- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilசாதம் வடித்த கஞ்சி இருந்தா போதும். மேக்கப் போடாமலேயே உங்களுடைய முகம் இயற்கையாகவே பளபளவென ஜொலிக்கும்.

சாதம் வடித்த கஞ்சி இருந்தா போதும். மேக்கப் போடாமலேயே உங்களுடைய முகம் இயற்கையாகவே பளபளவென ஜொலிக்கும்.

- Advertisement -

நிறையபேர் இப்போதெல்லாம் முகம் பார்ப்பதற்கு கண்ணாடி போல ஜொலிக்க வேண்டும் என்பதற்காக சில வகையான மேக்கப்பை செயற்கையாக போட்டு கொண்டு கேட்டால், முகத்தை கிளாஸி லுக் என்று சொல்லி கொள்கிறார்கள். செயற்கையாக நம்முடைய முகத்திற்கு அழகு சேர்க்க கூடிய பொருட்களின் மூலம் நிச்சயமாக எதிர்காலத்தில் பின்விளைவுகள் இருக்கும். இயற்கையான பொருட்களை வைத்து சருமத்தை அழகுபடுத்திக் கொள்வது நல்லது. அந்த வரிசையில் சாதத்தை வேக வைத்து, வடித்த கஞ்சியை வைத்து நம்முடைய முகத்திற்கு கிளாசி ஸ்கின் எப்படி கொண்டு வருவது என்பதைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். 13 வயதிற்கு மேல் இருக்கும் ஆண் பெண் இருபாலரும் இந்த கிரீமை பயன்படுத்தலாம்.

face2

கண்ணாடி போல நம்முடைய சருமம் ஜொலி ஜொலிக்க இந்த க்ரீமை நாம் தயார் செய்ய என்னென்ன பொருட்கள் தேவை என்பதை பார்த்துவிடுவோம். அரிசி வேக வைத்து வடித்த கஞ்சி தண்ணீர் – 1/4 கப், காய்ச்சாத பசும் பால் – 2 ஸ்பூன், ஆலுவேரா ஜெல் – 1 ஸ்பூன். பசும் பால் கிடைக்காத பட்சத்தில் பாக்கெட் பால் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அவ்வளவு தான்.

- Advertisement -

முதலில் டபுள் பாய்லிங் மெத்தடில் அரிசி கஞ்சியை சூடு செய்ய வேண்டும். அடுப்பில் ஒரு அகலமான பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் ஊற்றி, அந்த தண்ணீரை சூடு செய்து கொள்ள வேண்டும். ஒரு சிறிய கிண்ணத்தில் தயாராக எடுத்து வைத்திருக்கும் வடித்த கஞ்சி தண்ணீரை ஊற்றி, இந்த கிண்ணத்தை அப்படியே அந்த சுடு தண்ணீரில் வைத்து, இரண்டு நிமிடம் போல டபுள் பாயிலில் சூடு செய்ய வேண்டும்.

sadam

கஞ்சி கொஞ்சமாக கட்டியாக தொடங்கும். அந்த சமயத்தில் எடுத்து வைத்திருக்கும் பாலை இந்த கஞ்சியுடன் ஊற்றி, மீண்டும் லேசாக கலந்து விடுங்கள். இது கொஞ்சம் திக்காக மாறும். அந்த சமயத்தில் அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த கிண்ணத்தில் இருக்கும் பால் சேர்த்த அரிசி கஞ்சியை நன்றாக ஆற வைத்துவிடுங்கள். அதன் பின்பு, இந்த கஞ்சியுடன் கொஞ்சமாக அலோ வேரா ஜெல் சேர்த்து நன்றாக கலந்தால் இது நமக்கு கிரீமி பக்குவத்தில் கிடைக்கும். ரொம்பவும் கட்டியாக இருக்காது. கொஞ்சம் லிக்விட் ஆக, திக்காக தான் நமக்கு தேவை. இதை அப்படியே நம் முகம் முழுவதும் அப்ளை செய்து கொள்ள வேண்டும். (தயார் செய்த இந்த க்ரீமை ஃப்ரிட்ஜில் வைத்து மூன்று நாட்கள் வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.)

20 நிமிடங்கள் கழித்து லேசாக முகத்தை மேல் பக்கமாக வட்ட வடிவில் மசாஜ் செய்து குளிர்ந்த தண்ணீரில் கழுவி விட்டால் போதும். உங்களுடைய முகம் பார்ப்பதற்குப் பொலிவாக இருக்கும். ஒரே நாளில் செய்துவிட்டு முகம் கண்ணாடி போல ஜொலிக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். தொடர்ந்து செய்து வாருங்கள் வாரத்தில் 3 நாட்கள் செய்து வந்தாலும் சரி, ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வரும் பட்சத்தில் மூன்று மாதத்திற்குள் உங்களுடைய முகத்தில் நல்லதொரு மாற்றம் தெரியும் ட்ரை பண்ணி பாருங்க.

face2

சாதம் வடித்த கஞ்சியை டபுள் பாயிலிங் மெத்தடில் சூடு செய்ய வேண்டும். அதில் சிறிது பால் கலந்து சூடு செய்து, ஆற வைத்த பின்பு அலோவேரா ஜெல் சேர்த்து கலந்து முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். அவ்வளவு தான். வடித்த கஞ்சியை அடுப்பின் மேல் நேரடியாக வைத்து சூடு செய்ய கூடாது. உங்களுடைய முகத்திற்கு பால் அலர்ஜி என்றால் பாலை தவிர்த்துக் கொள்ளலாம்.

சற்று முன்