- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஉங்கள் வீட்டில் பணம் நகை சேர வெந்தயத்துடன் இந்த பொருட்களை சேர்த்து பீரோவில் வைத்து விடுங்கள்....

உங்கள் வீட்டில் பணம் நகை சேர வெந்தயத்துடன் இந்த பொருட்களை சேர்த்து பீரோவில் வைத்து விடுங்கள். அள்ள அள்ள குறையாத செல்வங்கள் உங்கள் வீட்டு அலமாரியை நிறைத்துவிடும்

- Advertisement -

நமது வீட்டில் பணமும், நகையும் நிறைந்திருக்க வேண்டுமென்ற ஆசை அனைவருக்குமே இருக்கும். ஆனால் இந்த பரிகாரத்தை மட்டும் செய்து பாருங்கள் பணமும், நகையுமே தானாக ஆசைப்பட்டு நம் வீடு தேடி வரும். அதுமட்டுமல்லாமல் நமது வீடு செல்வ வளத்துடனும், லஷ்மி கடாட்சத்துடனும் இருக்கும். வீட்டிலுள்ள பெண்கள் குலதெய்வத்தை வேண்டி முறையாக இந்த பரிகாரத்தை செய்து வருவதன் மூலம் கணக்கில் அடங்கா செல்வங்கள் நம் வீட்டில் நிறைந்திருக்கும். இவ்வாறு செல்வம் சேர்வதற்கான பரிகாரம் என்ன என்பதனை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

vijaya-lakshmi

ஒருவர் அதிர்ஷ்டசாலியாக இருப்பதற்கு புதன் பகவானின் ஆசீர்வாதம் நிச்சயம் தேவைபடுகிறது. புதன் பகவானின் பார்வை மட்டும் நம்மீது விழுந்து விட்டால் போதும் எந்தவகையிலும் தடையில்லாமல் பணம் நம்மிடம் வந்து சேர்ந்து கொண்டே இருக்கும். நம் வீடு அஷ்ட லட்சுமி கடாட்சம் நிறைந்து குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கி வழியும்.

- Advertisement -

புதன் பகவான் ஆசி பெற்றவர்கள்
மிகவும் புத்திசாலிகளாக இருப்பார்கள். இவர்களின் புத்திக்கூர்மையையும், திறமையையும் பயன்படுத்தி சிறிதளவு முயற்சித்தால் போதும். நிச்சயம் இவர்களால் பணத்தையும், நகையையும் தன்வசம் ஈர்க்க முடியும். இவ்வளவு சிறப்புமிக்க குருபகவானின் ஆசீர்வாதம் நமக்கு கிடைக்க குரு பகவானுக்குரிய தானியமான இந்த வெந்தயத்துடன் சில பொருட்களை சேர்த்து வைப்பதன் மூலம் பணவரவை அதிகரிக்க முடியும்.

green

ஒரு பச்சை நிற துணியை எடுத்துக் கொண்டு அதில் ஒரு ஸ்பூன் வெந்தயம், சிறிய துண்டு பச்சை கற்பூரம் மற்றும் தங்கம், வெள்ளி, செம்பு இவை அனைத்தையும் அதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். தங்கம் வெள்ளி செம்பு போன்ற உலோகங்களால் செய்யப்பட்ட ஏதேனும் ஒரு பொருள், அது நீங்கள் பயன்படுத்தும் பொருளாக இருந்தால் அதனை மஞ்சள் நீரில் கழுவி விட்டு அதன்பின் இவற்றுடன் வைக்க வேண்டும்.

- Advertisement -

இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து ஒரு முடிச்சாக கட்டிக்கொண்டு அதன்மீது மஞ்சள் மற்றும் குங்குமம் பொட்டு வைக்க வேண்டும். பின்னர் இந்த முடிச்சை வீட்டின் பூஜை அறையில் வைத்து தீப தூப ஆராதனை காண்பித்து உங்கள் குலதெய்வத்தை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

pachai-karpooram1

அதன் பின் இந்த முடிச்சை பீரோவில் நீங்கள் பணம் அல்லது நகை வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். வாரம் ஒரு முறை இதற்கு தூப ஆராதனை காண்பித்து வணங்கி வரவேண்டும். ஆறு மாதத்திற்கு ஒருமுறை இந்த முடிச்சை கழற்றி இதிலிருக்கும் வெந்தயத்தை காக்கை, குருவிகளுக்கு உணவாக அளித்து விட்டு, பச்சை கற்பூரத்தை நீரில் போட்டு விட வேண்டும். பின்னர் இந்த பச்சை நிற துணியையும் சுத்தம் செய்து, இதில் இருக்கும் உலோகங்களை மட்டும் அப்படியே வைத்துக் கொண்டு, வெந்தயம் மற்றும் பச்சை கற்பூரத்தை புதியதாக மாற்றி, இதனுடன் வைத்து மீண்டும் முடிச்சுப் போட்டு பீரோவில் வைத்து விடவேண்டும்.

bero1

இவ்வாறு நாம் செய்து வருவதன் மூலம் குரு பகவான் ஆசி முழுவதுமாக கிடைத்து நமது வீடு எப்பொழுதும் லட்சுமி கடாட்சத்துடன் பணமும், நகையும் நிறைந்ததாக இருக்கும்.

சற்று முன்