- Advertisement -
Homeவீட்டு தோட்டம்உங்க வீட்டுலயும் சிறிய தொட்டியில் காய்கறிகள் கொத்துக்கொத்தாக காய்க்கணுமா? அதுக்கு காசு கொடுத்து எந்த உரத்தையும்...

உங்க வீட்டுலயும் சிறிய தொட்டியில் காய்கறிகள் கொத்துக்கொத்தாக காய்க்கணுமா? அதுக்கு காசு கொடுத்து எந்த உரத்தையும் வாங்க தேவையில்லை! இதை செய்தாலே போதும்.

- Advertisement -

எல்லோருக்குமே இயற்கையான காய்கறிகளை வாங்கி சாப்பிட வேண்டும் என்கிற ஆசை இருக்க தான் செய்யும். கடைகளில் ரசாயன பூச்சிக் கொல்லிகள் தெளிக்கப்பட்ட காய்கறிகளை தான் நாம் இன்று வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். அதே காய்கறிகள் மூலம் வரக்கூடிய விதைகளை தான் இயற்கை விதைகள் என்று விற்பனைக்கும் வந்து கொண்டிருக்கின்றன. அந்த பூச்சிக் கொல்லிகள் தெளிக்கப்பட்ட காய்கறிகள் மூலம் வரும் விதைகளும் பூச்சிக்கொல்லி மருந்தின் தாக்குதலுக்கு உள்ளானவைத் தான்.

gardening3

எனவே இயற்கையாக கிடைக்கும் காய்கறிகளை வாங்கி அதன் விதைகளை இந்த முறையில் நீங்கள் வீட்டிலேயே சிறிய தொட்டிகளில் கூட பயிரிட்டால் கொஞ்ச காலத்திலேயே அதிகமான காய்கறிகளை அள்ளி விடலாம். இதற்கு காசு கொடுத்து நிறைய மண்புழு உரம், தொழு உரம் போன்ற உரங்களை வாங்க வேண்டிய அவசியம் கூட இல்லை. அதற்கு மாற்றாக எல்லா வகையான சத்துகளும் கிடைக்கக் கூடிய இந்த ஒரு உரத்தை நீங்கள் வீட்டிலேயே எளிமையான முறையில் தயார் செய்து போடலாம். அது என்ன? எப்படி செய்ய வேண்டும்? என்கிற ரகசியத்தை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

- Advertisement -

எல்லா வகையான தானிய செடி வகைகளும் தன்னுடைய வேர்களில் நைட்ரஜன் என்னும் சத்தை பொதிந்து வைத்துள்ளன. இந்த நைட்ரஜன் சத்து இருக்கும் வேர் பகுதி மற்றும் அதனுடன் கூடிய மற்ற சத்துக்களையும் நாம் எளிதாக பெற நம் வீட்டில் இருக்கும் தானிய வகைகளை செடிகளாக முதலில் வளர்க்க வேண்டும். உங்களிடமிருக்கும் எள்ளு, உளுந்து, சோளம், பச்சைப்பயறு, தட்டைப் பயறு போன்ற ஏதாவது ஒரு தானியத்தை முதலில் மண்ணில் புதைத்து வளர செய்யுங்கள்.

gardening2

தானிய வகைகள் மடமடவென்று 40 நாட்களில் இலை, தழைகளை விட்டு அதன் காய்களையும் காய்க்க ஆரம்பித்து விடும். உதாரணத்திற்கு இப்பொழுது நீங்கள் பச்சை பயறை எடுத்துக் கொள்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒரு டீஸ்பூன் அளவிற்கு பச்சை பயறை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை சுமார் 8 மணி நேரம் அளவிற்கு தண்ணீரில் ஊற விட்டுக் கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் ஏதாவது ஒரு சிறிய மண் தொட்டியில் மண்ணை கிளறி அதில் இதை விதைத்து மேலே மண் போட்டு மூடி தண்ணீரை தெளித்து விடுங்கள்.

- Advertisement -

40 நாட்களில் மளமளவென சூப்பராக இலைகளும், காய்களும் காய்க்கத் துவங்கும். இதன் வேர்களில் நைட்ரஜன் சத்தும், அதன் இலை, பூ, காய் போன்றவற்றில் நமக்கு பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் சத்தும் அதிக அளவில் கிடைக்கும். நாற்பத்தி ஐந்து நாட்களுக்கு பிறகு இதனை வேரோடு பிடுங்கி வேரையும், செடிகளையும் சேர்த்து அரிவாளால் சிறிய சிறிய அளவில் கத்தரித்து வைத்துக் கொள்ள வேண்டும். இதனை உரமாக நீங்கள் எந்த காய்கறிகளை வளர்க்க விரும்பினாலும், அந்த காய்கறிகளை வளர்க்க வேண்டிய தொட்டிகளில் இருக்கும் மண்ணை தோண்டி தூவி கொள்ளுங்கள். அதன் மீது மீண்டும் மண்ணை போட்டு இந்த உரத்தைப் போட்டு கொள்ளுங்கள்.

veggitable-plants

பிறகு மீண்டும் மண்ணை கொண்டு நிரப்பி பத்து நாட்கள் வரை அப்படியே விட்டு விடுங்கள். இவை நன்கு மண்ணுடன் சேர்ந்து மக்கிப் போய் நமக்கு தொழு உரம், மண்புழு உரம் கொடுக்க வேண்டிய எல்லா வகையான சத்தையும் கொடுத்து விடும். அதன் பிறகு இந்த தொட்டியில் நீங்கள் தக்காளி, வெண்டைக்காய், கத்தரிக்காய், அவரைக்காய், மிளகாய், கொடி வகையான எல்லா வகை காய்கறிகளையும் போட்டு வளர்த்து வந்தால் பத்து பைசா செலவில்லாமல் கொத்துக் கொத்தாக காய்கறிகளை வீட்டிலேயே இயற்கையாக விளைவித்து அறுவடை செய்து மகிழலாம். நீங்களும் ஒரு முறை முயற்சி செய்து பார்த்து பயனடையுங்கள்.

சற்று முன்