மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கும் நாளாக இருக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதிநிலைமை சீராகும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். மனம் நிம்மதி அடைவீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். துணிச்சலாக செயல்படுவீர்கள். மனதில் பட்ட விஷயங்களை வெளிப்படையாக பேசி பிரச்சனைகளுக்கு உடனடியாக ஒரு தீர்வை கொடுப்பீர்கள். புதிய நண்பர்களின் அறிமுகம் புது அனுபவங்களை கொடுக்கும். நல்லது நடக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். யோகக்காரர்களாக வலம் வரப்போகிறீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை இருக்கு. நீண்ட நாள் காரிய தடை சரியாகும். மனதிற்கு பிடித்த திருமண வாழ்க்கை அமையும். நீண்ட தூர பயணங்கள் மனதிற்கு அமைதியை தரும்.
கடகம்
கடக ராசிகாரர்களை பொறுத்தவரை இன்று சிந்தித்து செயல்படுவீர்கள். லாப நஷ்ட கணக்கு பார்த்து ஒரு வேலையை செய்வீர்கள். ஆதாயம் இல்லாமல் ஒரு வேலையை கையில் எடுக்க மாட்டீர்கள். சுயநலத்தோடு சிந்தித்து உங்களுக்கு தேவையான விஷயங்களை பார்த்து பார்த்து செய்து கொள்வீர்கள். பிரச்சனைகளில் இருந்து விடுபடும் நாள் இன்று.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று திறமை வெளிப்படும் நாள். ஆர்வம் அதிகரிக்கும். புது விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். குறிப்பாக மாணவர்களுக்கு இளைஞர்களுக்கு இன்று நல்லது நடக்கும். தேவையில்லாத பகை தானாக விலகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். மன நிம்மதி கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். உற்சாகம் இருக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். அதிக வட்டிக்கு மட்டும் கடன் வாங்கும் பழக்கத்தை விட்டு விடுங்கள். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரிய நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும். வேலையில் இருந்த தொந்தரவுகள் சரியாகும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று லாபமான நாளாக இருக்கும். எதிர்கால சேமிப்புக்கு முயற்சி செய்யுங்கள். அடமானத்தில் வைத்த பொருட்களை மீட்பதற்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். நல்லது நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். விவசாயம் சம்பந்தப்பட்ட வேலைகள் நல்ல முன்னேற்றம் தரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று நிதானமாக சிந்தித்து செயல்படுவீர்கள். பொறுமை இழக்க மாட்டீர்கள். கோபத்தை குறைத்துக் கொள்வீர்கள். இன்று பொறுமை உங்களை பெரிய அளவில் நல்வழிப்படுத்தப் போகிறது. இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். நல்லதே நடக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை தான். நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம் என்று இந்த நாள் இனிய நாளாக அமையும். விடுமுறை நாளை கொண்டாடி மகிழ்வீர்கள். இன்று மாலை நேரத்தில் உறவுகளோடு வெளியிடங்களுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டு. சுப செலவுகள் ஏற்படும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீகம் சம்பந்தப்பட்ட வழிபாட்டில் மன நிம்மதி கிடைக்கும். குலதெய்வ கோவிலுக்கு செல்வதற்கு உண்டான வாய்ப்புகளும் வரும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு வெளிப்படும். இரவு நிம்மதியான தூக்கத்தை பெறுவீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று பக்குவத்துடன் நடந்து கொள்வீர்கள். எது நல்லது, எது கெட்டது என்பதை ஆராய்ந்து அலசி முடிவு எடுப்பீர்கள். புதிய நண்பர்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. புது அனுபவங்கள் கிடைக்கும். வருமானம் பெருகும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். உங்களுடைய எதிர்பார்ப்பு நிறைவேறும். சில பேருக்கு வீடு மாறக்கூடிய வாய்ப்புகளும் இருக்கு.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று உயர்வான நாளாக இருக்கும். உங்களுடைய மதிப்பும் மரியாதையும் கூட போகிறது. வருமானம் பெருகும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். சில பேருக்கு நீண்ட தூர பயணங்கள் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உணவு பழக்க வழக்கத்தில் கொஞ்சம் கட்டுப்பாடு தேவை.