- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்அட இதை செய்வது இவ்வளவு ஈஸியா? மதுரை ஸ்டைல் கார வடையை நினைத்த உடனே ஐந்தே...

அட இதை செய்வது இவ்வளவு ஈஸியா? மதுரை ஸ்டைல் கார வடையை நினைத்த உடனே ஐந்தே நிமிடத்தில் சட்டென செய்துவிடலாம்

- Advertisement -

திடீரென வீட்டில் இருக்கும் குழந்தைகள் வாய்க்கு ருசியாக ஏதாவது சாப்பிட வேண்டும் என்று கேட்பார்கள். முன்னதாகவே யோசித்து தேவையான பொருட்களை வாங்கி வைத்திருந்தால் அவர்கள் கேட்கும் நேரத்தில் சுவையான உணவு வகைகளை சமைத்துக் கொடுக்கலாம். ஆனால் நினைத்த உடனே ஏதேனும் சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு வீட்டில் உள்ள தோசை மாவை வைத்து சுவையான கார வடை செய்து கொடுக்கலாம். இது மதுரையில் அனைவரும் செய்ய கூடிய ஒரு உணவு வகையாகும். இதனை எப்படி வீட்டில் உள்ள பொருட்களை வைத்து செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

murukku4

தேவையான பொருட்கள்:
தோசை மாவு – ஒரு கப், அரிசி மாவு – 2 ஸ்பூன், சின்ன வெங்காயம் – 10, பச்சை மிளகாய் – 2, கார மிளகாய் தூள் – கால் ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், உப்பு – அரை ஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன், எண்ணெய் – 200 கிராம், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் சின்ன வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். அவ்வாறு பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கப் தோசை மாவில் இரண்டு ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து சற்று கெட்டியான பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

chinna-vengayam

பிறகு இவற்றுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் இவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும். பிறகு கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியையும் பொடியாக நறுக்கி சேர்க்கவேண்டும். இவற்றை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பின்னர் கால் ஸ்பூன் மஞ்சள் தூள், கால் ஸ்பூன் பெருங்காயத்தூள், கால் ஸ்பூன் மிளகாய்த் தூள் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

- Advertisement -

பிறகு அரை ஸ்பூன் உப்பு சேர்த்து இறுதியாக அனைத்தையும் ஒன்றாக கலந்து விட்ட பின்னர், மாவு தண்ணீர் பதத்தில் இருந்தது என்றால் இவற்றுடன் சிறிதளவு அரிசி மாவை சேர்த்துக் கொள்ளலாம். சிலருக்கு வடை என்றாலும் போண்டா என்றாலும் சற்று நிறமாக இருந்தால் பிடிக்கும். நிறம் வேண்டும் என்பவர்கள் கால் ஸ்பூன் கேசரிப் பவுடரையும் சேர்த்து கலந்து கொள்ளலாம்.

dosai

பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, இரண்டு கிராம் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் மாவை சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் போட்டு பொரிக்க வேண்டும். உருண்டைகள் அனைத்தும் நன்றாக சிவந்து வந்ததும் இவற்றை வேறு ஒரு தட்டிற்க்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.

idli-maavu-bonda1

இவ்வாறு மாவு முழுவதையும் சிறு சிறு வடையாக பொரித்து எடுக்க வேண்டும். இந்தக் கார வடையுடன் தேங்காய் சட்னி, புதினா சட்னி இவற்றில் எதை சேர்த்துக் கொடுத்தாலும் சாப்பிடுவதற்கு அவ்வளவு அருமையான சுவையில் இருக்கும். இதனை டீ போடும் நேரத்தை விடவும் குறைவான நேரத்தில் சட்டென செய்துவிட முடியும்.

சற்று முன்