- Advertisement -
Homeஜோதிடம்ராசி பலன் | Indraya rasi palanஇன்றைய ராசிபலன் – 07 ஜூன் 2026

இன்றைய ராசிபலன் – 07 ஜூன் 2026

- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். இந்த விடுமுறை நாளை குடும்பத்தோடு இருந்து கொண்டாடி மகிழ்வீர்கள். நீண்ட நாள் ஆசை, கனவு நிறைவேறும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இருக்கும். வேலை வியாபாரம் எல்லாம் சீராக செல்லும். சுப செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். இறைவனுக்கு மறக்காமல் நன்றி சொல்லுங்கள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்கள் மனதில் இன்று சின்னதாக பயம் இருக்கும். புது விஷயங்களை துவங்குவதில் தாமதம் ஏற்படும். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கவனமாக சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். இறைவழிபாடு செய்யுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்கள் இன்று அவசர முடிவு எதுவும் எடுக்கக் கூடாது. சிந்தித்து செயல்பட வேண்டும். பொறுமையாக இருக்க வேண்டும். முன்கோபம் வேண்டாம். எதிரிகளை கையாளும்போது கவனம் இருக்கட்டும். நீண்ட தூர பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். அனாவசிய செலவு குறைத்துக் கொள்வது நல்லது.

கடகம்


கடக ராசி காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும் நாளாக இருக்கும். உங்களுடைய வேலைகளை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனை விலகும். பயணங்களால் நன்மை உண்டாகும். உறவுகளிடத்தில் இருந்து வந்த மன கசப்பு நீங்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும் நாள் இன்று.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். திறமையாக சிந்தித்து செயல்படுவீர்கள். மனப்பாரம் குறையும். சொந்த பந்தங்களோடு சேர்ந்து நேரத்தை செலவு செய்ய நல்லதொரு வாய்ப்பு கிடைக்கும். சுப செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வெயில் நேரத்தில் வெளியே செல்லாமல் இருப்பது நல்லது. ‌

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கப் போகிறது. ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும். வீண்விரய செலவுகள் குறையும். வருமானம் பெருகும். சேமிப்பை உயர்த்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளலாம். பிள்ளைகளுடைய படிப்பிலிருந்து வந்த தடை விலகும். சந்தோஷம் இரட்டிப்பாகும் நாள் இன்று.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று அமைதியான நாளாக இருக்கும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று கடமைகளை செய்து கொண்டு, இந்த நாளை கடந்த செல்வீர்கள். எதிரிகள் கூட நண்பர்களாக மாறிவிடுவார்கள். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். இறை வழிபாடு மனதிற்கு அமைதியை தரும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். எதிர்பாராத நல்லது, வீட்டு வாசல் கதவை தட்டும். வரும் வாய்ப்புகளை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடு விலகும். பிரிந்த உறவுகளும் ஒன்று சேரும். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு.

தனுசு


தனுசு ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று சந்தோஷமான நாளாக இருக்கும். தலை குனிந்த இடத்தில் தலை நிமிர்ந்து நடப்பீர்கள். பெருமையாக உங்களை நீங்களே புகழ்ந்து பேசிக்கொள்ளலாம். உங்களுடைய தகுதிகளை உயர்த்திக் கொண்டு சமுதாயத்தில் ஒரு உயர்ந்த இடத்தை பிடிப்பீர்கள். சந்தோஷத்திற்கு அளவு இருக்காது. சாதனை படைக்கும் நாளாக இந்த நாள் இருக்கப் போகிறது. இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

மகரம்


மகர ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று அமைதியான நாளாக இருக்கும். பிரச்சனைகள் சிக்கல்கள் குழப்பங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், உங்களை நீங்களே அமைதி கொள்வீர்கள். எது நடந்தாலும், பக்குவமாக ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இருக்கும். நல்ல அனுபவம் கிடைக்கும். காலையில் 10 நிமிடம் மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்வது கூடுதல் நன்மைகளை பெற்று தரும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த தடைகள் விலகும். சொந்த பந்தங்களோடு சேர்ந்து இருக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். பயணங்கள் நல்லபடியாக நடக்கும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. உணவு பழக்க வழக்கங்களில் கட்டுப்பாடு தேவை.

மீனம்


மீன ராசிக்காரர்கள் இன்று அதிகமாக பேசக்கூடாது. முன்கோபடக்கூடாது, நிறைய எதிர்ப்புகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். தந்திரமாக சில வேலைகளை செய்ய வேண்டும். ஆர்ப்பாட்டம் வேண்டாம். அதிகம் பேசாமல் இருந்தாலே பிரச்சனையில் பாதி சரியாகும் என்பதை புரிந்து கொண்டாலே போதும், இன்று தப்பித்துக் கொள்ளலாம்.

சற்று முன்