- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்பூரியுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட இந்த சுவையான வெங்காய மசாலாவை இப்படி செய்து பாருங்கள். இனிமேல் எப்போதும்...

பூரியுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட இந்த சுவையான வெங்காய மசாலாவை இப்படி செய்து பாருங்கள். இனிமேல் எப்போதும் பூரியுடன் தொட்டுக்கொள்ள இதனை மட்டும்தான் செய்வீர்கள்

- Advertisement -

பூரி என்றாலே ஓட்டல்களிலும் சரி, வீட்டிலும் சரி அதற்க்கு தொட்டு கொள்ள உருளைக்கிழங்கு மசாலாவை தான் செய்கிறோம். ஆனால் ஒரு சிலருக்கு உருளைக்கிழங்கு செரிமான பிரச்சனையும், வாய்வு பிரச்சனையையும் கொடுக்கிறது. எனவே பூரிக்கு வேறு எதை செய்தாலும் அதன் சுவை இதற்கு ஏற்றதாக இருப்பதில்லை. ஆனால் உருளைக்கிழங்கு சேர்க்காமல் பூரியுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட இந்த சுவையான வெங்காய மசாலாவை ஒரு முறை செய்து சுவைத்துப் பாருங்கள். எப்போதும் சாப்பிடும் உருளைக்கிழங்கு மசாலா போன்று அதே மாதிரியான சுவையில் அப்படியே இருக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் – 4, பச்சை மிளகாய் – 3, தக்காளி – 1, மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், தனி மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 3 ஸ்பூன், பூண்டு – 4 பல், இஞ்சி சிறிய துண்டு – 1, கடுகு – அரை ஸ்பூன், சோம்பு – அரை ஸ்பூன், கடலைப்பருப்பு – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், பொட்டுக்கடலை மாவு – ஒரு ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ள வேண்டும். அதேபோல் இஞ்சி மற்றும் பூண்டை மிகவும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் சோம்பு, கடுகு மற்றும் கடலைப் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.

பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் அதனுடன் கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். பிறகு இவற்றுடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். இவற்றின் பச்சை வாசனை போனதும் தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

- Advertisement -

பின்னர் உப்பு மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். பின்னர் இவற்றுடன் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி தட்டு போட்டு மூடி 5 லிருந்து 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். பிறகு ஒரு ஸ்பூன் பொட்டுக்கடலை மாவை தண்ணீரில் கரைத்து கொண்டு மசாலாவுடன் சேர்த்து கிளறி விட வேண்டும்.

பொட்டுக்கடலை மாவு சேர்த்து ஒரு ஐந்து நிமிடம் நன்றாக கொதித்ததும், இவற்றுடன் ஒரு கொத்து கொத்தமல்லி தழை சேர்த்து, ஒரு முறை கலந்து விட்டு அடுப்பை அனைத்துவிட வேண்டும். அவ்வளவுதான் சுவையான வெங்காய மசாலா தயாராகிவிட்டது. இதனை பூரியுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட்டு பாருங்கள். மிகவும் அற்புதமான சுவையில் இருக்கும். வீட்டில் உள்ள அனைவரும் விருப்பமாக சாப்பிட்டு மகிழ்வார்கள்.

சற்று முன்