- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்இவ்வளவு ஈசியான ஸ்வீட்டை ஒரு முறை செய்து பாருங்கள். மீண்டும், மீண்டும் சுவைக்கத் தோன்றும்

இவ்வளவு ஈசியான ஸ்வீட்டை ஒரு முறை செய்து பாருங்கள். மீண்டும், மீண்டும் சுவைக்கத் தோன்றும்

- Advertisement -

ஸ்வீட் செய்வது என்றாலே மிகவும் கடினமான வேலை என்று அதனை அடிக்கடி செய்வதென்பது கிடையாது. ஆனால் ஒருமுறை இந்த ஸ்வீட்டை முயற்சி செய்து பாருங்கள். ஸ்வீட் செய்வது என்பது எவ்வளவு ஈசியான வேலையா? என்று உங்களுக்கு தோன்றும். மிகவும் எளிமையான முறையிலும், நாவில் வைத்த உடனே கரையும் சுவையுடனும் இருக்கக்கூடிய இந்த வீட்டை எப்படி செய்யலாம் என்று அரிய மேலும் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

inippu

ஸ்வீட் செய்ய தேவையான பொருட்கள்:
மைதா மாவு – ஒரு கப், பால்பவுடர் – அரை கப், சர்க்கரை – அரை கப், ஏலக்காய்த்தூள் – அரை ஸ்பூன், நெய் – ஒரு ஸ்பூன், உப்பு – கால் ஸ்பூன்.

- Advertisement -

முதலில் அடுப்பை பற்ற வைத்து அதன் மீது ஒரு அகன்ற பாத்திரத்தை வைத்து சூடானதும் அதில் ஒரு கப் சர்க்கரையை சேர்த்துக் கொண்டு, அதனுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து, நன்றாக கலந்து விட வேண்டும். சிறிது நேரத்தில் சர்க்கரை கரைந்து நன்றாக கொதிக்க ஆரம்பிக்கும். ஒரு கம்பிப் பதம் வரும் வரை கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

sakkarai pagu

பின்னர் அதனுடன் மைதா மாவு, உப்பு மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து, சிறிது நேரம் கிளறி கொண்டே இருக்க வேண்டும். அவ்வாறு கிளறிக்கொண்டே இருக்கும் பொழுது மாவு கட்டி படாமல் சர்க்கரைப் பாகுடன் நன்றாக கலந்து வரும். இதனுடன் அரை ஸ்பூன் நெய் சேர்த்து, அரை கப் பால் பவுடர் சேர்த்து, மீண்டும் சிறிது நேரம் நன்றாக கலந்து விட்டுக் கொண்டே இருக்கவேண்டும். கொஞ்சம் நேரத்தில் மாவு நன்றாக வெந்து ஒரு இறுகிய பதத்திற்கு வந்ததும், அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

- Advertisement -

அதன் பின்னர் ஒரு பெரிய தட்டில் அரை ஸ்பூன் நெய் சேர்த்து, தட்டு முழுவதும் தடவி விட வேண்டும். பிறகு தயார் செய்து வைத்துள்ள மாவினை தட்டில் சேர்த்து நன்றாக பரப்பி விட வேண்டும். பிறகு அதனை ஃப்ரிட்ஜில் வைத்து 15 நிமிடங்கள் கழித்து எடுக்க வேண்டும். பின்னர் அதனை ஐந்து நிமிடங்கள் கழித்து உங்களுக்கு வேண்டிய வடிவில் அதாவது ஏதேனும் ஒரு சிறிய மூடியை பயன்படுத்தி வட்ட வடிவிலோ, அல்லது சதுர வடிவிலோ இவ்வாறு உங்களுக்கு விருப்பமான வடிவங்களில் சிறிய சிறிய துண்டுகளாக செய்து, எடுத்துக் கொள்ள வேண்டும்.

inippu

பின்னர் சிறிதளவு பாதாம் பருப்பினை எடுத்துக் கொண்டு, அவற்றை இரண்டு துண்டுகளாக உடைத்து, பின்னர் வெட்டி வைத்துள்ள ஸ்வீட் துண்டுகள் ஒவ்வொன்றின் மீதும் வைத்து, சாப்பிட கொடுக்கலாம். இதன் சுவை பால்கோவாவின் சுவையை போன்றே இருக்கும். வாயில் வைத்த உடனே கரைந்துவிடும். இவ்வளவு சுலபமான ஸ்வீட்டினை இன்றே உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்.

சற்று முன்