- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்பிடிக்காது என்று சொல்பவர்கள் கூட கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடும் அளவிற்கு கசப்பே இல்லாமல் செய்யக்கூடிய...

பிடிக்காது என்று சொல்பவர்கள் கூட கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடும் அளவிற்கு கசப்பே இல்லாமல் செய்யக்கூடிய பாகற்காய் பொரியல்

- Advertisement -

உடம்பிற்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை அதிகமாக சாப்பிடுபவர்கள் அரிதானவர்களே. அதிலும் பாவற்காய் போன்று கசப்பு நிறைந்த காய்கறி வகைகளை சாப்பிடுவது என்பது சற்று சாத்தியமில்லாத விஷயமாகவே பலருக்கும் இருக்கிறது. பாகற்காய் என்றாலே பலரும் பயந்து ஓடி விடுவார்கள். ஏனெனில் அதன் கசப்புத்தன்மை பலருக்கும் விருப்பமில்லாத ஒன்றாக இருக்கிறது. ஆனால் பாகற்காயில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. உடம்பில் இருக்கும் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றவும், இரத்தத்தில் இருக்கும் நச்சுதன்மை அழிக்கவும் பாகற்காய் பெரிதும் துணை புரிகிறது. இந்த பாகற்காயை அனைவரும் சாப்பிடும் வகையில் எப்படி கசப்பு தன்மை இல்லாமல் சுவையாக செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

brinjal-varuval1

தேவையான பொருட்கள்:
பாகற்காய் – கால் கிலோ, பெரிய வெங்காயம் – 1, பூண்டு – ஐந்து பல், கடுகு – அரை ஸ்பூன், உளுத்தம்பருப்பு – அரை ஸ்பூன், எண்ணெய் – 5 ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன், மிளகாய் தூள் – அரை ஸ்பூன், சாம்பார் பொடி – ஒரு ஸ்பூன், பொடித்த வெல்லம் – அரை ஸ்பூன், கறிவேப்பிலை ஒ– ரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
பாகற்காயை மிகவும் மெல்லியதாக பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி, அதில் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து, அதில் நறுக்கி வைத்துள்ள பாகற்காய்களையும் சேர்த்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பாகற்காயின் கசப்பு தன்மை பாதியாக குறைந்துவிடும்.

pavakai

பின்னர் வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, ஐந்து ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு பொடியாக நறுக்கி வைத்துள்ள பாகற்காயை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதன் பின் அடுப்பை சிம்மில் வைத்து தட்டு போட்டு மூடி பாகற்காய் சுருண்டு வரும் வரை அப்படியே வேகவிடவேண்டும். பிறகு சிறிது நேரம் கழித்து அடுப்பை திறந்து அரை ஸ்பூன் உப்பு சேர்த்து மறுபடியும் தட்டு போட்டு மூடி பாகற்காயை வேக விட வேண்டும்.

pavakai1

பின்னர் அரை ஸ்பூன் மஞ்சள் தூள்9 மிளகாய் தூள், அரை ஸ்பூன் சாம்பார் பொடி சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும். இவை அனைத்தும் பாகற்காயுடன் சேர்ந்து சுருண்டு வரும் வரை அடுப்பை சிம்மில் வைத்து வதக்கி கொண்டே இருக்க வேண்டும். பிறகு இறுதியாக அரை ஸ்பூன் பொடித்த வெல்லம் மற்றும் கொத்தமல்லி தழையை தூவி சிறிது நேரம் நன்றாக கலந்து விட்டு அடுப்பை அனைத்துவிட வேண்டும். அவ்வளவுதான் சுவையான பாகற்காய் பொரியல் தயாராகிவிட்டது. இப்படி ஒரு முறை செய்து சுவைத்துப் பாருங்கள். கசப்பு என்பதே தெரியாது.

சற்று முன்