குழந்தைகளுக்கு ஈவ்னிங் டைமில் சாப்பிடுவதற்கு சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபியை கோதுமை மாவை வைத்து எப்படி செய்வது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். மொறு மொறுன்னு டீ கூட இந்த சினேக்ஸ் கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விருப்பமாக சாப்பிடுவார்கள். சரி வாங்க நேரத்தைக் கடத்தாமல் ரொம்ப ரொம்ப ஈசியான ஸ்நாக்ஸ் ரெசிபியை நாமும் தெரிஞ்சுக்கலாம்.

முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் 1 கப் அளவு கோதுமை மாவை போட்டுக்கொள்ள வேண்டும். இந்த கோதுமை மாவுடன் மிளகாய்தூள் – 1/2 டீஸ்பூன், உப்பு – 1/2 ஸ்பூன், மஞ்சள்தூள் – 2 சிட்டிகை, பெருங்காயம் தூள் – 2 சிட்டிகை, சேர்த்து முதலில் நன்றாக கலந்துவிட வேண்டும். அதன் பின்பு சிறிய தாளிப்பு கரண்டியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதை நன்றாக சூடு செய்து அதையும் இந்த மாவோடு சேர்த்து ஒரு ஸ்பூன் விட்டு முதலில் மாவை நன்றாக கலந்து விட்டு கொள்ளுங்கள். (உங்களுக்கு தேவைப்பட்டால் கருவேப்பிலைகளை மிகவும் பொடியாக நறுக்கவும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்.)
அதன் பின்பு எண்ணெயின் சூடு லேசாக ஆறிய பின்பு, உங்களது கையை வைத்து அந்த எண்ணெய் மாவில் படும்படி நன்றாக பிசைந்து கொடுத்துவிட்டு, அதன் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை ஊற்றி இந்த மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளுங்கள். மாவை பிசைந்த உடன் ஒரு மூடி போட்டு 10 நிமிடங்கள் மாவை ஊற வைத்துவிட வேண்டும்.

அதன் பின்பு இந்த கோதுமை மாவை சிறிய சிறிய உருண்டைகளாக தயார் செய்து சப்பாத்திக்கு தேய்ப்பது போலவே கோதுமை மாவை தொட்டு மெல்லிசாக தேய்த்து உங்கள் விருப்பம்போல எந்த வடிவத்தில் வேண்டுமென்றாலும் வெட்டிக் கொள்ளலாம். ஆனால் இந்த மாவை உங்களுக்கு தேவையான வடிவத்தில் வெட்டிவிட்டு நடுநடுவே சின்னசின்ன ஓட்டைகளை போட்டுக் கொள்ளுங்கள். அப்படி இல்லை என்றால் கத்தியை வைத்து மாவுக்கு நடுவே சின்ன சின்ன கீறல்களை கீறிவிட வேண்டும். இல்லை என்றால் இந்த சிப்ஸ், பூரி போல உப்பி வர தொடங்கி விடும்.
எண்ணெயில் தயாராக இருக்கும் இந்த சிப்ஸ் துண்டுகளை போட்டு பொரித்து எடுக்க வேண்டியது தான். அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி மிதமாக சூடு செய்து கொள்ள வேண்டும். எண்ணெய் ரொம்பவும் சூடாகி விட்டால் இந்த மாவை போட்டோவுடன் சிவந்து கருகி போய்விடும். மிதமான தீயில் அடுப்பை வைத்து, மிதமான சூட்டில் எண்ணெயை காய்ச்சி பக்குவமாக பொன்னிறத்தில் இதை பொரித்து எடுத்தால் சூப்பரான கோதுமை மாவு கார சிப்ஸ் தயார்.

பொரித்த இந்த கோதுமை மாவு கார சிப்ஸ் அப்படியே சாப்பிட்டால் சுவையாகத்தான் இருக்கும். இதன் மேலே கொஞ்சமாக சாட் மசாலா வையும் மிளகுத்தூளையும் தூவி சாப்பிட்டால் இன்னும் இன்னும் சூப்பராக இருக்கும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சி இருந்தா உங்க வீட்ல ட்ரை பண்ணி தான் பாருங்களேன். சிம்பிளான ரெசிபி, சூப்பர் ரெசிபி, அதேசமயம் செலவில்லாத ரெசிபியும் கூட.