- Advertisement -
Homeஜோதிடம்ராசி பலன் | Indraya rasi palanஇன்றைய ராசிபலன் – 05 செப்டம்பர் 2026

இன்றைய ராசிபலன் – 05 செப்டம்பர் 2026

- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். மனபாரம் குறையும். நீண்ட நாள் பகை விலகும். லேசான மனதோடு இன்று நீங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். இறை நம்பிக்கை அதிகரிக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும். வீண் விரை செலவுகள் குறைந்து, சேமிப்பு உயரும் நாளாகவும் அமையும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று இறக்க குணம் வெளிப்படும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். தேவையான அளவு பணம் கையில் இருக்கும். செலவுகளை சமாளித்து விடுவீர்கள். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை செலுத்துவீர்கள். தேவையில்லாத பகை உங்களை விட்டு தானாக விலகும்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மனக்கவலை கொஞ்சம் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. புது முடிவுகள் எடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். உறவுகளோடு சண்டை போட வேண்டாம்.‌ கூடுமானவரை நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தடைகள் தடங்கல்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. சுறுசுறுப்பு குறையும். ஆரோக்கியத்தில் சின்ன பிரச்சனைகள் வரலாம். தேவையில்லாத பழைய விஷயங்களை நினைத்து மனதை அலைபாய விடாதீர்கள். இறை வழிபாடு செய்யுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று லேசான மன பயம் இருக்கும். மனதில் பட்ட விஷயத்தை வெளிப்படையாக பேச மாட்டீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து போகலாம். உயர் அதிகாரிகளோடு வாக்குவாதம் வரலாம். கவனத்தோடு சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். இன்று பொறுமை அவசியம் தேவை.

கன்னி


கன்னி ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சிக்கல்கள் வரும். பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டிய மன தைரியம் உங்களுக்கு தேவைப்படுகிறது. பயத்தை தூக்கி வெளியே எறிந்து விடுங்கள். துணிச்சலோடு செயல்படுங்கள். இறை நம்பிக்கை வையுங்கள். நிச்சயம் நல்லதே நடக்கும். புது முயற்சிகளை நாளை தள்ளிப் போடவும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். நிறைய சிரமங்களை எதிர்கொண்ட பிறகு தான் வெற்றி வாகை சூட முடியும். மாணவர்கள் கல்வியில் அதிக அளவு ஆர்வம் காட்ட வேண்டும். தேவையில்லாத நட்பில் இருந்து விலகி இருப்பது நல்லது. இறை வழிபாடு செய்வது மனதிற்கு அமைதியை தரும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று தனலாபம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் பெருகும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். புது வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தேவையில்லாத டென்ஷன் குறையும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நட்பு ரீதியாக நிறைய நல்லது நடக்கும். வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். கோர்ட் கேஸ் பிரச்சனை உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும். சொத்து வாங்க கூடிய யோகமும் இருக்கிறது. நீண்ட தூர பயணங்களால் உடல் அசதி வரலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உணவு பழக்க வழக்கத்தில் கட்டுப்பாடு தேவை.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் பாராட்டு கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் பொருத்தவரை மந்தமான போக்கு இருந்தாலும், புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளுங்கள். புத்திசாலித்தனத்தோடு செயல்பட்டால் இன்று சின்ன சின்ன இழப்புகளை தடுக்கலாம்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சந்தோஷம் இரட்டிப்பாகும் நாள். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பாராத முன்னேற்றம் வரும். அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம் வீசும். தேவையான அளவு பணம் கையில் இருக்கும். நிதிநிலைமை சீராகும். கடன் சுமை குறையும்.

மீனம்


மீன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சுறுசுறுப்பு தேவை. உங்களுடைய கடமைகளை சரியாக செய்ய வேண்டும். கடமையிலிருந்து பின்வாங்க வேண்டாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். குடும்ப உறவுகளோடு இருந்து வந்த மன கசப்பு சரியாகும். வண்டி வாகனம் ஓட்டும் போது கூடுதல் கவனம் இருக்கட்டும்.

சற்று முன்