- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்சப்பாத்தி பூரியுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட என்ன செய்யலாம் என்று யோசனையாக இருக்கிறதா? அப்போ உடனே இந்த...

சப்பாத்தி பூரியுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட என்ன செய்யலாம் என்று யோசனையாக இருக்கிறதா? அப்போ உடனே இந்த பச்சைப் பட்டாணி கிரேவியை செய்து பாருங்கள்

- Advertisement -

சப்பாத்தி, பூரியுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட பெரும்பான்மையான வீடுகளில் உருளைக்கிழங்கு மசாலா தான் செய்யப்படும். ஆனால் இந்த உருளைக்கிழங்கு குழந்தைகளுக்கு மிகவும் நன்மை கொடுக்ககூடியது என்றாலும் வயதானவர்கள் இந்த உருளைக்கிழங்கை சாப்பிட வாய்வுத் தொல்லை ஏற்படும். சிலருக்கு அஜீரணக் கோளாறு ஏற்படும். எனவே இரவு நேரங்களில் சப்பாத்தி, பூரியுடன் தொட்டுக்கொள்ள உருளைக்கிழங்கு மசாலாவை தவிர்த்து விட்டு, இந்த சுவையான பச்சை பட்டாணி கிரேவியை தாபா ஸ்டைலில் செய்து பாருங்கள். வீட்டில் உள்ளவர்கள் இரண்டு சப்பாத்தி சாப்பிடுவதற்கு பதிலாக நான்கு சப்பாத்திகளாக சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு இதன் சுவை அவ்வளவு அருமையாக இருக்கும். இதனை எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

poori-potato-masala

தேவையான பொருட்கள்:
பச்சை பட்டாணி – கால் கிலோ, பெரிய வெங்காயம் – 4, தக்காளி – 3, பச்சை மிளகாய் – 4, இஞ்சி சிறிய துண்டு – 1, பூண்டு – 10 பல், முந்திரிபருப்பு – 10, தனி மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், எண்ணெய் – 4 ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், கரம் மசாலா தூள் – அரை ஸ்பூன், சோம்பு – ஒரு ஸ்பூன், பட்டை சிறிய துண்டு – 1, ஏலக்காய் – 2, கிராம்பு – 2, கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் 3 வெங்காயம் மற்றும் 3 தக்காளியை நான்கு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு பூண்டு மற்றும் இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பின்னர் பட்டாணியை தோலுரித்து தண்ணீரில் அலசி வைத்துக் கொள்ள வேண்டும்.

வெங்காயம்

பிறகு அடுப்பின் மீது ஒரு கடாயை வைத்து, ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, முந்திரி பருப்பு மற்றும் நறுக்கி வைத்த 3 வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, அதனை மிக்ஸியில் சேர்த்து பேஸ்ட் பதத்தில் அரைத்துக் கொள்ளவேண்டும். பிறகு அதே கடாயில் தக்காளியை வதக்கி மிக்ஸியில் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு மிக்ஸி ஜாரில் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு இவை மூன்றையும் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவேண்டும். பிறகு மீண்டும் கட்டயை அடுப்பின் மீது வைத்து, மூன்று ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

munthiri-paste

பிறகு ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி பொன்னிறமாக வதக்கவும், பின்னர் பச்சை பட்டாணியை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அடுத்ததாக அரைத்து வைத்துள்ள பச்சை மிளகாய் விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவேண்டும். பின்னர் இவற்றுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்கிய பின்னர், தக்காளி பேஸ்ட்டை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

இவை சிறிது நேரம் கொதித்தவுடன் உப்பு சேர்த்து, இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு கொதிக்க விடவேண்டும். பின்னர் அரைத்து வைத்துள்ள முந்திரி பேஸ்ட்டை இவற்றுடன் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு இறுதியாக அரை ஸ்பூன் கரம் மசாலாத்தூள், கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அனைத்துவிட வேண்டும். அவ்வளவுதான் சுவையான பச்சை பட்டாணி கிரேவி தயாராகிவிட்டது.

சற்று முன்