மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக இருக்கும். சுறுசுறுப்பாக இந்த நாள் துவங்கும். சோம்பேறித்தனம் நீங்கி உங்களுடைய கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். நிதிநிலைமை சீராகும். வருமானம் பெருகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். நல்லது நடக்கும் நாள். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும். நிதி பற்றாக்குறை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. சில பேருக்கு கடன் வாங்கக் கூடிய சூழ்நிலையும் வரும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கோபத்தை குறைக்க வேண்டும். நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கக் கூடாது. உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்தவரையில் இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வாரா கடன் வசூல் ஆகும். குடும்ப பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வரும். நிம்மதியான சூழலில் உங்கள் மனம் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று இறக்க குணம் வெளிப்படும் நாளாக இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். பிரச்சனைகளுக்கு சரியான தீர்வை சொல்லுவீர்கள். திறமை வெளிப்படும் நாள். பேச்சாற்றல் வெளிப்படும் நாள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். இறைவழிபாடு மனதிற்கு அமைதியை தரும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாள். புது உறவுகளை வருகையால் மனது சந்தோஷம் அடையும். புதிய மனிதர்களின் நட்பு வாழ்க்கையில் முன்னேற்ற பாதைக்கு வழிவகுக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகளை செய்யலாம். வங்கி கடன் முயற்சி செய்யலாம். கட்டுமான தொழில் நல்ல லாபத்தை கொடுக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற எதிர்ப்புகள் வர வாய்ப்பு உள்ளது. உங்கள் மனதில் தோன்றும் நல்லதை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். உங்களுடைய பிளானை, உங்களுக்கு நம்பிக்கையானவர்களுக்கு மட்டும் சொல்லுங்கள். தேவையற்ற பொறாமையால், பிரச்சனைகள் வரும். எதிரி தொல்லை இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் பெருகும். நிதி நிலைமை சீராகும். கடன் சுமையிலிருந்து வெளி வருவீர்கள். அடமானத்தில் வைத்த பொருட்களை மீட்க்கவும் வாய்ப்புகள் உள்ளது. இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். இறைவழிபாடு செய்யுங்கள். மேலும் நன்மைகளை பெறலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சிரமமான நாளாக இருக்கும். நினைத்த வேலை எல்லாம் சட்டென்று முடியாது. கொஞ்சம் முயற்சிகளை போடும்போது தான் வெற்றி உங்களை நெருங்கி வரும். கொஞ்சம் கவனமாக செயல்படுங்கள். பிரச்சனைகளை கண்டு பயந்து ஒதுங்காதீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று உடல் சோர்வு இருக்கும். வேலையிலும், வியாபாரத்திலும் கவனம் செலுத்த முடியாது. ஓய்வு எடுக்க வேண்டும் என்று மனது சொல்லும். ஆனால் தலைக்கு மேலே பல வேலைகள் வரிசை கட்டி நிற்கும். இன்று கொஞ்சம் பிரச்சனைகளை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். கவலைப்படாதீங்க நல்லது நடக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் பாராட்டுகள் கிடைக்கும். சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். பொன் பொருள் சேர்க்கை இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று பெருமையான நாளாக இருக்கும். தலை நிமிர்ந்து நடப்பீர்கள். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக அமையும். நிதி நிலைமை கொஞ்சம் மோசமாக தான் இருக்கும். மற்றபடி எல்லா விஷயங்களும் இன்று நல்லபடியாக நடக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். பேசுவதை குறைத்து கொள்ளுங்கள். நல்லது நிலையாக தங்கும்.