மேலும் உயர்த்தி நிறுத்தும். நிதானம், நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும். நிதி நிலைமை சீராகும். குலதெய்வ வழிபாடு மனதிற்கு அமைதியை தரும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மன அமைதியான நாளாக இருக்கும். உங்களுடைய வேலைகள் சரியான நேரத்தில் நடந்து முடியும். எதிரி தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள், சொந்த ஊருக்கு செல்வதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் இனிதே நிறைவடையும். மனமகிழ்ச்சி இருக்கும். இரவு நல்ல தூக்கம் கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று தெளிவாக சிந்திப்பீர்கள். குழப்பத்திலிருந்து விடுபடுவீர்கள். வேளையில் பெருசாக டென்ஷன் இருக்காது. வியாபாரத்தில் முதலீட்டில் கவனம் தேவை. நீண்ட தூர பயணத்தின் போது கவனம் தேவை. உங்களுடைய உடமைகளை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் பொறுமையாக இருக்க வேண்டும் கோபப்படக்கூடாது. யார் மீதும் சந்தேகப்படக் கூடாது. எதிரிகளை போட்டி போட்டு ஜெயிக்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது. நடப்பது நடக்கட்டும் என்று உங்களுடைய கடமைகளில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருந்து கொண்டால் போதும். இறைவன் உங்களை நல்வழிப்படுத்துவான்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடைகள் விலகும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கொஞ்சம் வேலை பளு அதிகமாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் இருக்கும். சந்தோஷம் பெருக்கும். நிதி நிலைமை சீராகும்.
மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சிந்தனைகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். வேலையில் முழுசாக கவனம் செலுத்த முடியாது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு சில மன குழப்பம் வரும். உறவுகளால் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. பொறுமையாக இருக்கவும். முன் கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். அனாவசியமான வார்த்தையை விடாதீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நட்பு ரீதியாக நிறைய நல்லது நடக்கும். நிறைய உதவிகள் கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை நிலவும். கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும். நீண்ட தூர பயணங்கள் கொஞ்சம் அலைச்சாலை கொடுக்கும். பட்டாசு வெடிக்கும் போது கவனமாக இருக்க, சின்ன சின்ன காயங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று நல்ல வேலைகளை செய்வீர்கள். இறைவழிபாடு மனதிற்கு அமைதியை தரும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் மனநிறைவு உண்டாகும். நீண்ட தூர பயணங்கள் மேற்கொள்ளலாம். செலவுகளை மட்டும் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுங்கள்.