மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். எதிரிகளாக சுற்றி திரிந்தவர்கள் எல்லாம் இன்று உங்களுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள். வேலையிலும் வியாபாரத்திலும் உங்கள் கை ஓங்கி நிற்கும். நீண்ட நாள் பகை விலகும். வருமானம் சீராக இருக்கும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தோடு நேரத்தை செலவு செய்வீர்கள். சுப செலவுகள் ஏற்படும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதி கிடைக்கும். இறைவழிபாடு மனதிற்கு அமைதியை தரும். உங்களுடைய வேண்டுதல் நிறைவேற, நிறைய நல்ல சந்தர்ப்பங்கள் கைக்கூடி வரும். புதிய முயற்சிகளை கை விடாதீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் முன்னேற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் விலகும். இரவு நல்ல தூக்கம் கிடைக்கும் நாள் இன்று.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நல்ல நேரம் கை கூடி வரும். வீட்டில் தடைப்பட்டு வந்த நல்ல காரியங்கள் மீண்டும் துவங்கும். சுப செலவுகள் ஏற்படும். குழந்தை பாக்கியம் தேடி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. வியாபாரம், வேலையில் எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றம் இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று ஓய்வு என்பதே இருக்காது. உழைப்பு உழைப்பு என்று நேரம் போவதே தெரியாது. குடும்பத்தோடு சேர்ந்து நேரத்தை செலவு செய்வீர்கள். நீண்ட தூர பயணங்களால் உடல் அசதி ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது நல்லது. உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும் நல்லது நடக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மனம் மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் மன நிம்மதி இருக்கும். நீண்ட நாள் பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும். சொத்து சுகம்மாகவும் வாய்ப்புகள் உள்ளது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று புதிய முயற்சிகள் மேற்கொள்ளலாம். வெற்றி வாகை சூடுவீர்கள். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். கடன் சுமை குறையும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த வாக்குவாதம் சரியாகும். சகோதர சகோதரிகளுக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடு விலகும். குடும்ப ஒற்றுமை நிலவும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டும். பலவிதமான குழப்பங்கள் உங்களுடைய அன்றாட வேலையை கெடுக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உயர் அதிகாரிகளோடு வாக்குவாதம் செய்ய வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்கள் இன்று லாப நஷ்ட கணக்கு பார்த்து வேலை செய்வீர்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் உஷாராக செயல்படுவீர்கள். அனாவசியமாக ஒரு ரூபாய் கூட செலவு செய்ய மாட்டீர்கள். நீண்ட தூர பயணங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது. ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் செலுத்துங்கள். மாணவர்கள் கல்வி சம்பந்தப்பட்ட விஷயத்தில் நிதானத்தோடு இருக்க வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை இருக்கும். வேலை எல்லாம் சரியான நேரத்தில் நடந்து முடியும். இல்லத்தரசிகளுக்கு மன நிறைவு கிடைக்கும் நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். உயர் பதவிகள் கிடைப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும் நாளாக இருக்கும். குடும்பத்தோடு நீண்ட நேரம் நேரத்தை செலவு செய்வீர்கள். வியாபாரத்திலும் வேலையிலும் திறமைசாலியாக வலம் வருவீர்கள். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். கணவன் மனைவிக்குள் அவ்வப்போது வாக்குவாதம் வந்தாலும் சந்தோஷத்தில் எந்த குறையும் வராது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நட்பு ரீதியாக நிறைய நல்லது நடக்கும். நீண்ட தூர பயணங்களால் மன நிம்மதி கிடைக்கும். சுப செலவுகள் ஏற்படும். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உறவுகளோடு பேசும்போது, வாக்குவாதம் செய்யக்கூடாது. அவசரப்பட்டு எந்த பஞ்சாயத்துக்கும் போகக்கூடாது பார்த்துக்கோங்க.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று சின்னதாக மன பயம் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் தடைகள் தடங்கல்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை வரும். இருப்பினும் பெரிதாக பாதிப்புகள் இல்லை. வரக்கூடிய பிரச்சினைகளை எதிர்கொள்ளும் துணிவு உங்களிடத்தில் வெளிப்படும். இறைவனின் பரிபூரண அருள் கிடைக்கும் நாள் இன்று.