- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilஇந்தத் தண்ணீரை உங்கள் தலைமுடியில் தேய்த்து வந்தாலே போதும். 1 முடிக்கு பக்கத்தில் 10 முடிகள்...

இந்தத் தண்ணீரை உங்கள் தலைமுடியில் தேய்த்து வந்தாலே போதும். 1 முடிக்கு பக்கத்தில் 10 முடிகள் வளர ஆரம்பித்து, உங்கள் தலைமுடி சிலநாட்களிலேயே அடர்த்தியாக மாறும்.

- Advertisement -

நம்முடைய தலையில் வழுக்கை தெரிவதற்குக் காரணம் முடிகள் நெருக்கமாக வளராமல் இருப்பது தான். முடிகள் நெருக்கமாக வளர்ந்து விட்டால் முடி அடர்த்தியாக இருக்கும். மண்டையில் வழுக்கை தெரியாமலும் இருக்கும். இதற்கு என்ன செய்வது. முதலில் முடி உதிர்வு கட்டுப்படுத்தப்பட வேண்டும். இரண்டாவது முடிகள் நெருக்கமாக வளர வேண்டும். மூன்றாவது முடிகளை உதிர வைக்கக்கூடிய பொடுகு பிரச்சனை நீங்க வேண்டும். இவை எல்லாவற்றிற்கும் ஒரே தீர்வாக கிடைக்க வேண்டும், அதுவும் சுலபமான தீர்வாக இருக்க வேண்டும், காசும் செலவு ஆகக்கூடாது, பக்கவிளைவும் ஏற்படக்கூடாது என்று நினைப்பவர்களுக்கு இந்த குறிப்பு பயனுள்ளதாக அமையும்.

vendhayam

தலைமுடியின் பல பிரச்சனைகளை சரிசெய்ய நம் வீட்டு சமையல் அறையில் இருக்கக்கூடிய வெந்தயம் மட்டும் போதும். இந்த வெந்தயத்தை 1 ஸ்பூன் அளவு எடுத்து ஒரு டம்ளரில் போட்டு, தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு நாள் இரவு முழுவதும் இந்த வெந்தயம் தண்ணீரில் ஊறட்டும். மறுநாள் காலை இந்த வெந்தயம் ஊற வைத்த தண்ணீரோடு ஒரு அகலமான பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளவேண்டும்.

- Advertisement -

இந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து, வெந்தய தோடு இருக்கும் தண்ணீரை 5 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க வையுங்கள். அதன் பின்பு வெந்தயத்தை மட்டும் ஒரு வடிகட்டியில் மூலம் தனியாக வடிகட்டி எடுத்து விட்டு, ஆறவிட்டு இந்த தண்ணீரை மட்டும் ஒரு சிறிய கிண்ணத்திலோ, ஸ்ப்ரே பாட்டிலில் எடுத்து கொள்ள வேண்டும். இந்தத் தண்ணீரை தயார் செய்து ஃப்ரிட்ஜில் எல்லாம் ஸ்டோர் செய்து வைக்க வேண்டாம். பிரஷ்ஷாக தயார் செய்து பிரஷ்ஷாக பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

vendhayam2

இந்த வெந்தயத் தண்ணீரை தலைமுடி வேர்க்கால்களில் படும்படி நன்றாக ஸ்ப்ரே செய்து ஒரு மணி நேரம் வரை ஊற வைத்து, அதன் பின்பு தலைக்கு குளித்து விட வேண்டும். இந்த தண்ணீரை தலையில் ஸ்பிரே செய்யும் போது தலையில் எண்ணெய் இருக்கக்கூடாது. உங்களது தலை பிரஷ்ஷாக இருக்க வேண்டும். ஸ்ப்ரே பாட்டில் இல்லை என்றால் நல்ல காட்டன் பஞ்சில் இந்த தண்ணீரை தொட்டு மயிர்கால்களில் படும்படி மசாஜ் செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

முந்தைய நாள் தலைக்கு குளித்து தலையை பிரஷ்ஷாக வைத்துக்கொண்டு, அதன் பின்பு வெந்தயத் தண்ணீரை ஸ்பிரே செய்து விட்டு, மீண்டும் தலைக்கு குளிக்க வேண்டும். வாரத்தில் இரண்டு நாட்கள் இப்படி செய்து பாருங்கள். நீங்கள் நம்ப முடியாத அதிசயம் சில நாட்களிலேயே நடக்கும். பொடுகு போன இடமே தெரியாது பார்த்துக்கொள்ளுங்கள்.

vendhayam1

உடனடியாக ரிசல்ட் தெரிய வேண்டும் என்பதற்காக இந்த வெந்தயத் தண்ணீரை ஒரு நாள் இரவு முழுவதும் எல்லாம் உங்களுடைய தலையில் ஊற வைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இப்படி வெந்தயத் தண்ணீரை நிறைய நேரம் தலையில் ஊற வைத்தால் சிலருக்கு தலைவலி வருவதற்கு கூட வாய்ப்பு உள்ளது.

ஏனென்றால் வெந்தயம் குளிர்ச்சி தன்மை கொண்ட ஒரு பொருள் என்பதால் ஒரு மணி நேரம் இந்த தண்ணீரை உங்கள் தலையில் ஊற விடுங்கள். அதேபோல் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் இந்த குறிப்பை பின்பற்றினால் போதும். முயற்சி செய்து பாருங்கள். சில நாட்களிலேயே உங்களுடைய தலைமுடியில் ஒரு வித்தியாசம் தெரியத் தொடங்கும்.

சற்று முன்