மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று லாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். வேலையில் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் கொஞ்சம் குறைவாக இருந்தாலும், பிரச்சனைகள் பெருசாக வராது. உடன் வேலை செய்பவர்களை முழுசாக நம்பாதீங்க. மற்றபடி ஆரோக்கியம் இன்று சீராக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கொஞ்சம் மன பயம், பதட்டம் இருக்கும். தேவையில்லாத டென்ஷனல் உங்களுடைய அன்றாட வேலை பாதிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. பதட்டத்தை குறைத்துக் கொள்ளுங்கள். வீண் வம்பு வழக்குகளுக்கு செல்ல வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் போதும். நல்லது நடக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன பிரச்சனைகள் எதிர்ப்புகள் போராட்டங்கள் இருக்கும். கையில் எடுத்த வேலையை உடனடியாக செய்து முடிக்க முடியாது. காரிய தடை இருக்க வாய்ப்புகள் உள்ளது. வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் இருக்கட்டும். புது முயற்சிகளை இன்று மேற்கொள்ள வேண்டாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வாரா கடன் வசூல் ஆகும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். தேவையில்லாத செலவுகளை இழுத்து போட்டுக் கொண்டோமோ என்ற மனநிலை மாறி, நீங்கள் செய்யும் செலவுகள் அனைத்தும் உங்களுடைய தேவைகளுக்காக மட்டும்தான் என்ற மனநிலைக்கு வந்து விடுவீர்கள். குழப்பங்கள் நீங்கும் நல்லது நடக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று பயம் பதட்டம் இருக்கும் நாள். செய்யும் செயல் சரியா தவறா என்ற மனக் குழப்பத்தில் இருப்பீர்கள். உங்களுடைய வேலையிலும் வியாபாரத்திலும் முழு கவனம் செலுத்த முடியாது. இதனால் சின்ன பின்னடைவு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கவலை வேண்டாம். நடந்ததெல்லாம் நல்லதற்கே என்று நினைத்து பிரச்சினைகளை மறந்து இந்த நாளை கடந்து செல்லுங்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். நிதிநிலைமை சீராக இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளுடைய தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் சரியாகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். எதிரி தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். நீண்ட தூர பயணங்களால் நல்ல அனுபவங்கள் கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சின்னதாக அலைச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல் சோர்வு இருக்கும். ஆரோக்கியத்தில் குறைபாடு வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. நிறைய தண்ணீர் குடியுங்கள். உணவு பழக்க வழக்கத்தில் கட்டுப்பாட்டோடு நடந்து கொள்ளுங்கள். கூடுமானவரை நீண்ட தூர பயணங்களை தவிர்த்து விடுங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கும் நாளாக இருக்கும். நீங்கள் கேட்காமலேயே உங்களுக்கான மதிப்பும் மரியாதையும் உங்கள் வீடு தேடி வரும். எதிரிகள் எல்லாம் நண்பர்களாக மாறுவார்கள். ஏளனம் பேசியவர்கள் முன்பு, தலைநிமிர்ந்து நிற்பீர்கள். கௌரவம் அந்தஸ்து உயரக்கூடிய இந்த நாளை கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சுடக்கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். இளைஞர்கள், கலைஞர்களுக்கு இன்று புது உத்வேகம் பிறக்கும். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற வேகம் பிறக்கும். சோம்பேறித்தனம் விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் ஆர்வம் அதிகரிக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன கவலை இருக்கும். கணவன் மனைவிக்குள் சின்னதாக வாக்குவாதம், குடும்ப உறவுகளுக்குள் விரிசல் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வார்த்தையில் கவனம் தேவை. முன்கோபம் வேண்டாம். சிந்தித்து நிதானமாக பேசுங்கள். அவசரப்பட்டு எந்த ஒரு வார்த்தையையும் விடாதீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் முழு கவனம் தேவை.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் சோம்பேறித்தனத்தோடு இருப்பீர்கள். உங்களுடைய அன்றாட வேலையை, செய்வதிலேயே தாமதம் வரும். சுறுசுறுப்பு குறைவதன் மூலம் வேலையிலும் வியாபாரத்திலும் சின்னதாக பின்னடைவு வரலாம். இருப்பினும் பெருசாக பாதிப்புகள் வராது. புதிய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டாம். அனுபவசாலிகளை பேச்சை கேட்டு நடந்தால் நன்மை நடக்கும்.