மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் பாராட்டு கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் திறமையாக செயல்படுவீர்கள் . குடும்ப பிரச்சினைகள் எல்லாம் ஒவ்வொன்றாக சரியாகிவிடும். மன நிம்மதி கிடைக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடு சரியாகும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் விலகும். வீண் விரைய செலவுகள் குறையும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன கவலை இருக்கும். கொஞ்சம் டென்ஷன் வெளிப்படும் நாளாகவும் இருக்கும். வேலை வியாபாரத்தில் எல்லாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தேவையில்லாத நண்பர்களிடம் இருந்து விலகி இருப்பது நல்லது. செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். பயணங்களை தவிர்ப்பதும் நல்லது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அது சுப செலவாகவும் இருக்கலாம், விரைய செலவாகவும் இருக்கலாம். அவரவர் பிரச்சனையை பொறுத்து அந்த செலவு தீர்மானம் ஆகும். வேலையிலும் வியாபாரத்திலும் கவனம் தேவை. ஆரோக்கியத்திலும் கவனம் தேவை.
கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று கவனமாக இருக்க வேண்டும். வெளியிடங்களுக்கு சென்றால் உடைமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுங்கள். உடலுக்கு ஆரோக்கியம் இல்லாத பொருட்களை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும் நாளாக இருக்கும். தேவையான அளவு பணம் கையில் இருக்கும். தேவையான அளவு ஓய்வு கிடைக்கும். இறைவழிபாடு மனதிற்கு அமைதியைத் தரும். வேலையிலும் வியாபாரத்திலும் பெரிசாக பிரச்சனைகள் இல்லை. நிதிநிலைமை சீராக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக இருக்கும். தலை குனிந்த இடத்தில் தலைநிமிர்ந்து நிற்பீர்கள். உங்களுடைய நல்ல பெயரை நிலை நாட்டுவீர்கள். சந்தேகங்கள் மனதில் இருந்து விலகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று நீண்ட தூர பயணங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல் அசதியும் ஏற்படும். ஆன்மீகம் சார்ந்த விஷயங்கள் மனதிற்கு அமைதியை தரும். பிரிந்த கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். வேலையிலும் வியாபாரத்திலும் பெரிசாக பிரச்சனைகள் வராது.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்கள் இன்று தெளிவாக சிந்திப்பீர்கள். திறமையாக செயல்படுவீர்கள். பேச்சாற்றல் வெளிப்படும். கலைஞர்களுக்கு இன்று நல்ல முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். வீண் விரைய செலவுகள் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். திறமையாக சிந்திப்பீர்கள். சிக்கலான விஷயங்களை கூட மிகவும் புத்திசாலித்தனமாக கையாளுவீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டு. சொத்து சுகம் வாங்குவதற்கான நல்ல வாய்ப்புகளும் உங்களைத் தேடி வரும். சுப செலவுகள் உண்டாகும்.
மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வாரா கடன் வசூல் ஆகும். அரசாங்கம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். விவசாயிகளுக்கு நல்ல முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். நல்லதே நடக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று பொறுமை தேவை. குடும்ப உறவுகளோடு பேசும்போது நிதானம் தேவை. அவசரப்பட்டு எந்த வார்த்தையையும் விடக்கூடாது. நீண்ட நாள் பிரிந்த உறவுகள் ஒன்று சேர நிறைய வாய்ப்புகள் உள்ளது. உறவுகளை தக்க வைத்துக் கொள்வது உங்கள் கையில் தான் உள்ளது. மற்றபடி வேலை வியாபாரம் எல்லாம் சுமூகமாகத்தான் செல்லும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதியான நாளாக இருக்கும். கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும். குடும்ப உறவுகளுடன் நீண்ட நேரம், நேரத்தை செலவு செய்வீர்கள். குடும்ப உறவுகளோடு வெளியிடங்களுக்கு செல்வதற்கும் வாய்ப்புகள் உள்ளது. இறைவழிபாடு மனதிற்கு அமைதி தரும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும்.