- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்தேங்காய் தக்காளி சட்னியை நாளைக்கு இப்படி அரைச்சு பாருங்க! அட்டகாசமான சுவையில் இட்லி தோசைக்கு செம...

தேங்காய் தக்காளி சட்னியை நாளைக்கு இப்படி அரைச்சு பாருங்க! அட்டகாசமான சுவையில் இட்லி தோசைக்கு செம சைட் டிஷ் இது.

- Advertisement -

தக்காளி சட்னியை விதவிதமாக  செய்ய முடியும். தக்காளியில் தேங்காய் சேர்த்து அரைக்க கூடிய ஒரு புதுவிதமான சட்னி ரெசிபியை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வாங்க ரெசிபியை எப்படி செய்யறதுன்னு பார்த்துவிடலாம். அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ளுங்கள். அதில் எண்ணெய் 2 ஸ்பூன் அளவு ஊற்றிக் கொள்ள வேண்டும். அந்த எண்ணெய் காய்ந்ததும் கடுகு – 1 ஸ்பூன், உளுந்து – 1 ஸ்பூன், கடலைப்பருப்பு – 1 ஸ்பூன், இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து முக்கால் பாகம் சிவக்கும் வரை வறுத்துக் கொள்ளவேண்டும்.

coconut

அடுத்த படியாக சீரகம் – 1/2 ஸ்பூன், பூண்டுப்பல் – 2, சிறிய பின்ச் – புளி, இந்த பொருட்களை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். அடுத்தபடியாக வரமிளகாய் – 4, பச்சை மிளகாய் – 2, கருவேப்பிலை – 1 கொத்து, பொடியாக நறுக்கிய தேங்காய் பல் – 1 கைப்பிடி அளவு, இந்த பொருட்களையும் சேர்த்து இரண்டிலிருந்து மூன்று நிமிடம் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். (உங்களுக்கு காரம் அதிகமாக வேண்டுமென்றால் மிளகாயை அதிகமாகவும் வைத்துக் கொள்ளலாம்.)

- Advertisement -

இந்தக் கலவையை நன்றாக ஆற வைத்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் கொரகொரப்பாக பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள். இந்த பொடி அப்படியே மிக்ஸி ஜாரில் இருக்கட்டும்.

tomato

அடுத்தபடியாக ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு, 3 மீடியம் சைஸ் தக்காளிகளை வெட்டிப் போட்டு, 1/4 ஸ்பூன் உப்பு சேர்த்து, நன்றாக இரண்டு நிமிடங்கள் வரை வதக்க வேண்டும். வதக்கிய தக்காளியை, ஒரு மூடி போட்டு 2 லிருந்து 3 நிமிடங்கள் மிதமான தீயில் வேக வைத்து எடுத்து கொள்ள வேண்டும். தக்காளியின் பச்சை வாடை முழுமையாக நீங்க வேண்டும். வதக்கிய இந்த தக்காளியை நன்றாக ஆறவைத்து, மிக்ஸி ஜாரில், மசாலாப் பொருட்களை அரைத்து வைத்திருக்கிறோம் அல்லவா, அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இப்போது தக்காளியையும், தேங்காய் சேர்த்த மசாலா பொருட்களையும் சேர்த்து, சட்னிக்கு தேவையான அளவு உப்பு போட்டு, கொஞ்சமாக தண்ணீர் விட்டு எல்லா பொருட்களையும் மீண்டும் அரைத்து கொள்ளுங்கள். நிறைய தண்ணீர் ஊற்ற வேண்டாம் கொஞ்சம் சட்னி கெட்டியாக இருந்தால் தான், இந்த சட்னி சுவையாக இருக்கும். அரைத்த இந்தச் சட்னியை ஒரு கிண்ணத்தில் மாற்றி கொள்ளுங்கள். (முதலில் மசாலா பொருட்களுடன் தேங்காயை சேர்த்து வறுத்து, மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து, அந்த பொடியுடன், வதக்கிய தக்காளி விழுதையும் சேர்த்து அரைக்க வேண்டும் அவ்வளவுதான். தேங்காய் நன்றாக அரைபட வேண்டும் என்பதற்காகத் தான், முதலில் தேங்காயை மிக்ஸியில் அரைத்துக்.)

சட்னிக்கு 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெயில், கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய், பெருங்காயம், சேர்த்து ஒரு தாளிப்பினை கொடுக்க வேண்டும். அவ்வளவு தான். அட்டகாசமான தேங்காய் தக்காளி சட்னி தயார். இது இட்லி தோசை பூரி சப்பாத்தி சாதம் எதற்கு வேண்டுமென்றாலும் சைடிஷாக சூப்பராக இருக்கும். வித்தியாசமான சுவையில் செய்யக்கூடிய இந்த தக்காளி சட்னி ரெசிபியை மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்