- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஇறந்தவர்கள் உங்களுடைய கனவில் ஒருபோதும் இப்படி வரவே கூடாது. கனவில் இறந்தவர்கள் இப்படி வந்தால் தீராத...

இறந்தவர்கள் உங்களுடைய கனவில் ஒருபோதும் இப்படி வரவே கூடாது. கனவில் இறந்தவர்கள் இப்படி வந்தால் தீராத துயரம் உங்களுக்கு காத்திருப்பதாக தான் அர்த்தம்.

- Advertisement -

நாம் தூங்கும் போது கனவுகள் வருவதற்கு நிறைய காரணங்கள் உள்ளது. கனவு காண்பது என்பது ஒரு வியாதி அல்ல. உங்களுடைய மனதை அலைபாய விடாமல் ஒருநிலைப்படுத்தி சந்தோஷமாக, நிம்மதியாக இறைவனை நினைத்து தூங்கச் சென்றால் எந்த பிரச்சினையும் கிடையாது. ஏதாவது ஒரு விஷயத்தை மனதில் போட்டுக்கொண்டு குழப்பிக் கொண்டே தூங்கச் சென்றால் நிச்சயமாக நம்முடைய எண்ண அலைகள் கனவுகளாக மாறி வெளிப்படத்தான் செய்யும். அந்த வரிசையில் உங்களுடைய வீட்டில் இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன், இதோடு சேர்த்து இன்னும் சில கனவு பலன்கள், கெட்ட கனவு வந்தால் இரவில் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றித் தெரிந்து கொள்வதற்காகவே இந்த பதிவு.

sleepless

முதலில் உங்களுடைய வீட்டிலும் சரி அல்லது உங்களுடைய சொந்த பந்தங்களும் சரி யார் இருந்திருந்தாலும் அவர்கள் ஒரு வருடத்திற்குள் உங்களுடைய கனவிலோ, உங்களுடைய குடும்பத்தில் இருப்பவர்களுடைய கனவிலோ வரவே கூடாது. இருந்தவர்கள் இப்படி ஒரு வருடத்திற்குள் வீட்டில் இருப்பவர்களுடைய கனவில் வருகிறார்கள் என்றால் இறந்தவர்களுடைய ஆத்மா நிம்மதியாக இல்லை என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

இறந்தவர்களுடைய மனதில் நிறைவேறாத ஆசை இருந்திருக்கலாம். நீங்கள் செய்யக்கூடிய இறுதிச் சடங்கில் ஏதேனும் குறை குற்றங்கள் இருந்திருக்கலாம். இப்படி ஏதோ ஒரு பிரச்சினையை உணர்த்துவதற்காகவே இறந்தவர்கள் ஒரு வருடத்திற்குள் வீட்டில் இருப்பவர்களுடைய கனவில் வருவார்கள். இப்படி உங்களுடைய கனவில் இறந்தவர்கள் யாரேனும் ஒரு வருடத்திற்குள் வந்தால் அவர்களுக்கு என்ன குறை இருந்திருக்கும் என்று நீங்களே சிந்தித்து பாருங்கள். அவர்களுடைய நிறைவேறாத ஆசையை ஏதாவது இருந்தால் அதை நீங்கள் நிறைவேற்றி வைக்கும் பட்சத்தில் அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இறந்தவர்கள் ஒரு வருடம் கழித்து எப்போது கனவில் வந்தாலும் அதன் மூலம் எந்த ஒரு தவறும் கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

Dream

அடுத்தபடியாக சில பேருக்கும் எப்போது பார்த்தாலும் அடிக்கடி தண்ணீர் கனவில் வந்து கொண்டே இருக்கும். தண்ணீர் அடித்துக் கொண்டு வருவது போல, தண்ணீர் இவர்களை அடித்து கொண்டு செல்வது போல, கனவு வந்தால் உங்களுடைய வாழ்க்கையில் எதிர்பாராத சிக்கலில் நீங்கள் சிக்கிக் கொள்ள வாய்ப்பு உள்ளதாக அர்த்தம் என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

சில பேர் அடிக்கடி தங்களுடைய கனவில் விருந்துக்கு செல்வது போல, கல்யாணத்திற்கு செல்லுவது போல, சடங்குக்கு செல்வது போல, கனவு கண்டு கொண்டே இருப்பார்கள். இப்படிப்பட்ட கனவு வந்தால் எதிர்பாராத சுபக் கடன்கள் உருவாகும் என்று சொல்லப்பட்டுள்ளது.

Monkey

உங்களுடைய கனவில் குரங்கு சம்பந்தப்பட்ட எந்த விஷயம் வந்தாலும் சரி, குரங்கு உங்களுடைய கனவில் தென்பட்டால் நீங்கள் உஷாராகி கொள்ள வேண்டும். ஏதோ ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொள்ள போகிறீர்கள் என்று உங்களுக்கு உணர்த்துவதாக சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

thambulam

நிறைய பேருக்கு தெய்வம், கனவில் தோன்றும். எலுமிச்சை பழம், தேங்காய், வெற்றிலைப் பாக்கு, இப்படி பூஜை சம்பந்தப்பட்ட எந்த பொருட்கள் கனவில் வந்தாலும் உங்களுக்கு எதிர்பாராதவிதமாக ஏதோ ஒரு யோகம் வருவதாக அர்த்தம் என்று சொல்லப்பட்டுள்ளது.

dream

இரவு 10 மணியிலிருந்து 7 மணிக்குள் நீங்கள் காணக்கூடிய கனவு பளிப்பதாக இருந்தால் ஒரு மாதத்திற்குள் பளித்து விடும். நள்ளிரவு 1 மணியிலிருந்து அதிகாலை வேளை 4 மணிக்குள் நீங்கள் காணக்கூடிய கனவு 15 நாட்களுக்குள் பளிப்பதாக இருந்தால் அது பலித்துவிடும். அதிகாலை 4 மணியிலிருந்து 6 மணிக்குள் நீங்கள் காணக்கூடிய கனவு ஏழு நாட்களுக்குள் பலித்துவிடும். நீங்கள் கண்ட கனவு பலிக்கவில்லை என்றால் அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை. ஒரு மாதத்திற்கு பின்பு நீங்கள் கண்ட கனவின் மூலம் உங்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் வராது. பகல் கனவு பளிப்பதற்கு வாய்ப்புகள் குறைவு.

dreams

எதை நினைத்தும் மனதைக் குழப்பிக்கொள்ள வேண்டாம். மேல் சொன்ன விஷயங்கள் அனைத்தும் சாஸ்திரப்படி எல்லோருக்கும் பொதுப்படையாக கணிக்கப்பட்டு சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் தான். இவையெல்லாம் கனவில்வந்தால், இது நடந்தே தீரும் என்று சொல்லுவதற்கு நான் யாருமே கடவுள் கிடையாது.

sleep

கெட்ட கனவு வந்தால் எழுந்து முகம் கைகால்களை கழுவிக்கொண்டு விபூதி பூசிக்கொண்டு, ஒரு கல் உப்பை வாயில் போட்டுக் கொண்டு தண்ணீர் குடித்துவிட்டு படித்து விடுங்கள். எல்லாருக்கும் எப்போதும் நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்