தோசை மாவு இல்லாத சமயத்தில், தோசை செய்ய முடியவில்லை என்ற கஷ்டமே வேண்டாம். உங்கள் வீட்டில் பொறி இருக்கா. அது போதும். அந்த பொறியை வைத்து அருமையான ஒரு தோசையை மாவை உடனடியாக எப்படி தயார் செய்வது என்பதைப்பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். எப்போதும் போல ஒரே ருசியில் பலகாரங்கள் செய்து சாப்பிடாமல், இப்படி கொஞ்சம் வித்தியாசமான முறையில் ட்ரை பண்ணித்தான் பார்ப்போமே.
3 கப் அளவு பொரி, 1 கப் அளவு ரவை இரண்டு பொருட்களையும் முதலில் அளந்து எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் இருக்கும் ஆழாக்கில் அளந்து எடுத்துக்கொண்டாலே சரியானதாக இருக்கும்.
பொறியை தனியான ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். பொறி மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். ரவையை தனியாக ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். ரவை மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி விடுங்கள். இந்த இரண்டு பொருட்களும் 15 நிமிடங்கள் தண்ணீரில் நன்றாக ஊறட்டும்.
பொறி ஊறியதும், பொறியியல் இருக்கும் தண்ணீரை நன்றாகப் பிழிந்து எடுத்துவிட்டு, மிக்ஸியில் போட்டுக் கொள்ள வேண்டும். ஊறிய ரவையையும் மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும். மாவு நைஸாக அறைந்து நமக்கு கிடைத்துவிடும். இதை தனியாக ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளுங்கள்.
இந்த மாவை சரியான அளவு தோசை மாவு பக்குவத்தில் கரைத்துக் கொள்ளவேண்டும். ரொம்பவும் கட்டியாக இருந்தால் கொஞ்சம் தண்ணீர் ஊற்றிக் கரைத்து கொள்ளுங்கள். அதன் பின்பு தேவையான அளவு உப்பு, 1 ஸ்பூன் சர்க்கரை, 3 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு இந்த எல்லாப் பொருட்களையும் போட்டு, மாவை நன்றாகக் கரைத்து ஒரு மூடி போட்டு 1/2 மணி நேரம் அப்படியே விட்டு விடுங்கள். (உங்களுக்கு சர்க்கரை சேர்க்க விருப்பம் இல்லை என்றால் ஆப்ப சோடா மாவு சேர்த்துக் கொள்ளலாம்.)
அதன்பின்பு எப்போதும் போல தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, வைத்து தோசை மாவை கடாயில் வார்க்க வேண்டியதுதான். இட்லி மாவு, தோசை போல ரொம்பவும் மெல்லிசாக இந்த தோசை நமக்கு கிடைக்காது. ஓரளவுக்கு மெல்லிசாக தோசை வார்த்து, தேவையான அளவு நெய் அல்லது எண்ணெய் ஊற்றி சிவக்க விட்டு பரிமாறி பாருங்கள். வித்தியாசமான சுவையில் வித்தியாசமான தோசை தயார்.