- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஒருவருடைய வீட்டில் அமானுஷ்ய சக்தி இருப்பதை உணர்ந்து விட்டால் உடனே இவற்றையெல்லாம் செய்திடுங்கள். உங்கள் இல்லம்...

ஒருவருடைய வீட்டில் அமானுஷ்ய சக்தி இருப்பதை உணர்ந்து விட்டால் உடனே இவற்றையெல்லாம் செய்திடுங்கள். உங்கள் இல்லம் சுத்தமாகிவிடும்

- Advertisement -

இந்த உலகத்தில் நன்மை, தீமைகள் என இரு வினைகள் இருக்கின்றன. அவ்வாறு கடவுள் என்ற ஒருவரை நாம் நம்பும் பொழுது அமானுஷ்யம் என்ற ஒன்றையும் நம்பித்தான் ஆகவேண்டும். ஒரு சிலரது வீடுகளில் சில அமானுஷ்யம் இருப்பதை உணர்வதாக சொல்வார்கள். சிலர் தங்களின் குணநலன்களை மறந்து சற்று வித்தியாசமாக நடந்து கொள்வார்கள் இவ்வாறானவர்களுக்கு ஏதாவது அமானுஷ்ய பாதிப்பு ஏற்பட்டிருக்கவும் வாய்ப்பிருக்கும். இதனை கழிப்பு தாண்டுதல் என்றும் சொல்வார்கள். அதாவது எவருக்காவது இது போன்ற அமானுஷ்ய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு செய்து வைத்த பரிகாரத்தை மற்றவர்கள் தாண்டி விட்டாலோ, மிதித்து விட்டாலோ அந்த எதிர்மறை ஆற்றல் இவர்களை பாதித்துவிடும். இவ்வாறான எதிர்மறை ஆற்றலில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

praying-god

வீட்டில் இருக்கும் பெரியவர்கள் எப்போதும் தங்களின் பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளையும் கண்காணித்துக் கொண்டே இருப்பார்கள். மதிய வேளையில் வெளியில் செல்லாதே. இரவு அதிக நேரம் கழித்து வீட்டிற்கு வராமல் நேரமாக வந்துவிட வேண்டும் என்றெல்லாம் அறிவுரை சொல்லிக் கொண்டிருப்பார்கள். இதற்கு காரணம் புரியாமல் அவற்றை பலரும் மதிப்பதில்லை.

- Advertisement -

ஏனென்றால் அமானுஷ்ய சக்திகளை அழிப்பதற்கான பரிகாரங்களை இதுபோன்ற நேரங்களில் மட்டும்தான்செய்ககின்றனர். ஏனென்றால் மதியம் 12 மணி நேரம், இரவு நேரம் பான்ற நேரங்களில் தான் ஆள் நடமாட்டம் என்பது சற்று குறைவாக இருக்கும். மற்றவர்களை இந்த சக்திகள் பாதிக்காமல் இருப்பதற்காக இதுபோன்ற நேரங்களில் இந்த பரிகாரங்களை செய்கின்றனர்.

karma

எப்பொழுதும் இயல்பாக இருக்கும் ஒருவர் இது போன்ற அமானுஷ்ய சக்திகளால் பாதிக்கப்பட்ட பின்னர் தங்கள் நடவடிக்கையில் அவர்களுக்கே தெரியாமல் மாற்றம் ஏற்படும். சரியாக சாப்பிட மாட்டார்கள், உறங்க மாட்டார்கள், உடல்நிலை கோளாறு ஏற்படும், முடி கொட்ட ஆரம்பிக்கும், எப்போதும் சோர்வாகவே இருப்பார்கள், அவர்களே நினைத்தாலும் அவர்களால் இயல்பாக இருக்க முடியாது.

- Advertisement -

இது போன்ற பிரச்சனை இருப்பது தெரிந்து விட்டால் முதலில் தினமும் வீட்டில் மாலை வேளையில் தவறாமல் சாம்பிராணி புகை போட வேண்டும். அடுத்ததாக ஒரு கருப்பு நிறத் துணியில் சிறிதளவு எள், சிறிதளவு கடுகு, சிறிதளவு கல்லுப்பு இவை மூன்றையும் ஒரு மூட்டையாக கட்டி அவர்கள் உறங்கும் தலையணைக்கு அடியில் வைத்து விட வேண்டும். பிறகு மறுநாள் இந்த மூட்டையை எரித்துவிட வேண்டும். இதனையும் தொடர்ந்து செய்து வர வேண்டும்.

dhoopam

பின்னர் கருவெத்தலையை நன்றாக கசக்கி அதனுடன் எருக்கம் பூவின் பாலை பிழிந்து சேர்த்து, இரண்டையும் ஒன்றாக கலந்து, அதனை ஒரு துணியில் கட்டி பாதிக்கப்பட்டவர்களின் வயிற்றில் கட்டி விடவேண்டும். அப்படி முடியாவிட்டால் அவர்கள் உறங்கும் படுக்கையில் வைத்து விட வேண்டும். இவற்றை செய்வதன் மூலமே இவர்களின் பாதிப்பு மெல்ல மெல்ல குறைய ஆரம்பிக்கும்.

river

ஒரு இருபது நாள் தொடர்ந்து இவற்றை செய்யும் பொழுதே நல்ல மாறுதல் உண்டாகும். இதனை 48 நாள் தொடர்ந்து செய்ய வேண்டும். நாற்பத்தி எட்டு நாட்களுக்கு பிறகு இறுதி நாளன்று மூன்று எல்லைகளில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து, அவற்றை பாதிக்கப்பட்டவர்கள் குளிக்கும் தண்ணீரில் கலந்து விட்டு, தலைக்கு குளிக்க வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அவர்களுக்கு இருக்கும் எதிர்மறை சக்தி அழிந்து அவர்கள் முழுவதுமாக குணமடைந்து விடுவார்கள்.

சற்று முன்