- Advertisement -
Homeவீட்டு குறிப்புகள்வீட்டில் இருக்கும் இந்த இரண்டு பொருட்களை வைத்தே பழைய தங்க நகைகளை புதியது போல் பளபளவென்று...

வீட்டில் இருக்கும் இந்த இரண்டு பொருட்களை வைத்தே பழைய தங்க நகைகளை புதியது போல் பளபளவென்று மாற்ற முடியும்

- Advertisement -

தங்க நகைகள் வாங்கும்போது அதன் தரத்தையும், அழகான வடிவமைப்பையும் பார்த்து தான் வாங்குகின்றோம். இந்த தங்க நகைகளை தொடர்ந்து அணிந்து கொண்டிருக்கும் பொழுது இதன் பளபளப்பு தன்மை குறைய ஆரம்பிக்கிறது. தங்க நகைகளை எவ்வளவு பத்திரமாக வைத்திருந்தாலும் அவை வாங்கும் போது இருந்த ஜொலிஜொலிப்பு இருப்பதில்லை. இவற்றைச் சுத்தம் செய்வதற்காக நாம் கடைகளில் கொடுத்து பாலிஷ் செய்கிறோம். இவ்வாறு கடைகளில் கொடுத்து பாலிஷ் செய்வதை விட எளிமையாக வீட்டில் இருக்கும் 2 பொருட்களை வைத்தே சுத்தம் செய்து கொள்ளலாம். வாருங்கள் இதனை எப்படி சுத்தம் செய்வது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

jwe

கடைகளில் தங்க நகைகளை பாலிஷ் செய்ய கொடுப்பதன் மூலம் அவற்றிலிருந்து ஒரு குண்டுமணி அளவு தங்கமாவது நிச்சயம் குறைந்துவிடும். இதற்குக் காரணம் அவர்கள் அந்த நகையை கையாளும் விதமாகும். அவ்வாறு அவர்கள் அதிகப்படியான அழுத்தத்தையும், வேதியியல் பொருட்களையும் தங்க நகைகளின் மீது பயன்படுத்தும் போது நமது தங்கத்தின் அளவு குறைய ஆரம்பிக்கிறது. இதனால் நமக்கு தான் அதிக அளவில் நஷ்டம் ஏற்படுகிறது. இவ்வாறு கடைகளில் கொடுத்து நாம் நஷ்டம் அடைவதற்குப் பதிலாக நமது வீட்டிலேயே அதனை சுத்தம் செய்து கொள்ளலாம். 100 சதவிகித பலன் கிடைக்கவில்லை என்றாலும் நிச்சயம் 90 சதவிகித பலனாவது கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் தங்கத்தில் எந்தவிதக் குறையும் ஏற்படாது.

- Advertisement -

அதற்காக நமக்குத் தேவைப்படும் பொருட்கள் மஞ்சள்தூள் மற்றும் பல் துலக்க பயன்படுத்தும் பல்பொடி. முதலில் ஒரு மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பின் பல் துலக்க பயன்படுத்தும் கோல்கேட் பல்பொடியில் இருந்து ஒரு ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

pal

அடுத்து இந்த கலவையில் அழுக்குப் படிந்திருக்கும் தங்க நகையை சேர்க்கவேண்டும். இந்த நகை அப்படியே 10 நிமிடம் இந்த தண்ணீரில் ஊற வேண்டும். அதன் பிறகு ஒரு சிறிய தட்டில் ஒரு ஸ்பூன் பல்பொடியை எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு பல் துலக்க பயன்படுத்தும் ஒரு பிரஷ்ஷையும் எடுத்துக்கொண்டு தண்ணீரில் ஊற வைத்த நகையை எடுத்து சுத்தம் செய்ய ஆரம்பிக்க வேண்டும்.

- Advertisement -

பிரஷ்ஷில் பல் பொடியை தொட்டுக்கொண்டு நகையின் மீது லேசாக தேய்த்து விட வேண்டும். இவ்வாறு நகை முழுவதும் அதிக அளவு அழுத்தம் கொடுக்காமல் லேசாக மெதுவாக தேய்த்து விட வேண்டும். ஒரு இரண்டு நிமிடம் நன்றாக தேய்த்து விட்டு அதனை இரண்டு, மூன்று முறை தண்ணீரில் கழுவ வேண்டும். பிறகு ஒரு காட்டன் துணியை வைத்து நன்றாக துடைத்துவிட

goldவேண்டும்.

இவ்வாறு செய்த பின் தங்க நகையை பார்த்தோமென்றால் அவை முன்பு இருந்ததை விட இப்பொழுது பள பளவென்று மாறி இருக்கும். அந்த நகையில் இருந்த அழுக்குகள் அனைத்தும் சுத்தமாகி நகை பளிச்சென்று புதியது போல் இருக்கும்.

சற்று முன்