- Advertisement -
Homeஜோதிடம்ராசி பலன் | Indraya rasi palanஇன்றைய ராசிபலன் – 06 ஜூன் 2026

இன்றைய ராசிபலன் – 06 ஜூன் 2026

- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை தரும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல பெயர் கிடைக்கும். நீண்ட நாட்களாக உங்கள் மீது விழுந்திருந்த அவப்பெயர் விலகும். சந்தேகங்கள் விலகும். எதிரி பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு மன நிம்மதி அடைவீர்கள். நீண்ட தூர பயணங்களால் நன்மை உண்டாகும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று  நிம்மதியான நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சீரான போக்கு இருக்கும். மனதில் இருந்த பிரச்சனைகள் கவலைகள் மறந்து போகும். மனதிற்கு பிடித்த நபருடன் நீண்ட நேரம் பேசி நேரத்தை செலவு செய்வீர்கள். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். சுப செலவுகள் ஏற்படும்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நல்ல பெயர் வாங்க கூடிய நாளாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடைகள் விலகும். வேலையில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்கள் மீது விழுந்த கெட்ட பெயர் விலகும். வியாபாரத்தில் விட்ட இடத்தை பிடிக்க, நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியைத் தரும். வங்கி கடன் முயற்சிக்கலாம் நல்லது நடக்கும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். கடமையிலிருந்து தவறாமல் நடந்து கொள்வீர்கள். நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொள்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். கடன் சுமை குறையும். வருமானம் சீராக இருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். தேவையான அளவு ஓய்வு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனை நீங்கும். மனக்குழப்பத்திற்கு உண்டான தீர்வுகள் கிடைக்கும். சிக்கலான பிரச்சனைகளை சரி செய்து விடுவீர்கள். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும் சொத்து சேர்க்கையும் உண்டு.

கன்னி


கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். உங்களிடம் கொடுத்த வேலைகளை சொன்ன நேரத்தில் செய்து முடிப்பீர்கள். வாரா கடன் வசூலாகும். நீண்ட நாள் தடையாகவே இருந்து வந்த ஒரு நல்ல காரியம் இன்று கைக்கோடி வரும். இறைவனுக்கு நன்றி செல்லுங்கள்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் மன குழப்பத்தில் இருப்பீர்கள். சிக்கலான விஷயத்தில், என்ன முடிவு எடுப்பது என்று தெரியாது தடுமாற்றத்தோடு செயல்படுவீர்கள். இருந்தாலும் உங்களுக்கு தேவையான உதவி, தக்க சமயத்தில் கிடைக்கும். குழப்பங்கள் தீரும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று வேலை பளு அதிகமாக இருக்கும். உழைப்பு உழைப்பு என்ற இந்த நாள் ஓடிவிடும். 24 மணி நேரம் போதாது. அந்த அளவுக்கு தலைக்கு மேல் வேலை காத்துக் கொண்டிருக்கும். இருப்பினும் சிரமம் பார்க்காமல் உங்கள் கடமையை சரியாக செய்து முடிப்பீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மையும் வெளிப்படும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வீட்டில் இருப்பவர்களுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். நீண்ட நாள் பிரச்சனைக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு வெளிப்படும். வேலை தேடி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. பயணங்களால் நன்மை நடக்கும்.

மகரம்


மகர ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று நல்ல செய்தி உண்டு. வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். புதிய நண்பர்களின் வருகையால் நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சீரான போக்கு நிலவும். நீண்ட தூர பயணங்களால் மன நிம்மதி கிடைக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்கள் இன்று நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். அதிகமாக முன்கோபம் வேண்டாம். சிந்தித்து செயல்பட வேண்டும். உடன் இருப்பவர்களை பகைத்துக் கொள்ளக் கூடாது. எந்த விஷயத்திலும் அவசரம் வேண்டாம். மரியாதை கொடுத்து மரியாதை வாங்குவது மிகவும் நல்லது. பேசும்போது வார்த்தையில் அதிக கவனம் தேவை.

மீனம்


மீன ராசிக்காரர்கள் இன்று சின்ன சின்ன சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உடன் இருப்பவர்களை உங்களுக்கு தொல்லை கொடுப்பார்கள். உங்களுடைய கடமைகளை சரியாக செய்ய விடாமல் தடுப்பார்கள். சின்ன சின்ன கெட்ட பெயர் வர வாய்ப்பு உள்ளது. எந்த சூழ்நிலையிலும் பொய் சொல்ல வேண்டாம். அடுத்தவர்களை பற்றி அவதூறு பேச வேண்டாம். நேர்மையாக இருந்தால் நல்லது நடக்கும்.

சற்று முன்