- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகண் திருஷ்டியால் உடம்பு முழுவதும் அடித்துப் போட்ட மாதிரி வலி ஏற்படுகிறதா? கண் திருஷ்டியை முழுமையாக...

கண் திருஷ்டியால் உடம்பு முழுவதும் அடித்துப் போட்ட மாதிரி வலி ஏற்படுகிறதா? கண் திருஷ்டியை முழுமையாக நீக்கி உடலை சுறுசுறுப்பாக்க ஒரு கைப்பிடி வென்கடுகு இருந்தால் போதும்.

- Advertisement -

சில பேருக்குப் அழகாக அலங்காரம் செய்து கொண்டு திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு சென்றுவிட்டு வந்தால் உடலில் அப்படி ஒரு அசதி இருக்கும். யாரோ அடித்துப்போட்டது போல கை கால் மூட்டுவலி வரும். சில பேருக்கு தலை பாரம் காய்ச்சல் கூட வந்துவிடும். காரணம் பல பேருடைய கண் பார்வை அவர்கள் மீது விழுந்தது தான். இது ஒரு பக்கம் இருக்க, ஆடம்பரமாக மகிழ்ச்சியாக கொண்டாட்டத்துடன் ஏதாவது ஒரு விசேஷம் நம் வீட்டில் வைத்து இருப்போம். அந்த விசேஷம் முடிந்தவுடன் நம் வீட்டில் இருப்பவர்கள் அனைவருக்கும் உடல் சோர்வு ஏற்பட்டு விடும். இதற்கு காரணமும் அடுத்தவர்களுடைய கண்பார்வையும் கண் திருஷ்டியும் தான்.

இப்படிப்பட்ட பிரச்சினைகளில் இருந்து உடனடியாக தப்பிக்க நம்முடைய உடல் சோர்வை நீக்க நம் உடலில் இருக்கக்கூடிய கண்திருஷ்டியை விரட்டி அடிக்க ஒரு சுலபமான பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். திருஷ்டி கழிப்பதற்கு நிறைய பேர் கல் உப்பை பயன்படுத்துவார்கள்.

- Advertisement -

அதில் எந்த ஒரு தவறும் கிடையாது. கல்லுப்பு சுற்றிப் போட்டு திருஷ்டி கழிப்பது மிக மிக நல்லது தான். ஆனால் சில பேருக்கு உப்பு சுற்றி போட்டாலும் திருஷ்டியால் ஏற்பட்ட பாதிப்பு நீங்காமல் அப்படியே இருக்கும். தீராத கடுமையான திருஷ்டியை போக்க வெண்கடுகை பயன்படுத்திப்பாருங்கள். வெண்கடுகை உங்களுடைய வீட்டில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கைப்பிடி அளவு வெண்கடுகை உங்களுடைய கையில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த வெண்கடுகை இடது பக்கம் 4 முறை, வலது பக்கம் 4 முறை, ஏற்ற இறக்கமாக 4 முறை இப்படியாக சுற்றி எரிகின்ற நெருப்பில் போட்டு விட வேண்டும்.

உங்களுக்கு நீங்களே இந்த முறையில் திருஷ்டி கழித்து கொண்டாலும் சரி, அல்லது உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு இந்த முறைப்படி திருஷ்டியை கழித்தாலும்  சரி, உடல் அசதி, உடல் சோர்வு கண் திருஷ்டியால் ஏற்பட்ட பாதிப்புகள் அனைத்தும் நெருப்போடு நெருப்பாக பொசுங்கி விடும்.

- Advertisement -

கண் திருஷ்டி நம்மோல் விழுந்த பின்பு பரிகாரத்தை செய்து கொள்வதை விட, அந்த கண்திருஷ்டி நம்மை தாக்காமல் இருப்பதற்கு பரிகாரத்தை செய்து கொள்ளலாமே. அது எப்படி என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா. அதுவும் இந்த வெண்கடுகை வைத்தே நமக்கு சொல்லப்பட்டுள்ளது.

ஒரு வெள்ளி தாயத்தை  வாங்கிக்கொள்ளுங்கள். அந்த வெள்ளி தாயத்துக்கு உள்ளே முதலில் அரகஜா போட்டுவிட்டு, அதன்பின்பு கொஞ்சமாக வெண்கடுகை தாயத்திற்க்கு உள்ளே போட்டு மூடிவிடுங்கள். இந்த தாயத்தை சிவப்பு கயிறு அல்லது கருப்பு கயிற்றில் கட்டி கழுத்தில் கட்டிக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் இடுப்பில், கையில் கூட கட்டிக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம்.

எந்த ஒரு பரிகாரத்தை செய்தாலும் குல தெய்வத்தை வேண்டிக்கொண்டு பூஜை அறையில் செய்ய வேண்டும். அதே போல இந்த தாயத்தை பூஜை அறையில் வைத்து குல தெய்வத்தை வேண்டிக்கொண்டு, எடுத்து கட்டிக் கொள்ளுங்கள். குலதெய்வத்தின் பெயரை மூன்று முறை சொல்லிக்கொண்டே தாயத்தை கட்டிக்கொள்ள வேண்டும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இப்படி வெள்ளி தாயத்தில் வெண்கடுகை சேர்த்து உடம்போடு போட்டுக் கொண்டால், எந்த ஒரு துற் சக்தியும், கண் திருஷ்டியும், எதிர்மறை ஆற்றலும் நம்மை தாக்காமல் இருக்கும். நம்மை சுற்றி ஒரு பாதுகாப்பு வளையம் இருக்கும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தாயகத்திற்கு உள்ளே இருக்கும் பழைய வெண்கடுகை எடுத்து விட்டு, மீண்டும் புதிய வெண் கடுகை போட்டு அதே தாயத்தை கட்டிக் கொள்ளலாம். இது மிக மிக சுலபமான முறையில் நமக்கு சொல்லப்பட்டிருக்கும் ஒரு பரிகார முறை. நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து நல்ல பலனை அடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்