பெண்கள் எப்பொழுதும் தாங்கள் அழகாக இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். அதிலும் முக்கியமாக தங்கள் முகத்தை அழகாக பராமரிப்பதில் மிகவும் கவனமாக இருப்பார்கள். இதற்காக எவ்வளவு நேரம் செலவிடுகிறோம், எவ்வளவு பணம் செலவிடுகிறோம் என்றெல்லாம் யோசித்து கூட பார்க்க மாட்டார்கள். அழகு என்று வந்து விட்டால் போதும் மற்றதெல்லாம் பிறகுதான். இவ்வாறு தங்கள் அழகிற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும் பெண்கள் சிலருக்கு முகத்தில் தேவையற்ற முடிகள் அதிகமாக இருக்கும். அதனை நீக்குவதற்காக எத்தனை முறை பியூட்டி பார்லர் சென்று வந்தாலும் அதற்கான நிரந்தர தீர்வு கிடைக்காது. இவ்வாறு பெண்களின் அழகை கெடுக்கும் தேவையற்ற முடிகளை அகற்றுவதற்கான் க்ரீமை எவ்வாறு வீட்டிலேயே செய்வது என்பதைப் பற்றி தான் இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

தேவையான பொருட்கள்:
கஸ்தூரி மஞ்சள் – ஒரு ஸ்பூன், சோள மாவு – 2 ஸ்பூன்.
செய்முறை:
முதலில் அடுப்பை பற்ற வைத்து, அதன் மேல் ஒரு கிண்ணத்தை வைத்து, ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து, அதனுடன் ஒரு ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.

பின்னர் ஒரு சிறிய கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் சோள மாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்துக் கொண்டு, இந்த கலவையை கொதித்துக் கொண்டிருக்கும் மஞ்சள் நீரில் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவேண்டும். பின்னர் அடுப்பை அனைத்து இந்த கலவையை நன்றாக ஆற விட வேண்டும்.
இந்தக் கலவை நன்றாக ஆறி சிறிது கெட்டியானதும் முகத்திலும், உடம்பிலும் தேவையற்ற முடிகள் இருக்கும் இடத்தில் கைகளால் தடவி விட வேண்டும். இந்த க்ரீமை தடவ பொழுது முடிகளுக்கு எதிர்திசையில் தடவி விடவேண்டும். அதன்பின் 20 நிமிடங்கள் இவற்றை அப்படியே நன்றாக காய விட வேண்டும். பிறகு கைகளை வைத்து வட்ட வடிவில் சிறிது நேரம் தேய்த்துவிட்டு முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு முதன் முறை செய்யும் பொழுது சில முடிகள் மட்டுமே உதிர்ந்திருக்கும். இதனை தொடர்ந்து ஏழு நாட்கள் செய்து வந்தீர்கள் என்றால் தேவையற்ற முடிகள் அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் அனைத்தும் உதிர்ந்து விடும்.

இதனை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். எந்தவித அலர்ஜியும் ஏற்படாது. கஸ்தூரி மஞ்சள் உடலுக்கும், சருமத்திற்கும் மிகுந்த நன்மையையே தரவல்லது. இவ்வாறு ஏழு நாட்கள் தொடர்ந்து செய்து வர தேவையற்ற முடிகள் அனைத்தும் உதிர்ந்து முகம் பளிச்சென்றும் மிருதுவாகவும், நல்ல அழகுடனும் மாறி இருக்கும்.

குறிப்பு: வீட்டில் சோளமாவு இல்லாதவர்கள் கஸ்தூரி மஞ்சளுடன் 2 ஸ்பூன் கோதுமை மாவையும் இவ்வாறு நீரில் கரைத்து அதன்பின் கொதிக்க வைத்து கெட்டியானதும் அவற்றை நன்றாக ஆறவைத்து உடம்பில் தேவையற்ற முடிகள் இருக்கும் இடத்தில் தடவி மசாஜ் செய்து கழுவி விட்டால் போதும். தேவையற்ற முடிகள் சிறிது சிறிதாக உதிர ஆரம்பிக்கும். இவ்வாறு இரண்டு முறையில் ஏதேனும் ஒரு முறையை பயன்படுத்தி நல்ல அழகை பெற முடியும்.