வித்தியாசமான காரசாரமான புதினா வெங்காய சட்னியை 10 நிமிடத்தில் சுலபமாக எப்படி அரைப்பது? இந்த சட்னிக்கு தேங்காய் கூட தேவையில்லை.

pudhina-chutney
- Advertisement -

முந்தைய நாளே புதினாவை வாங்கி  சுத்தப்படுத்தி பிரிட்ஜில் வைத்துக் கொண்டால், இந்த சட்னியை அரைக்க 10 நிமிடங்கள் கூட ஆகாது. சீக்கிரமாக சட்டுன்னு ஆரோக்கியமான ஒரு சட்னியை எப்படி செய்வது. தெரிந்து கொள்வோமா. இட்லி தோசை சப்பாத்தி தயிர் சாதம் இவைகளுக்கு இந்த சட்னி மிகவும் தோதாக இருக்கும். மிக மிக குறைந்த பொருட்களை வைத்து சூப்பரான ஒரு சட்னி ரெசிபி உங்களுக்காக. வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த சட்னியை சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியத்தை தரும்.

onion-cutting

இந்தச் சட்னியை செய்வதற்கு தேவையான பொருட்கள். நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், பூண்டு 7 லிருந்து 10 பல் தோல் உரித்தது, மீடியம் சைஸ் வெங்காயம் – 3 நீளவாக்கில் வெட்டிக் கொள்ள வேண்டும். தக்காளி – 2 கொஞ்சம் பொடியாக வெட்டிக் கொள்ள வேண்டும். சிறிய துண்டு புளி, 1 சிறிய கட்டு புதினா தழைகள், வரமிளகாய் – 4, தேவையான அளவு உப்பு. வெங்காயத்தை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது. கட்டாயம் நீள்வாக்கில் வெட்டினால் தான் சட்னியின் சுவை நன்றாக இருக்கும்.

- Advertisement -

கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அதில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பூண்டு, தக்காளி, புளி, புதினா வரமிளகாய் எல்லா பொருட்களையும் ஒரே சமயத்தில் சேர்த்துவிடுங்கள். அதன் பின்பு கைவிடாமல் 3 லிருந்து 5 நிமிடங்கள் இதை வதக்க வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளுங்கள். புதினா இலைகள் அனைத்தும் வதங்கி சுருங்கி வாசம் வரும்வரை வெங்காயம் தக்காளியையும் வதங்கினால் மட்டுமே போதும்.

pudhina

வெங்காயம் தக்காளி நன்றாக வதங்கி தொக்கு பதத்திற்கு வர வேண்டும் என்ற அவசியம் கிடையாது. வெங்காயம் தக்காளியை 70% வழங்கினால் மட்டுமே போதும். இதை அப்படியே ஒரு தனியாக தட்டில் மாற்றி நன்றாக ஆற வைத்துவிடுங்கள். நன்றாக ஆறிய பின்பு மிக்ஸியில் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு, கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கெட்டிப் பதத்தில் அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இந்த சட்னியை மிக்ஸியில் இருந்து தனியாக ஒரு கிண்ணத்தில் மாற்றி கொள்ளுங்கள். அதன் பின்பு ஒரு தாளிப்பு கரண்டியில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு வரமிளகாய் கறிவேப்பிலை பெருங்காயம் தாளித்து சட்னியில் கொட்டி நன்றாக கிளறி பரிமாறினால் சுவையான காரசாரமான வெங்காயம் புதினா சட்னி தயார். அரைக்கும்போதே வாசனை ஆளைத் தூக்கும்.

mullangi-chutney

இந்த சட்னியில் தேவைப்பட்டால் பூண்டை நீங்கள் அதிகமாக வைத்துக் கொள்ளலாம். உங்கள் சுவைக்கு ஏற்ப காரத்தை அதிகரித்துக் கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். தேங்காய் சேர்க்காமல் ஆரோக்கியமாக இந்த சட்னி ரெசிபியை தேவைப்பட்டால் தேங்காய் சேர்த்தும் அரைத்து பரிமாறலாம். அது உங்களுடைய இஷ்டம்தான். உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் உங்களுடைய வீட்டில் இந்த சட்னியை முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -